Aug 18, 2013

ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ உதவும் மிகச்சிறந்த உணவுப்பழக்கங்கள்!

News Serviceஆரோக்கியமே மிகச் சிறந்த செல்வம் என்பதால் நாம் அனைவருமே கட்டுக்கோப்புடனும், பருவகால நோய்களை எதிர்க்கும் சக்தியுடனும் உடலை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும் என ஆசைப்படுகிறோம். மேலும் அனைவரது விருப்பப்பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்த ஆசையும் ஒன்றாகும் என்பதை யாருமே மறுக்க முடியாது. பரப்பரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த உலகத்தோடு, நாமும் வேகமாக ஓடவேண்டிய காலக்கட்டத்தில், உணவைப் பற்றி சிந்திப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. நமது வயிறு பசிக்கும் போது அல்லது ஏதாவது உணவுப் பொருளை பார்க்கும் போது மட்டுமே நமக்கு சாப்பிடத் தோன்றுகிறது. ஆகவே சரியான முறையில் உணவை சாப்பிட்டு, நல்ல ஆரோக்கியத்துடன் வாழ ஆசைப்பட்டால், கீழ்கூறிய சில வழிமுறைகளைப் பின்பற்றினால், நிச்சயம் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.

   தற்போதைய உணவுப் பழக்கத்தை ஆராய்ந்து பார்க்கவும்
ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை கொண்டு வருவதற்கு, முதலில் தற்போதய உணவு பழக்கம் பற்றி கவனிக்க வேண்டும். அதற்கு தினமும் என்ன சாப்பிடுகிறோம், எப்போது சாப்பிடுகிறோம் என்பதை தொடர்ந்து கவனிக்கவும். இந்த டெக்னிக் தற்போதைய உணவு பழக்கம் ஆரோக்கியமானதா? இல்லையா? என்பதை மதிப்பீடு செய்ய உதவும்.
மெதுவாக உணவு பழக்கத்தில் மாற்றத்தை கொண்டு வரவும்
ஒரே நாளில் ஆரோக்கியமான உணவிற்கு மாறுவது என்பது கடினம். உணவு பழக்கத்தை கைவிடுவதை தவிர்க்கும் பொருட்டு, மெதுவாக மற்றும் சீரான முறையில் புதிய உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். ஆரம்ப கட்டத்தில் வாரத்தில் ஒரு நாளாவது சைவ உணவு சாப்பிட ஆரம்பித்து, அது பழக்கமாகிவிட்டால், பின்னர் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சாப்பிட முயற்சி செய்ய வேண்டும்.
மெடிடரேனியன் (Mediterranean) டயட் முறையை ட்ரை பண்ணவும்
மெடிடரேனியன் டயட் ஒரு ஆரோக்கியமான டயட் முறையாகும். இந்த டயட் முறையில் நல்ல சுவையும், ஆரோக்கியமும் ஒன்றாக கிடைக்கும். இதில் அவரை, நவதானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் பொருட்கள் அதிகளவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
தேவையான கலோரியின் அளவை நிர்ணயிக்கவும்
முதலில் அன்றாடம் எவ்வளவு கலோரி தேவை என்பதை நிர்ணயம் செய்ய வேண்டும். இல்லையெனில், உடம்பில் உள்ள தசைத்திசுக்கள் உடைந்து, ஆற்றல் குறையும்.
காலை உணவு மிகவும் அவசியம்
தினமும் தவறாது பின்பற்ற வேண்டிய ஒன்று என்னவென்றால், ஆரோக்கியமான காலை உணவு சாப்பிடுவதே. காலையில் எழுந்தவுடன் அன்றைய நாளை ஆரோக்கியமான காலை உணவோடு ஆரம்பிக்க வேண்டும்.
ஆரோக்கியமான உணவையே தேர்வு செய்யவும்
ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் என முடிவெடுத்துவிட்டால், சாப்பாட்டின் அளவு என்ன? அதில் எவ்வளவு கலோரி உள்ளது என்பவற்றிற்கு முன்னுனிமை கொடுக்காதீர்கள், மாறாக, வெவ்வேறு வகையான புத்துணர்ச்சி தரும் உணவு வகைகளை, உணவுப் பழக்கத்தில் சேர்த்து கொள்ள வேண்டும். இது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
கார்போனேட்டட் பானங்களைத் தவிர்க்கவும்
கார்போனேட்டட் பானத்தில் இயற்கையாக இனிப்புச் சுவை சேர்க்கப்படுவதால், அது ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் தினமும் ஏதாவது ஒரு குடிபானம் அருந்துபவராக இருந்தால், உடல் நிலை மிகவும் மோசமாகும்.
ஸ்நாக்ஸிற்கு பதிலாக பழங்கள் சாப்பிடவும்
மாலையில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு கப் ஃப்ரஷ் ஃபுருட்ஸ் சாப்பிடவும். பசி எடுக்கும் போதெல்லாம், ஒரு துண்டு பழம் சாப்பிட்டு பழகினால், அதனால் உடலுக்குத் தேவையான, வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்திலும் வீட்டு சாப்பாட்டை சாப்பிடவும்
வேலைக்குச் செல்லும் போது, வீட்டு சாப்பாட்டை எடுத்து செல்வது ஆரோக்கியமான வாழ்விற்குச் சிறந்தது. இது சர்க்கரை, சோடியம் மற்றும் உணவிலுள்ள செயற்கை பதார்த்தங்கள் பற்றிய கவலையை நீக்கிவிடும்.
பழங்கள், காய்கறிகளே எப்போதுமே சிறந்தது
அன்றாட உணவில் குறைந்தது ஐந்து பகுதியாவது வெவ்வேறு வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
அளவாகச் சாப்பிடவும்
'அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம்' என்பார்கள். நல்ல உணவை பார்த்தவுடன், தட்டு நிறைய சாப்பிடத் தோன்றும். ஆனால் அவ்வாறு சாப்பிடக்கூடாது. மாறாக அளவாகச் சாப்பிட்டு பழக வேண்டும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...