Jan 5, 2013

புது வருடம் - 1193 வாகனங்கள் தீக்கிரை

புது வருட Saint-Sylvestre இரவில் 1193 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாக நேற்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் உள்துறை அமைச்சர் மனுவல் லால்ஸ் கூறியுள்ளார். இதில் சிற்றுந்துகளும் உந்துருளிகளும் அடங்கும். இதில் 344 வாகனங்கள் அருகிலிருந்த வாகனங்கள் கொழுத்தப்பட்டதால் தீ பரவி எரிந்தவை எனக் கூறியுள்ளார். கடந்த வருடம் தீக்கிரையான வாகனங்களின் எண்ணிக்கையை சார்க்கோசி அரசு வெளியிட மறுத்திருந்தது. ஆனாலும் தாம் முழுமையாக வெளிப்படையாக இருக்க விரும்புவதாகவும் அதிகாரபூர்வ எண்ணிக்ககையை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 2009 ம் ஆண்டு 31 டிசம்பர் அறிக்கை மட்டுமே சார்க்கோசி அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. இது 1147 வாகனங்களாளகும். 
 
 
 
இவ்வருட இறுதியன்று கொளுத்தப்பட்ட வாகனங்களின் விபரங்களை மனுவல் வால்ஸ் அறிவித்தள்ளார். தேசியக் காவற்துறையின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் 907 வாகனங்கள் தீக்கியைரயாக்கப்பட்டுள்ளன.. அதில் 267 வாகனங்கள்  தீபரவலால் எரிந்தவையாகும். 
பரிஸ் மாநகரக் காவற்துறை நிர்வாகப் பகுதிக்குள் மூன்று முக்கிய புறநகர்ப்பகுதிகளான Seine-Saint-Denis, Val-de-Marne, Hauts-de-Seine அடங்கலாக 209 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அதில் 154 வாகனங்கள் தீபரவலால் எரிந்தவையாகும். Gendarmerie யின் பகுதியில் 77 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அதில் 23 வாகனங்கள் தீபரவலால் எரிந்தவையாகும். வழமை போல் பரிசை அண்டிய புறநகர்ப் பகுதிகளில் Seine-Saint-Denis பகுதியிலேயே அதிகளவாக 83 வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன. 
 
 
 
 
*
 
 
அத்தோடு Bas-Rhin பகுதியில் தடைசெய்யப்டடிருந்த வெடிகளை வெடித்ததில் ஒரு இளைஞன் உயிரிழந்துள்ளார். பிழையான பாவனையால் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். 
Saint-Sylvestre இரவில் கடமையில் ஈடுபட்டிருந்த 53000 காவற்துறையினரையும் Gendarmerie இனரையும் மற்றும் தீயணைப்புப் படையினர், மருத்துவ சேவையினர் என மொத்தமாக 65 000 பேரையும் மனுவல் வால்ஸ் பாராட்டினார். இதில் காயமடைந்த இரு Gendarmerie இனரையும் நேரில் சந்தித்தார். 
 
 
Strasbourg (Bas-Rhin) இலுள்ள Neuhof பகுதியில்  மற்றும் Mulhouse (Haut-Rhin)பகுதியில் பெரும்பாலானோர் வன்முறைகளில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்ற வருடம் இங்கு 290 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இம்முறை அங்கு 339 பேர் கைது செயய்பட்டுள்ளனர். பரிஸில் 205 பேர் கைது செய்யப்பட்டுள்னர்.
மனுவல் வால்ஸ் வெளிப்படையாக வழங்கிய இந்த எண்ணிக்கையை வழமை போலவே முன்னை நாள் ஆளுங்கட்சியான UMP யில் உள்துறை அமைச்சராக இருந்நத Brice Hortefeux கடுமையாக விமர்சித்துள்ளார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...