Feb 18, 2014

ஜப்பானில் இரண்டாவது பனிப்புயல்: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு-ஆயிரக்கணக்கான மக்கள் தவிப்பு


ஜப்பானில் இரண்டாவது பனிப்புயல்: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு-ஆயிரக்கணக்கான மக்கள் தவிப்புடோக்கியோ, பிப். 18-

ஜப்பானில் இந்த மாதம் கடந்த 9ஆம் தேதியன்று கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. சாலைப் போக்குவரத்து, ரயில், விமான சேவைகள் போன்றவை பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

மீண்டும், காதலர் தினமான கடந்த 14ஆம் தேதி கடுமையான பனிப்புயலின் தாக்கத்தில் ஆயிரக்கணக்கான ஜப்பான் மக்கள் சிக்கினர். இந்தப் புயலினால் ஜப்பானின் மத்தியப் பகுதியான யமனாஷி முழுவதும் ஒரு மீட்டர் உயரத்திற்கு மேல் பனி நிறைந்து காணப்பட்டது. கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் உறைபனியின் அளவு குறைவாக இருந்தது.

தலைநகர் டோக்கியோவில் தொடர்ந்து இரண்டாவது வாரமும் 27 செ.மீ என்ற அதிகபட்ச அளவிலேயே பனிப்பொழிவு இருந்தது. இதனால் பல இடங்களில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. விமானப் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு பல விமானங்கள் தரையிறக்கப்பட்டன. அந்நாட்டின் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் கார் உற்பத்தியும் பாதிப்படைந்தது. நரங்களின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து தடைப்பட்டு பல வாகனங்கள் தொடர்ந்து அதே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்தப் புயலின்போது ஏற்பட்ட சாலை விபத்துகளில் சிக்கியும், கூரைகளில் இருந்து விழுந்த பனியில் சிக்கியும் பலர் இறந்துள்ளனர். மேலும், பனியினால் தங்கள் வாகனங்களிலிருந்து வெளிவரமுடியாத நிலையில் கதகதப்பிற்காக கார் என்ஜினை ஓடவிட்டிருந்தவர்கள் அதிலிருந்து வெளியான கார்பன் விஷ வாயுவின் தாக்கத்தினால் இறந்துள்ளனர். இன்றுவரை, இறந்தவர்களின் எண்ணிக்கை 23 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன், மத்தியப் பகுதியில் உள்ள மூன்று பிரிவுகளில் தனது உற்பத்தியை இன்று ஆரம்பித்துள்ள நிலையில் மற்றொரு பிரிவில் நிலைமை இன்னும் சீரடையவில்லை என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...