Mar 13, 2013

தோல்வியில் முடிந்த முதல் நாள் போப் ஆண்டவர் தெரிவு செவ்வாய்க்கிழமை, 12 மார்ச் 2013



புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்ய கர்தினால்கள் கூட்டம், வாடிகன் பீட்டர் தேவாலயத்தின் 16-வது விசேஷ ஆலயத்தில் நேற்று தொடங்கியது.உலகம் முழுவதிலும் இருந்து 115 கர்தினால்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்திற்கு வாடிகன் கர்தினால்கள் பல்கலைக்கழக டீன் ஆஞ்சலோ சுதானோ தலைமை தாங்கினார். ஆனால் நேற்றைய முதல் நாள் கூட்டம், புதிய போப் ஆண்டவரை தெரிவு செய்யாமல் தோல்வியில் முடிந்தது. இதற்கான அறிவிப்பு, வாடிகன் தேவாலய புகை போக்கியில் வெளிவந்த கருப்பு புகை அறிவிப்பு தெரிவிக்கிறது.
ஒரு புதிய போப்பை, தேர்வு செய்ய இந்த 115 கர்தினால்களும் ஒரு நாளைக்கு 4 முறை வாக்களிப்பார்கள். ஒருவர் மீது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கும் வரை இந்த வாக்கெடுப்பு தொடரும்.
பொதுவாக போப் ஆண்டவரை தெரிவு செய்வது ஒரு சில நாட்கள் நடக்கும்
என்று சொல்லப்படுகிறது. புதிய போப் தெரிவு பெற்றவுடன் அதற்கான அறிவிப்பு தேவாலய புகை போக்கியில் வரும் வெள்ளை புகையினால் அறிந்துகொள்ளப்படும்.
இந்த தேர்வில் முதல் முறையாக இந்தியாவில் இருந்து 5 கர்தினால்கள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...