Jan 6, 2013

அலாஸ்காவில் கடும் நிலநடுக்கம்





ஜுனியா: அலாஸ்கா அருகே கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அலாஸ்காவின் தெற்குப் பகுதி மற்றும் கனடாவின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கம் 7.6 ரிக்டர் புள்ளிகள் அளவுக்கு இருந்தது. கிரேய்க் பகுதிக்கு மேற்கே 97 கி.மீ தொலைவில் பசிபிக் கடலில் 9 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்தது. நிலநடுக்கம் காரணமாக கார்டோவ் நகருக்கு தென்கிழக்கே 121 கி.மீ தொலைவில் தொடங்கி வான்கூவர் தீவின் வடக்கு முனை வரை சுனாமி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...