Apr 6, 2013

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத சிலந்தி!




மாங்குளம் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித  முகமொன்றின் அளவை ஒத்த சிலந்தியானது முழு உலகினது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.
http://www.virakesari.lk/image_article/article-2304180-19186E21000005DC-56_634x424.jpg
இச்சிலந்தியானது குறுக்காக சுமார் 8 அங்குளம் நீளமானதென கணிப்பிடப்பட்டுள்ளதுடன் கால்களில் மஞ்சள் நிற கோடுகளையும் கொண்டுள்ளது.
http://www.virakesari.lk/image_article/img2090at8-1-762x428.jpg
டரான்டூலாஸ் 'tarantulas' எனப்படும் இராட்ச சிலந்தி குடும்பத்தைச் சேர்ந்த இச் சிலந்தியானது பொயிசிலோதேரியா 'Poecilotheria' இனத்தைச் சேர்ந்தது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
http://www.virakesari.lk/image_article/article-2304180-19186D16000005DC-256_634x375.jpg
இலங்கை மற்றும் இந்தியாவில் மட்டும் காணப்படும் இச் சிலந்திகள் மரங்களிலேயே பெரும்பாலும் வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவை வேகமான அசைவுகளைக் கொண்டதுடன் விஷத்தன்மை வாய்ந்தது. இவற்றின் விஷமானது  பூச்சிகள், எலி, பாம்பு மற்றும் சிறிய பறவைகளைக் கொல்லக்கூடியது.

http://www.virakesari.lk/image_article/p-rajaei-male-1-762x428.jpg
இதுமட்டுமன்றி இச்சிலந்தியானது 'கோலியாத் பேர்ட் ஈட்டர்' எனப்படும் தென் அமெரிக்காவில் வாழும் உலகின் மிகப் பெரிய சிலந்திகளை ஒத்ததென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
http://www.virakesari.lk/image_article/3203912438_7ebacabaaa_z.jpg
இலங்கையில் இச்சிலந்தி 2009 ஆம் ஆண்டு முதல் முறையாக கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது உயிரிழந்த சிலந்தியொன்றை கிராமவாசிகள் உயிரினப் பல்வகைமை தொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ரணில் நாணயக்காரவுக்கு அளித்துள்ளனர்.
அதை அவர்கள் அடித்துக்கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அச்சிலந்தியை ஆராய்ந்த ரணில் குறித்த சிலந்தியானது இதற்கு முன்னர் இலங்கையில் இணங்காணப்பட்டதொன்றல்லவென  அறிந்து கொண்டுள்ளார்.
பின்னர் ரணில் தலைமையிலான குழுவினர் குறித்த சிலந்தியை தேடும் பணியை தொடங்கியுள்ளனர்.
நீண்ட நாள் தேடலின் பின்னர் பெண் சிலந்தி மற்றும் அதன் குஞ்சுகளை மாங்குளம் வைத்தியசாலையின்  வைத்தியரொருவரின் தங்குமிடத்தின் வளாகத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
இதை கண்டுபிடிக்க உதவிய பொலிஸ் உத்தியோகத்தரான மைக்கல் ராஜ்குமார் புராஜா என்பவருக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு இச்சிலந்தி இனமானது Poecilotheria rajaei எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதேபோல் பல சிலந்திகள் எதிர்வரும் காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம் என ஆராய்ச்சியாளர் ரணில் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிலந்தியானது இந்தியாவில் காணப்படும் Poecilotheria regalis என்றழைக்கப்படும் சிலந்திகளை ஒத்ததென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

http://www.virakesari.lk/image_article/Regalis.jpg
இதேவேளை Poecilotheria rajaei இனை தனிப் பிரிவாக அங்கீகரிக்க மேலும் உறுதிப்படுத்தல்கள் அவசியமென அவுஸ்திரேலிய குயின்ஸ்லாந்து நூதனசாலையைச் சேர்ந்தவரும் சிலந்தி ஆராய்ச்சித் துறையில் நிபுணருமான ரொபர்ட் ரவேன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...