Feb 27, 2014

சிவராத்திரி விரதமும் பூஜையும், இகபர சுகங்களை.முக்கியமாகக்சிவராத்திரியன்று செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள்கடைப்பிடிக்க வேண்டியதாகும். சிவராத்திரி அன்று, விரதம் இருப்போர் கடைப்பிடிக்க வேண்டிய 8 விஷயங்கள் வருமாறு:- 

1. சிவாலய தரிசனமும் சிவனுக்கு அபிஷேகப் பொருள்கள் சமர்ப்பித்தலும் மிக முக்கியம். 

2. முடிந்தால் வீட்டில், மாலை வேளையில் சிவபூஜை செய்யலாம். குலதெய்வமாக சிவனை வழிபடுபவர்கள் கட்டாயம் சிவபூஜை செய்ய வேண்டும். 

3. நிவேதனத்திற்கு பாசிப்பருப்பு பாயசம், வேக வைத்து, வெல்லம், ஏலக்காய் சேர்ந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு முதலியவை விசேஷம். மற்ற நைவேத்தியங்களும் வைத்து வழிபாடு செய்யலாம். 

4. இரவு முழுக்க கண் விழித்து, சிவ ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்ய வேண்டும். டி.வி. பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. 


5. உற்றார், உறவினர்கள், நண்பர்களை பூஜையில் பங்கு பெற அழைத்து, பிரசாதம் வழங்கலாம். 

6. சிவபுராணம், தேவாரம், திருவாசகம், ஸ்ரீருத்ரம் முதலியவற்றை வீடுகளிலோ, கோவில்களிலோ பலர் சேர்ந்து பாராயணம் செய்வது சிவனருளைப் பலருக்குப் பெற்றுத் தரும். 

7. விரதம் இருக்க முடியாதவர்கள், கூடுமானவரை, உணவு உண்ணாமல், பலகாரங்கள் (உப்புமா போன்றவை) உண்ணலாம். 

8. குறிப்பாக, சிறு குழந்தைகளுக்கு, நம் கலாச்சாரத்தைப் பற்றியும், விரதம் அனுஷ்டிப்பதன் காரணங்கள் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறுவது, பக்தியையும், பண்பாட்டையும் வளர்க்க உதவும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...