Jul 16, 2013

வெயிலிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க எளிய வழிகள் சில..


வெயிலிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க எளிய வழிகள் சில...


* சூரியனில் இருக்கும் யூ.வி. ரேஸ் முகத்தில் படுவதால் தான் தோல் பாதிக்கப்பட்டு கருமை நிறமாகிறது. இதைத் தடுக்க கடல்பாசி, சந்தன எண்ணெய், பன்னீர் மூன்றையும் சில துளிகள் கலந்து தடவினால் தோல் அழகு பெறும். ஜாதிக்காயும், சந்தன பவுடரும் கூடக் கலந்து போடலாம். அல்லது கசகசாவில் எலுமிச்சை சாறு கலந்து போடலாம்.
* பாலுடன் எலுமிச்சை சாறு கலந்து, அதனுடன் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து, முகத்தில் பூசவும். அரைமணி நேரம் கழித்து, வெந்நீரில் கழுவினால் முகம் பளபளக்கும்.
* கசகசாவை ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவவும். காய்ந்ததும் கழுவினால் முகத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கலாம்.
* பப்பாளிச் சாற்றை முகத்தில் தடவினால், வியர்குரு, கொப்பளங்கள் மறைந்து முகம் பளபளக்கும்.
* எல்லா வித பழங்களும் முகத்திற்கு நல்லது. அவற்றை மசித்து முகத்தில் பூசினால் முகம் உடனுக்குடன் சுத்தமடைந்து பளபளப்பாய் காட்சி தரும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...