Jul 29, 2013

காலை உணவை தவிர்த்தால் உடல் பருமன், உயர்ரத்த அழுத்தம் வருமாம்! - விஞ்ஞானிகள் எச்சரிக்கை

News Serviceமனிதர்கள் உணவு பழக்கத்தால் ஏற்படும் நன்மை � தீமை பற்றி சமீபத்தில் ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அப்போது உலகம் முழுவதும் பெரும்பாலானவர்கள் காலை உணவு சாப்பிடுவதில்லை என்று தெரிய வந்தது. மது அருந்துபவர்கள், புகை பிடிப்பவர்கள், அதிக நேரம் உழைப்பவர்கள், திருமணம் ஆகாதவர்கள், போதிய உடற்பயிற்சி செய்யாதவர்கள்தான் காலை உணவை சாப்பிடாமல் உள்ளனர் என்றும் தெரிந்தது. காலை உணவை சாப்பிடாதவர்களுக்கு மற்றவர்களை விட திடீர் மாரடைப்பு ஏற்பட 27 சதவீதம் கூடுதல் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்துக் கணிப்பு மற்றும் மருத்துவ ஆய்வை ஒப்பிட்டு எச்சரித்துள்ளனர்.
   அது போல இரவு நேர உணவை 10 மணிக்கு பிறகே சாப்பிடும் பழக்கம் பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. இது இதய நோய்களை கொண்டு வந்து விடும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் இரவு சாப்பாட்டை முடித்து விட வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். காலை உணவை தவிர்த்தால் உடல் பருமன், உயர்ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு ஆபத்து ஆகிய பிரச்சினைகளும் வர வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...