Jul 7, 2013

கம்ப்யூட்டர் மவுஸ் கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி மரணம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperவாஷிங்டன்:கம்ப்யூட்டர் மவுசை கண்டுபிடித்த விஞ்ஞானி காலமானார். அவருக்கு வயது 88.அமெரிக்காவின் ஓரிகான் மாநிலம் போர்ட்லேண்ட் நகரில் ரேடியோ பழுது பார்க்கும் தொழிலாளியின் மகனாக 1925ம் ஆண்டு பிறந்தவர் டக்ளஸ் எங்கல்பர்ட். இரண்டாம் உலக போர் நடந்த கால கட்டங்களில் அமெரிக்க கடற்படையின் ரேடார் டெக்னீஷியனாக பணியாற்றிய டக்ளஸ், கடந்த 1957ம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்போர்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தார். அந்த கால கட்டத்தில் ஒரு அறையையே அடைத்து கொள்ளும் அளவிலான கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

கடந்த 1963ம் ஆண்டு கம்ப்யூட்டரை மக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில், சக இன்ஜினியர் பில்லுடன் சேர்ந்து மவுசை கண்டுபிடித்தார் டக்ளஸ். மரத்தில் செய்யப்பட்டு 2 உலோக வீல்கள், 3 பட்டன்களுடன் கூடிய மவுஸ் உருவாக்கப்பட்டது. 1968ம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோவில் நடந்த பிரமாண்ட கம்ப்யூட்டர் மாநாட்டில் மவுசை அறிமுகப்படுத்தி அதன் பயன்பாட்டை விளக்கினார். ஆனால், 1970ம் ஆண்டுதான் இதற்கு அவரால் காப்புரிமை பெற முடிந்தது. 1980களில் சிறிய மானிட்டருடன் கூடிய கம்ப்யூட்டர்கள் பயன்பாட்டுக்கு வந்த பிறகுதான் மவுசின் பயன்பாடும் அதிகரிக்க தொடங்கியது.

கலிபோர்னியாவில் உள்ள ஆதர்டன் நகரில் மனைவி கரன் லியாரி மற்றும் 4 பிள்ளைகளோடு வசித்த டக்ளஸ், மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...