Oct 12, 2013

இந்திய வரலாற்றிலேயே நெருங்கிவிட்ட மாபெரும் புயல்


இந்தியா வரலாற்றிலேயே மிகப் பெரும் புயலொன்றை எதிர்நோக்கியுள்ள நிலையில், அதன் கிழக்கு கரையோரப் பகுதிகளில் கடுமையான காற்றுடன் கூடிய மழை கொட்டிக்கொண்டிருக்கிறது.
வங்காள விரிகுடாவிலிருந்து நகர்ந்துவரும் பைலின் புயல் இன்னும் சில மணிநேரங்களில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் நாலரை லட்சம் மக்கள் ஏற்கனவே தமது இருப்பிடங்களை விட்டு பாதுகாப்புக்காக வெளியேறியுள்ளனர்.
ஒடிசா மாநிலத்தின் சில பகுதிகளில் ஏற்கனவே மணிக்கு சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசிக்கொண்டிருக்கிறது.
மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுத்துள்ள இந்திய அதிகாரிகள், புயல் நிலைமைகளை எதிர்கொள்வதற்கான ஆயத்தப்
பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஒடிசாவில் 1999-இல் வீசிய பெரும் புயல் மழையில் சுமார் 10 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
220 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று
கரையை கடப்பதற்கு முன் புயல் பெரும் சூறாவளியாக மாறும் என்றும், கரையை கடக்கும் போது மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கரமாக காற்று வீசும் என்று எச்சரித்து இருக்கிறது.புயல் கரையை கடக்கும் போது ஒடிசாவின் கஞ்சம், குர்டா, பூரி, ஜெகத்சிங்பூர் மாவட்டங்களில் கடலில் 3.5 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புயலினால் ஒடிசாவின் பூரி மற்றும் ஆந்திராவின் ஶ்ரீகாகுளம் ஆகிய இரு மாவட்டங்களும் வெகுவாக பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
3 பேர் பலி
இந்நிலையில் ஒடிசாவில் புயல் நெருங்கி வருவதையொட்டி வீசும் பலத்த காற்றால், மரம் முறிந்து விழுந்ததில் ஒருவரும், நிலச்சரிவுக்கு 2 பேர் என மொத்தம் 3 பேர் இதுவரை பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. .
மின் விநியோகம் துண்டிப்பு
இதனிடையே புயல் கரையை கடக்கும்போது பலத்த காற்று வீசும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
புயல் கரையை நெருங்கி வருவதால் ஒடிசா, ஆந்திர மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இரு மாநிலங்களிலும் மீட்பு படையினர் ‘உஷார்’ நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ரயில்கள் ரத்து
இதனிடையே, ஹவுரா–சென்னை மெயின் லைன் மார்க்கத்தில் விசாகப்பட்டினம்–பட்ராக் இடையே இன்று 24 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹவுரா – விசாகப்பட்டினம் இடையேயான ரயில்பாதைகளில் 56 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 12 க்கும் அதிகமான ரயில்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டுள்ளன.மேலும் அவசரகால கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டு இருக்கிறது.
கனமழை எச்சரிக்கை
பைலின் புயல் காரணமாக ஒடிசாவின் கடலோர பகுதிகளிலும், ஆந்திராவின் வடக்கு கடலோர பகுதிகளிலும் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் கனமழை காரணமாக சாலை போக்குவரத்தும் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 லட்சம் பேர் வெளியேற்றம்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்தின் கடலோர பகுதிகளில் வசிக்கும் சுமார் 4 லட்சம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேப்போன்று ஆந்திராவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நிவாரண, மீட்பு நடவடிக்கைகள்
புயலினால் பாதிக்கப்படுபவர்களுக்கு வழங்குவதற்காக 500 டன்களுக்கும் அதிகமான நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த முதல் விமானம், இன்று காலை புவனேஸ்வர் விமான நிலையத்தில் வந்திறங்கியது.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புவனேஸ்வர் விமான நிலையம் மூடப்பட்டு, விமானப்படை விமானம் மட்டுமே அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக இரு மாநிலங்களிலும் முப்படையினரையும் தயார் நிலையில் உள்ளனர். விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு பிராந்திய கடற்படை தளத்தில் மீட்பு பணிக்கான ஹெலிகாப்டர்களும், நிவாரண கப்பல்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கென நாசிக், ராஞ்சி, பெங்களூரு, நாக்பூர் மற்றும் பராக்பூர் ஆகிய இடங்களில் 40 க்கும் அதிகமான விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...