Aug 28, 2013

ரஜினியின் எந்திரன் படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய தவறுகள், உங்களுக்காக!

ரஜினியின் எந்திரன் படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய தவறுகள், உங்களுக்காக!

August 27, 2013
ENTHIRAN-1வணக்கம் வாசகர்களே தமிழ் இணையம் ஆனது தமிழ் சினிமாவுக்கு சில சவால்களை சந்திக்க வைக்கவும் இனி தமிழ் சினிமாவில் உருவாகும் முறையில் அதிக கவனம் செலுத்த வைக்கும் முகமாக, தமிழ் படங்களில் விடப்படும் முக்கிய தவறுகளை வெளிச்சம் போட்டு காட்ட முற்பட்டுள்ளோம்.
வெறும் குறை கூறும் செயலாக இல்லாமல் பல கோடிகள் பல உதவி இயக்குனர்கள் என மக்கள் பணத்தை வாரி இறைப்பதற்கு, அதை நம்பும் படியாக காட்சிகள் அமைத்து மக்களை ஏமாற்றாமல் நல்ல காட்சியமைப்புடன் கூடிய திரைப்படங்களை வழங்குவது ஒவ்வொரு இயக்குனருடைய பொறுப்பு. இன்று தமிழ் திரையுலகம் என்பது மக்களுடன் இரண்டர கலந்த ஒன்றாக மாறிவிட்ட நிலையில் அதில் மக்களை ஏமாற்றி வித்தை காட்டாமல் மிகச்சரியான முறையில் படங்களை பிழைகள் அல்லாமல் இனியாவது உருவாக்குங்கள், இது போல் தவறுகளை தொடர்ந்தும் பல படங்களில் சுட்டிக்காட்ட உள்ளது தமிழ் இணையம்.
அந்த வகையில் முதலாவது படமாக எந்திரன் திரைப்படத்தில் உள்ள தவறுகளை பார்ப்போம், இவைகள் மேலோட்டமாக நோட்டம் விட்ட போது கண்டுபிடிக்கப்பட்ட தவறுகள், இன்னும் ஆழமாக தோண்டியிருந்தால் பல நூறு பிழைகள் கிடைத்திருக்கும். சினிமா பாணியில் continuity  என்பார்கள் அதை குறைகள்தான் இது மற்றபடி ரீல் ரியல் எல்லாம் இல்லை ரீலோ ரியலோ continuity  முக்கியம்…
1. முதல் படத்தில் எந்திரன் கழுத்துப் பகுதியில் காணப்படும் கம்பி இரண்டாவது காட்சியில் வரும் படத்தில் இல்லை!
ENTHIRAN-1-1
2. சிட்டி டிவியை போடு என ரஜினியின் தாயார் கூற சிட்டி டிவியை போட்டு உடைக்கும் காட்சி ஆனால் டிவியை தூக்கும் போது எலக்ரிக் சத்தம் மட்டும் வரும் ஆனால் அந்த டிவி எந்த பிளக்குடனும் இணைந்திருக்கவில்லை, இந்த டிவியில் வயர் கனெக்சன் கொடுப்பதற்கும் எந்த இடமும் பின்பக்கம் இல்லை மொத்தத்தில் இது டிவியே இல்லை.
ENTHIRAN-2-NO WIRE CONNECTION TV
3. ரஜினி வேலை செய்யும் கம்பியூட்டரில் சாதாரண கம்பியூட்டரில் உள்ள மென்பொருட்களை தவிர அசாராதண விஞ்ஞானிக்கும் இயந்திரத்திற்கும் தேவையான எந்த புதிய மென்பொருட்களும் இல்லாத ஆப்பில் கம்பியூட்டர். ஆனால் இதில்த்தான் ரோபோவுக்கு புரோக்கிராம் செய்வார் ரஜினி
ENTHIRAN-3-NO EDIT ICON
4. சிட்டி முதல் முதலில் கார் ஓட்டும் போது இடம்பெரும் விபத்தில் கார் மோதுவதற்கு முன்பாகவே கார் உடைந்து காணப்படுகின்றது. அடுத்த படத்தில்  தொடர்ச்சியாக வரும் காட்சியில் கார் புதிதாக வருகின்றது. காரின் வீலும் வேறு மாற்றப்பட்டுள்ளது.ENTHIRAN-4-CAR ACCIDENT
ENTHIRAN-6-car not crash
5. தனது லாப்பில் டீ, பிஸ்கட் கொடுக்கும் வேலைகளுக்கு பயன்படுத்தும் சிறு ரோபோக்களையும் தேசிய அளவில் நடக்கும் சிட்டியை பரிசோதிக்கும் மேடையில் சம்மந்தமே இல்லாமல் நிறுத்தி வைத்திருப்பதும், அடுத்த காட்சியில் ஜஸ்வர்யா வெளியில் வருவதற்குள் மிக மெதுவாக நடக்கும் சிறு ரோபோக்கள் இரண்டும் அதி வேகமாக வெளியில் வந்ததுடன், வந்திருப்பவர்களுக்கு பிஸ்கட் கொடுக்கும் காட்சி!
ENTHIRAN-7-unwanted robert standing
ENTHIRAN-8-robert serving tea in international conferance
6. முதலாவது படத்தில் ஐஸ்வர்யா ராய் அமர்ந்திருக்கும் பகுதியில் குண்டுகள் காரை துளைத்திருக்கும் காட்சி, மற்றும் அதே பகுதியில் அமைந்துள்ள பின்பக்கம் பார்க்கும் கண்ணாடி சேதம் இல்லாமல் இருக்கின்றது. இரண்டாவது படத்தில் காரில் எவ்வித குண்டு துளைத்த அடையாம் இல்லை, பின்பக்கம் பார்க்கும் கண்ணாடியும் இல்லை, மூன்றாவது படத்தில் முன்பக்கத்தில் குண்டுகள் துளைத்த காட்சியுடன், இல்லாமல் இருந்த கண்ணாடி மீண்டும் வந்துள்ளது.
ENTHIRAN-9
ENTHIRAN-9-9
ENTHIRAN-10-10-10
7. முதலாவது படத்தில் இரண்டு கார்கள் சிட்டியின் காருடன் மோதியதில் காரின் முன்பக்க இன்ஞின் கதவு உடைந்து முழுமையாக பறந்து செல்கின்றது, அத்தோடு முன் பக்கம் முழுவதும் உடைந்து நாசமாகின்றது. இரண்டாவது படமும் அதையே தெளிவாக காட்டுகின்றது, அதற்கு அடுத்து வரும் மூன்றாவது படத்தில்  கார் எவ்வித பாதிப்பும் இல்லாமல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ENTHIRAN-10
ENTHIRAN-10-10
ENTHIRAN-11-11
8. இரண்டாவது முறையாக போலீஸ் வாகனத்துடன் சிட்டியின் கார் மோதி நொருங்குகின்றது, அதற்கு அடுத்த வினாடியில் வரும் காட்சியில் கார் எவ்வித சேதமும் இல்லாமல் இருக்கின்றது.
ENTHIRAN-11
ENTHIRAN-111
9. முதலாவது படத்தில் பறந்து வரும் காருக்குள் முன் பக்கமும் பின் பக்கம் எவரும் இல்லை, இரண்டாவது படத்தில் அதே பறந்து வரும் காட்சியில் இரண்டு காவலர்கள் வெளிப்பக்கத்தில் கைகள் நீட்டியபடி உள்ளார்கள்.
ENTHIRAN-12-12
ENTHIRAN-12
10. சிட்டியை விரட்டி வரும் ஒரே காட்சியில் சிட்டி ஓட்டி வரும் ஒரே காரில் மூன்று விதமான அலாய் வீல்கள் மாற்றப்பட்டுள்ளது.  முதலாவது படத்தில் மண்டபத்தில் காரை எடுக்கும் போது ஒரு வீல், போலீஸ் விரட்டும் போது இரண்டாவது வீல், போலீசின் துப்பாக்கியை பறித்து சுடும் போது மூன்றாவது வீல்!
ENTHIRAN-13
ENTHIRAN-13-13
ENTHIRAN-13-13-13
11. போலீஸ் சிட்டியை சுடும் போது கண் மற்றும் முகத்தில் ஏற்படும் காயங்கள்  மற்றும் அளவுகள் இரண்டாவது படத்தில் மாறியிருப்பது.
ENTHIRAN-14
ENTHIRAN-14-14
12. மிக சாதாரண பயணத்திற்கு பயன்படுத்தும் ஹெலிகாப்டரில் ராக்கெட் பெருத்தியிருப்பது, உண்மையான ராணுவம் பார்த்தால் விழுந்து விழுந்து சிரித்திருக்கும்
ENTHIRAN-15-heli-bom
13. முதலாவது படத்தில் சிட்டி ஜஸ்வர்யாவை அழைத்து வரும் காட்சியில் ஒரு மொழுகுவர்த்தி கூட அறையில்  இல்லை ஆனால் சில நிமிட நேரத்தில் அறை முளுவதும் மொழுகுவர்த்தியால் நிறைத்திருப்பது, ஆடைகள் மாற்றியிருப்பது
ENTHIRAN-16
ENTHIRAN-16-16
14. சோல்ஜர்ஸ் அசம்பில் என சிட்டி கூறும் போது அனைத்து ரோபோக்களும் ஒரே இடத்தில் கூடும், அதுதான் மொத்த ரோபோக்களின் கணக்கு ஆனால் இரண்டாவது படத்தில் பல நூறு ரோபோக்கள் இணைந்து மிகப்பெரும் மனிதனாக உயர்ந்து நிற்பது எப்படி?ENTHIRAN-17
ENTHIRAN-17-17
அடுத்த படத்துடன் சந்திப்போம்…அடுத்த படம் கடல்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...