Jan 6, 2013

அமெரிக்க அதிபராக ஒபாமா 20ஆம் தேதி பதவியேற்பு


அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்காளர் குழு வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டன. அப்போது, ஓஹையோவில் பதிவான வாக்குகள் தொடர்பான சான்றிதழை அந்த மாகாண அவைத் தலைவர் ஜான் போய்னரிடம் காட்டுகிறார் துணை அதிபர் ஜோ பிடன் (இடது).

First Published : 05 January 2013
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பராக் ஒபாமா இம்மாதம் 20ஆம் தேதி பதவியேற்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. ஒவ்வொரு மாகாணத்திலும் வெற்றி பெற்ற வாக்காளர் குழு (எலக்டோரல் காலேஜ்) உறுப்பினர்கள் தங்களது கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தனர். அந்த முடிவுகளை அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தனர். அந்த
வாக்குகளை எண்ணுவதற்காக நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
அப்போது வாக்காளர் குழு உறுப்பினர்களின் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. அதன்படி, இப்போதைய அதிபர் ஒபாமாவுக்கும், துணை அதிபர் ஜோ பிடனுக்கும் 332 வாக்குகள் கிடைத்தன. அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி மற்றும் அவரது துணை அதிபர் வேட்பாளர் பால் ரயனுக்கு 206 வாக்குகள் கிடைத்தன.
இந்தக் கூட்டுக் கூட்டத்துக்கு துணை அதிபர் ஜோ பிடன் தலைமையேற்று நடத்தினார். அவரே தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி, அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபரின் பதவிக்காலம் இம்மாதம் 20ஆம் தேதி தொடங்குகிறது. அவர்கள் இன்னும் நான்காண்டுகளுக்கு இப்பதவிகளை வகிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2 முறை பதவியேற்பு: அமெரிக்க அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்றம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அவர் இரண்டு முறை பதவியேற்க உள்ளார்.
ஏனெனில் அவர் அதிபராகப் பதவியேற்கும் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று நீதிமன்றங்கள் உள்ளிட்ட அரசு அமைப்புகள் மூடப்பட்டிருக்கும். எனினும் 20ஆம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவதால் அன்று ஒரு முறையும், மறுநாள் 21ஆம் தேதி சம்பிரதாய முறையிலும் அவர் பதவியேற்க உள்ளார்.
ஒபாமாவுக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...