Sep 21, 2013

ஆர்ட்டிக் கடற்பகுதியில் கிறீன் பீஸ் கப்பலை பயணம் வைத்துள்ள ரஷ்யா! - 30 பேர் வரை சிறையில்.


News Serviceஆர்க்டிக் கடற்பகுதியில் உள்ள பேரண்ட்ஸ் கடல்பகுதியில் ரஷ்ய எரிபொருள் உற்பத்தி நிறுவனமான காஸ்ப்ரோம் நிறுவனத்தின் எண்ணெய் துரப்பண மேடை செயல்பட்டு வருகின்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து வலியுறுத்தி வரும் கிரீன்பீஸ் இயக்கத்தினர் பனிப்பிரதேசங்களில் இத்தகைய முயற்சிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த இயக்கத்தைச் சேர்ந்த 29 பேர் நேற்று ஆர்க்டிக் சன்ரைசர் என்ற கப்பலில் எண்ணெய் மேடைக்கு அருகில் சென்றபோது ரஷ்ய அதிகாரிகள் அவர்கள் அனைவரையும் கப்பலின் சமையல் அறைக்குள் அடைத்துப் பூட்டியுள்ளனர்.
   இந்தக் குழுவைச் சேர்ந்த ஆர்வலர்களுள் ஒருவரான குலாசென் (26) இந்த விபரத்தினை தங்களுடைய இயக்கத் தலைமையகத்திற்குத் தெரிவித்துள்ளார். ரஷ்யப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 10-12 அதிகாரிகள் ஹெலிகாப்டரிலிருந்து தங்கள் கப்பலில் இறங்கியதாகவும் தாங்கள் அனைவரையும் ஒரே அறையில் வைத்துப் பூட்டியதாகவும் அவர் கூறியுள்ளார். தாங்கள் துன்புறுத்தப்படவில்லை என்றும் கப்பல் தங்களின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பின்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்திலிருந்து வந்த கிரீன்பீஸ் இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு பேர் புதன்கிழமை அன்று எண்ணெய் மேடையை அளக்க முற்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களும் தங்களுடன் அடைக்கப்பட்டுள்ளதாக குலாசென் கூறினார். அவர் மேற்கொண்டு பேசமுடியாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ரஷ்ய அதிகாரிகள் கப்பலைப் பிடித்தபோது நெதர்லாந்து நாட்டுக் கொடியுடன் இருந்த அந்தக் கப்பல் சர்வதேச எல்லைக்குள் இருந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் குழு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் நெதர்லாந்தின் ரஷ்யத் தூதுவரான ரோன் வான் டார்ட்டலிடம் அந்நாட்டு ஆர்வலர்களின் ஆக்கிரமிப்பு மற்றும் ஆத்திரமூட்டும் செயல் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.எண்ணெய் நிறுவனத்தின் மாஸ்கோ அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...