Jul 6, 2013

மெக்ஸிக்கோ போப்போகடேபெடில் எரிமலை சீற்றம்:அமெரிக்க விமான சேவைகளுக்கு பாதிப்பு


மெக்ஸிக்கோவில் தலைநகர் மெக்ஸிக்கோ சிட்டியில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 50 மைல் தொலைவில் அமைந்துள்ள புகழ் பெற்ற எரிமலையான போப்போகடெபெடில் எரிமலை கடந்த இரு நாட்களாக கடும் சீற்றத்துடன் காணப் படுகின்றது.
17 886 அடி உயரமான இந்த எரிமலை தற்போது புகை மண்டலத்தையும் லாவா இனையும் கக்கி வருகின்றது.

இப்பகுதியில் 7 மைல் சுற்றளவுக்கு மெக்ஸிக்கோ அதிகாரிகள் பாதுகாப்பு வளையமாகப் பிரகடனம் செய்துள்ளனர். இங்கு நில அதிர்வும் பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில் மெக்ஸிக்கோ சிட்டி விமானநிலையத்தில் இருந்து புறப்படும் அமெரிக்காவின் 6 பிரதான விமான நிறுவனங்கள் முன்னெச்சரிக்கையாக 40 இற்கும் அதிகமான விமான சேவைகளை நிறுத்தியுள்ளன. இதற்குக் காரணமாக அப்பகுதியில் எரிமலைச் சீற்றத்தால் வெளியாகியுள்ள கடும் புகையும், தூசி துணிக்கைகளும் விமானங்கள் பயணிக்கும் பாதையில் குறுக்கிட்டால் அது சேதத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் ஆகும்.

ரத்து செய்யப் பட்ட விமானங்களுக்கான சேவை நிறுவனங்களில் டெல்டா, அமெரிக்கன் ஏர்லைன்ஸ், அலாஸ்கா ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் என்பவை முக்கியமானவை ஆகும். இதேவேளை மெக்ஸிக்கன் ஏர்லைன்ஸ் ஐச் சேர்ந்த விமானங்கள் எதுவும் ரத்து செய்யப் படவில்லை எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடைசியாக இந்த எரிமலை 2000 ஆம் ஆண்டில் பாரிய அளவில் வெடித்துச் சிதறியிருந்ததாகக் கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...