Jan 10, 2013

பேஸ்புக்கிலும் சச்சின் சாதனை!

பேஸ்புக்கிலும் சச்சின் சாதனை




  • 3
     

sachin_facebook_1சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சினை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சச்சின் டெண்டுல்கர் கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பேஸ்புக்கில் இணைந்தார், இதில் தன்னுடைய கருத்துகளை வீடியோ மூலமாகவும் தெரிவித்து வந்தார்.
முதன் முதலாக பேஸ்புக் கணக்கை தொடங்கிய சச்சின், எனது பேஸ்புக்கிற்கு அனைவரையும் வரவேற்கிறேன், இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்பது என் சிறுவயது கனவு.
கடந்த 22 ஆண்டுகளாக உலக கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்பதும் கனவு தான், உங்களின் ஆதரவில்லாமல் இதுவெல்லாம் நடந்திருக்காது. இந்த வாய்ப்பை கொடுத்த கடவுள், எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கும்
நன்றி என தெரிவித்தார்.
இது வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே 4 லட்சம் பேர் சச்சினை பின்பற்ற தொடங்கினர். இந்நிலையில் தற்போது பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 90 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து சச்சின் வெளியிட்ட பேஸ்புக் செய்தியில், என்னை ஸ்பெஷலாக உணரச் செய்த அனைவருக்கும் 90 லட்சம் நன்றிகள் என தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...