Jun 12, 2013

சனி (கோள்)Saturn 2


Saturn
Saturn (planet) large.jpg பட விளக்கத்துக்கு படிம்த்தை சொடுக்கவும்.
சுற்றுப்பாதை சிறப்பியல்புகள்
சராசரிஆரம் 1,426,725,400 கி.மீ
வட்டவிலகல் 0.05415060
சுற்றுக்காலம் 29y 167d 6.7h
பூமியைச்சார்ந்த சுற்றுக்காலம்
(Synodic Period)
378.1 days
சராசரி சுற்றியக்க வேகம் 9.6724 km/s
சுற்றுப்பாதையின் சாய்வு 2.48446°
துணைக்கோள்களின் எண்ணிக்கை 61
புறநிலை சிறப்பியல்புகள்
நடுவரைக்கோட்டு விட்டம் 120,536 km
புறமேற் பரப்பளவு 4.38×1010 km2
நிறை 5.688×1026 kg
சராசரிஅடர்த்தி 0.69 g/cm3
மேற்பரப்புஈர்ப்பு 8.96 m/s2
சுழற்சிக் காலம் நடுவரைக்கோட்டு 10h 13m 59s
சுழற்சிக் காலம்
internal
10h 39m 25s
அச்சின் சாய்வு 26.73°
எதிரொளிப்பு திறன் 0.47
விடுபடு வேகம் 35.49 km/s
சராசரி மேல்மேகவெப்பநிலை 93K
மேற்பரப்புவெப்பநிலை
min mean max
82K 143K N/A K
வளிமண்டல சிறப்பியல்புகள்
வளிமண்டல அழுத்தம் 140 kPa
ஹைட்ரசன் >93%
ஹீலியம் >5%
மீத்தேன் 0.2%
நீர் ஆவி 0.1%
அம்மோனியா 0.01%
ஈத்தேன் 0.0005%
ஃபாஸ்ஃபேன் 0.0001%
சனி (Saturn) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஆறாவதாக அமைந்துள்ள ஒரு கோள். சூரியக்குடும்பத்தில் இது இரண்டாவது பெரிய கோளாகும்.வளி அரக்கக்கோள்கள் நான்கில் சனியும் ஒன்றாகும்.
சனிக்கோள் ஐதரசன் வளிமத்தால் முதன்மையாகவும் ஈலியம் மற்றும் ஒருசில தனிமங்களால் சிறிய அளவிலும் நிரப்பப்பட்டுள்ளது. இது பாறை மற்றும் பனிக்கட்டியாலான சிறிய உள்ளகமும் (core) அதைச் சுற்றி தடிமனான உலோக (மாழை) ஐதரசன் அடுக்கும் அதன் மேலாக வளிம அடுக்கும் கொண்டது. சனியில் காற்றின் வேகம் வியாழனை விடவும் அதிகம், அதாவது 1800 கிமீ/மணி வரையிலும் இருக்கக்கூடும்.
சனிக்கோளின் சிறப்பான வளையங்கள், பெரும்பான்மையாக பனித்துகள்களாலும் பாறைத்துகள்கள் மற்றும் தூசிகளாலும் ஆனவை. சனியின் நன்கறிந்த நிலவுகள் மொத்தம் 61. இதைத்தவிர, சுமார் 200 நிலவுக்குட்டிகள் (moonlets) சனிக்கு உள்ளன. சனிக்கோளின் மிகப்பெரிய நிலவான டைட்டன் (Titan), புதன் கோளை விடவும் பெரியது. சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய நிலவான வியாழனின் நிலவான கானிமீடுக்கு அடுத்தது இந்த டைட்டன்.சனியின் மையப்பகுதியில் இரும்பு, நிக்கல் மற்றும சிலிகனும் ஆக்சிஜனும் கலந்த பாறை இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனைச் சுற்றி உலோக ஹைடிரஜன் உள்ளது. சனிக்கோளின் மேலுள்ள வாயு பகுதிக்கும் பாறைக்கும் இடையில் திரவ ஹைடிரஜனும், திரவ ஹீலியமும்தான். சனிக்கோளின் உள்ளே இருக்கும் உலோக ஹைடிரஜன்தான் மின்னேற்றத்தை உற்பத்தி செய்து சனிக்கோளின் காந்தப் புலத்தை உருவாக்குகிறது.

பொருளடக்கம்

சனியின் வளையங்கள்

கிரக வளையங்கள் கொண்ட சனி நம் சூரிய குடும்பத்தில் ஒரு குறிப்பிடத்தக்க கிரகமாக
விளங்குகிறது . இவ்வளையங்கள் சனியின் பூமத்திய ரேகைக்கு மேல் சுமார் 6630 கி.மீ.இலிருந்து 120700 கி.மீ வரை நீண்டிருக்கிறது , அதன் சராசரி தடிமன் 20 மீட்டர் , மற்றும் தோலின் மாசுக்கள் கொண்ட 93 சதவிகிதம் நீர்-பனி உள்ளது . மீதமுள்ள 7சதவிகிதம் பளிங்குருவில்காபன் உள்ளது . வளையங்களில் சிறு புள்ளியிலிருந்து ஒரு வாகனத்தின் அளவு கொண்ட துணிக்கைகள் உள்ளன.சனியின் வளையங்களின் உருவாக்கம் குறித்து இருவேறு கோட்பாடுகள் உள்ளன . சனியின் அழிந்த நிலவின் எஞ்சிய பாகங்களே இவ்வளையங்கள் என்பது ஒரு கோட்பாடு . சனி உருவாகிய வான்புகையுருவின் எஞ்சிய பொருட்களே இவ்வளையங்கள் என்கிறது இன்னொரு கோட்பாடு.

அக்டோபர் 6, 2009 அன்று சனியின் பூமத்திய தட்டிலிருந்து 27 கோணலாக , போஎபெயின் வட்டப்பாதையில் ஒரு வெளி வட்டு வளையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

துணைக்கோள்கள்

சனியைச் சுற்றி அறுபத்தி ஒன்று நிலவுகள் சுழல்கின்றன. இதில் தொண்ணூறு விழுக்காட்டை (இடை அளவில்) மிக பெரிய நிலவான டைட்டன் பங்களிக்கிறது. சனியின் இரண்டாவது பெரிய நிலவு ரியாவுக்கு சுற்றுவலயம் இருக்கிறது. மற்ற நிலவுகள் மிகவும் சிறியவை: 10 கிமீ விட்டத்தின் கீழ் முப்பத்து நான்கு நிலவுகள் மற்றும் 50 கிமீ விட்டத்தின் கீழ் பதினான்கு நிலவுகளும் இருக்கின்றன. சம்பிரதாயமாக, அனைத்து சனியின் நிலவுகளுக்கும் கிரேக்கக் கடவுள்களான டைடன்களின் பெயர்களே சூட்டப்படுகின்றன.

சனியில் தண்ணீர்

சனி கிரகத்தில் தண்ணீர் உள்ளதா என விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வு கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜேர்மனியைச் சேர்ந்த வானியல் விஞ்ஞானிகள் பால் ஹார்டாக் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சனி கிரகத்தில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்தனர். சனி கிரகத்தை சுற்றி பல சந்திரன்கள் உள்ளன. அவற்றில் அக்கிரகத்தின் மேல் பகுதியில் ஆறாவது மிகப்பெரிய சந்திரன் உள்ளது. அது முழுவதும் ஐஸ் கட்டினால் மூடப்பட்டுள்ளது. இதனால் சனிகிரகத்தில் மழை பெய்து அதன் மூலம் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. மேலும் அங்கு ஆவி நிலையில் தண்ணீர் இருப்பதும் தெரியவந்துள்ளது. இவை சனி கிரகத்தை சுற்றி வட்டவடிவில் உள்ளது. இது அந்த கிரகத்தின் சுற்றளவை விட 10 மடங்கு பெரியதாக உள்ளது. இதனால் இங்கு தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சனி பற்றி ஆராய அனுப்பப்பட்ட விண்கலங்கள்

சனியின் வளிமண்டலம், அதன் வளையங்கள், துணைக்கோள்கள் பற்றி அறிய, அதனை நோக்கி நான்கு விண்கலங்கள் செலுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க நாசாவின் பயோனிர் 11 (Pioneer 11) என்ற விண்கலம்தான் முதன் முதலில் 1979ல் சனிக்கோளை ஆராய ஏவப்பட்டது. பின்னர் வாயேஜர் 1 (செப்டம்பர் 12, 1980) மற்றும் வாயேஜர் 2 (August 25, 1981) போன்ற விண்கலங்கள் அனுப்பப்பட்டன. கசினி (Cassini) விண்கலம 2004ல் செலுத்தப்பட்டது. இது இன்னும் சனியைச் சுற்றி வருகிறது. சனியின் இரவுப்பக்கம் கசினி சென்றபோது, வெளிச்சம்படாத சனியின் இந்தப் பகுதி நியான் விளக்கு போல மின்னியது. அதன் வளையங்கள் அழகான நிறங்களில் மினுங்குகின்றன.சூரிய ஒளி படாத இந்தப் பகுதியில் சனியின் உள் வெப்பமே இந்த ஒளியை உருவாக்குகிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...