Nov 11, 2013

பிலிப்பைன்சை சூறையாடிய ஹயான் புயல் வியட்னாமையும் தாக்கியது! - அடுத்த குறி சீனா.


பிலிப்பைன்சை சூறையாடிய ஹயான் புயல் வியட்னாமையும் தாக்கியது! - அடுத்த குறி சீனா.
[Monday, 2013-11-11
News Service பிலிப்பைன்ஸ் புரட்டி போட்ட ஹயான் புயல் வியட்நாமில் இன்று கரையை கடந்தது. பிலிப்பைன்சை தாக்கிய ஹயான் புயலில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அங்கு 315 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளியில் 44 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட இடங்களில் ஹெலிக்கொப்டர் உதவியுடன் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ் அரசுக்கு அமெரிக்கா, ஜெர்மனி பொன்ற நாடுகள் உதவ வந்துள்ளன. இந்தநிலையில், ஹயான் புயல் வியட்நாம் நாட்டின் மத்திய கடற்பகுதியான ஹைவாங்கில் இன்று அதிகாலை கரையை கடந்தது.
  
வலு இழந்த நிலையில் சீனாவை நோக்கி இது நகர்கிறது, முன் எச்சரிக்கையாக கடலோர
பகுதியில் இருந்த 6 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாலும் சூறாவளியின் வேகம் 117கிமி ஆக குறைந்ததாலும் பிலிப்பைன்ஸ் அளவிற்கு வியட்நாமில் பாதிப்புகள் ஏற்படவில்லை. எனினும் 13 பேர் உயிரிழந்ததுடன் 81 பேர் காயமடைந்தனர். 5 லட்சம் மக்கள் மீண்டும் தங்களது குடியிருப்புகளுக்கு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குடியிருப்புகளை இழந்து பாதிப்புகளில் சிக்கிய மக்களுக்கு தேவையான உதவிகளை வியட்நாம் அரசு செய்து வருகின்றது. இதனிடையே வலு இழந்த நிலையில் சீனாவை நோக்கி ஹயான் சூறாவளி நகருவதால் சீனாவில் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் பழத்த மழை பெய்து வருகின்றது, முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...