Jan 22, 2014

சென்ற ஆண்டு ஆப்ரேட்டிங் சிஸ்டங்களின் நிலை...!

 கடந்த ஆண்டின் இறுதியில், விண்டோஸ் எக்ஸ்பி பயன்பாடு வெகுவாகக் குறைந்து காணப்பட்டது. இறுதியாக, மக்கள் மைக்ரோசாப்ட் நிறுவனம் கொடுத்த எச்சரிக்கையினை தீவிரமாக எடுத்துக் கொண்டு, விண்டோஸ் 7 மற்றும் 8 சிஸ்டங்களின் பக்கம் செல்வது தெரிய வந்தது. உலக அளவில், எக்ஸ்பி பயன்பாடு 29 சதவீதத்திற்கும் கீழாகச் சென்றுள்ளது. 2013 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், மொத்தத்தில் 2 சதவீதக் கம்ப்யூட்டர்களே, எக்ஸ்பியிலிருந்து மாறின. ஆனால், ஜூலை தொடங்கிய காலத்தில், எக்ஸ்பியை விட்டு விலகியவர்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. இப்படியே சென்றால், விண்டோஸ் எக்ஸ்பிக்கான சப்போர்ட் கைவிடப்படும் நாளில், 20 சதவீதத்திற்கும் குறைவானவர்கலே, எக்ஸ்பியைப் பயன்படுத்தி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்டோஸ் எக்ஸ்பி விடுபட்ட இடத்தை விண்டோஸ் 7 மற்றும் 8 பிடித்துக் கொண்டன. விண்டோஸ் 7 உயர்ந்து 47.5 சதவீதம் ஆகியது. விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 இணைந்து 10.1 சதவீத இடத்தைக் கொண்டிருந்தன. 2013 ஆம் ஆண்டின்
இறுதியில் இரு பிரிவுகள் தெளிவாகத் தெரிந்தன. விஸ்டா மற்றும் எக்ஸ்பி இணைந்து 32 சதவீத இடத்தையும், விண்டோஸ் 7 மற்றும் 8 இணைந்து 58 சதவீத இடத்தையும் கொண்டிருந்தன. ADVERTISEMENT வரும் ஆண்டில், பெர்சனல் கம்ப்யூட்டர் விற்பனை சற்று சரியும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், கார்ட்னர் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் படி, 2014ல், 30 கோடி பெர்சனல் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.சென்ற ஆண்டு ஆப்ரேட்டிங் சிஸ்டங்களின் நிலை...! ஸ்மார்ட் போன் கேலரிக்கு சென்ற ஆண்டு ஆப்ரேட்டிங் சிஸ்டங்களின் நிலை...! ஸ்மார்ட் போன் கேலரிக்கு ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களை, தங்கள் இணைய தளத்திலிருந்து அப்டேட் செய்திடும் பழக்கத்திற்கு வளைத்துள்ளனர். எடுத்துக் காட்டாக, விண்டோஸ் 8.1 சிஸ்டத்திற்குப் பலர் விண்டோஸ் 8 சிஸ்டத்திலிருந்து அப்டேட் செய்துள்ளனர். இந்த இரண்டு சிஸ்டங்களின் மொத்தத்தில், 8.1க்கு அப்டேட் செய்தவர்கள் எண்ணிக்கை 34.4 சதவீதமாக இருந்தது. இதே போல, ஆப்பிள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் 39 சதவீதம் பேர் தங்கள் சிஸ்டத்தினை அப்டேட் செய்துள்ளனர். உலக அளவில் கம்ப்யூட்டர் பயன்பாட்டில், ஆப்பிள் நிறுவனத்தின் சிஸ்டத்தினை 7.5 சதவீதம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த அளவே, ஆப்பிள் நிறுவனத்திற்கு அதிக லாபம் தருவதாகவும் உள்ளது. ஸ்டேட் கவுண்ட்டர் (StatCounter) அமைப்பின் கண்காணிப்பு மற்றும் ஆய்வும் இதே தகவலைத் தெரிவிக்கின்றன. விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்பாடு 57.8%, விண்டோஸ் 8 சிஸ்டம் 10.35%, எக்ஸ்பி 20%க்கும் குறைவாக இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரவுசர் பயன்பாட்டினைப் பொறுத்தவரை, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஆண்டின் இறுதியில் 2.5% உயர்ந்து, மொத்தத்தில் 58% பங்கினைக் கொண்டிருந்தது. பயர்பாக்ஸ் மற்றும் குரோம், முறையே இரண்டாவது (18.4%) மற்றும் மூன்றாவது (16.2%) இடத்தில் இருந்தன. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6 மற்றும் 7 மிகவும் குறைவான பயன்பாட்டிலேயே இருந்தன. மொத்தத்தில் இவை 6.6 சதவீதப்பங்கினைக் கொண்டிருந்தன. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 இன்னும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட பிரவுசர் என்ற இடத்தைப் பெற்றிருந்தது. இதன் பங்கீடு 20.6%. ஆனால், ஆண்டு இறுதியில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ன் பங்கு 21.5% ஆக உயர்ந்திருந்தது. இந்த பிரவுசர், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் தானாக அப்டேட் செய்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டதால், இந்த அளவிற்கு வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்தது. விண்டோஸ் 8.1 சிஸ்டத்தின் மாறா நிலை பிரவுசராகத் தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 இயங்கி வருகிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...