Jul 15, 2013

தேங்காய் பால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்



ஏதாவது ஒரு ரூபத்தில் தேங்காய் இல்லாமல், எந்த ஒரு வீட்டையும் பார்க்க முடியாது. பெண்களின் சமையலறை ஆகட்டும் அல்லது அலங்கார பொருட்கள் ஆகட்டும் அல்லது மருந்து பெட்டி ஆகட்டும், இவை அனைத்திலும் ஏதாவது ஒரு ரூபத்தில் தேங்காய் இருந்து கொண்டு தான் இருக்கிறது. பெண்களுக்கு சமையலில் பயன்படுத்த அரைத்த தேங்காய் அல்லது தேங்காய் பால் பயன்படுகிறது. மேலும் தலைக்கு தேய்க்க எண்ணெய் வடிவமாகவும் பயன்படுகிறது. இத்தனை விஷயத்தில், இதனுடைய சேர்க்கை இருப்பதற்கு காரணம், இதன் மருத்துவ குணங்களே ஆகும். எந்த ஒரு வடிவத்தில் இதை பயன்படுத்தினாலும், அதற்கேற்ப பயன்கள் கண்டிப்பாக இருக்கும். சரி முதலில் நாம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயின் பயன்களை பார்க்கலாம்.

இத்தகைய தேங்காய் எண்ணெய் அருமையான நறுமணத்தை மட்டும் கொடுப்பது இல்லை. அதையும் மீறி தலை முடியை, மேகத்தினை போல் மென்மையாக வைக்கவும் உதவும். இதற்கு அதனுடைய ஈரப்பத குணாதிசயம் தான் முக்கியமான அம்சமாகும். இரசாயனத்தை பயன்படுத்தி முடியை நேராக்கியவர்கள் மற்றும் இயற்கை முடி உடையவர்களுக்கும் கூட, முடி நன்றாக வளரவும், உறுதியாக இருக்கவும் ஈரப்பதம் அவசியம் அல்லவா? அதற்கு உறுதுணையாக இருக்கிறது தேங்காய் எண்ணெய்.

தேங்காய் எண்ணெயை போலவே, தேங்காயில் இருந்து எடுக்கப்படும் பாலிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...