Mar 2, 2014

தேனின் தித்திக்கும் இனிப்பு


தேனின் அதிகப்படியான இனிப்பிற்கு காரணம் அதில் உள்ள ஃப்ரக்டோஸ் எனப்படும் சர்க்கரை தான்.
சர்க்கரையில் பல வகைகள் உள்ளன, கரும்பில் உள்ளது சுக்ரோஸ் எனப்படும் சர்க்கரை.
இதை இன்வெர்டேஸ் என்கிற நொதியால் சிதைத்தால், குளுகோஸ், ஃப்ரக்டோஸ் என்ற இரு சிறு சர்க்கரை பொருட்கள் கிடைக்கும்.
இவற்றில் ஃப்ரக்டோஸ் எல்லாவித பழங்களிலும் இருக்கிறது.
பழங்களின் சுவைக்கு இவை தான் காரணம், இதுதவிர பூவிலுள்ள மதுவிலும் இந்த சர்க்கரை தான் நிரம்பியுள்ளது.
தேன் எப்படி கிடைக்கிறது?
தேனீக்கள் மலர்களின் மகரந்தங்களிலிருந்து , பூந்தேனை குடித்து வந்து, தேன் அடைகளில் தேக்கி வைத்து தித்திக்கும் தேனாய் நமக்கு தருகின்றன.
தேனீக்கள் உடலில் சுரக்கும் ஒருவகை சுரப்பி நீர், பூந்தேனை நாமருந்தும் தேனாக மாற்றுவதில் பெறும் பங்கு வகிக்கின்றது.
தேனின் தரம்
தேனில் இனிப்பு சத்து அதிகம். ஃப்ரக்டோஸ், குளுகோஸ் அதிகமாகவும், தாது பொருட்கள் குறைவாகவும் உள்ளன.
அந்ததந்த பகுதிகளில் பூக்கும் மலர்களின் தன்மையை பொருத்தே, தேனின் தன்மையும் அமையும்.
தேனில் உள்ள ஈரபதத்தின் அடிப்படையில் தேனின் தரம் நிர்ணயம் செய்யபடுகின்றது.
ஈரப்பதம் 20 சதவிகிதத்திற்கு குறைவாக இருந்தால், அது 'ஸ்பெஷல்' கிரேடு தேன் எனவும், 20 முதல் 22 சதவிகிதம் ஈரப்பதம் இருந்தால், அது 'A' கிரேடு தேன் எனவும், 22 முதல் 25 சதம் ஈரப்பதம் இருந்தால் அது 'ஸ்டாண்டர்ட்" கிரேடு எனவும் மூன்று வகையாக தரம் பிரிக்கப்படுகின்றன.
கலப்படத்தை எப்படி கண்டுபிடிப்பது?
ஒரு கண்ணாடி டம்ளர் நிறைய தண்ணீர் ஊற்றி, ஒரு கரண்டியில் தேனை எடுத்து சிறிது சிறிதாக ஊற்றினால், நல்ல தேன் கம்பிபோல் நீரில் இறங்கும். சர்க்கரை பாகு கலப்படம் செய்யபட்டிருந்தால் அது நீரில் கரையும்.
சிறிதளவு தேனில் தீக்குச்சியை சில வினாடிகள் ஊறவிடுங்கள். மீண்டும் ஊறிய தீக்குச்சியை எடுத்து துடைத்து விட்டு தீப்பெட்டியில் பற்ற வைக்க வேண்டும். குச்சி சீக்கிரம் எரிந்தால் தேனில் சர்க்கரைக் கலப்படம் இல்லை என்பதை அறிய வேண்டும்.
மை உறிஞ்சும் காகிதத்தில் சிறிதளவு தேனை ஊற்றி, சில நிமிடங்கள் வைத்திருங்கள். காகிதத்தின் கீழே தேன் ஊறி இருக்கக் கூடாது.
தேனின் மகத்துவங்கள்
தேனில் பாக்டீரியாவிற்கு எதிரான பண்புகள் மற்றும் நுண்ணுயிர்களுக்கு எதிரான பண்புகள் இருப்பதால், பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கும். அதனால் இது வெட்டு காயங்கள், சிராய்ப்புகள், தீக்காயங்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகின்றது.
தேனை சருமத்திற்கு உபயோகித்தால், அது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சரும சுருக்கம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
சுருக்கம் மற்றும் வெடிப்புகள் நிறைந்த உதடுகளில் தேனை தொடர்ந்து தடவி வந்தால், உதடுகள் பட்டு போல மிருதுவாகும்.
சூடான நீரில் ஒரு தே‌க்கர‌ண்டி இஞ்சிச்சாறு, எலுமிச்சைச்சாற்றுடன், ஒரு தே‌க்கர‌ண்டி தேன் சேர்த்தீர்களானால் இஞ்சிச்சாறு ரெடி. இது நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், தும்மல் போன்றவற்றிலிருந்து ‌நிவாரண‌ம் அ‌ளி‌க்கு‌‌ம்.
உட‌ல் மெ‌‌லி‌ந்தவ‌ர்க‌ள் ‌தினமு‌ம் பா‌லி‌ல் தே‌ன் கல‌ந்து சா‌ப்‌பி‌ட்டு வர உட‌ல் வாகு ‌சீராகு‌ம்.
அடிக்கடி ச‌ளி பிடித்தால், இளஞ்சூடான பாலில் சிறிது மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தேனை கலந்து தினமும் பருக வேண்டும், நல்ல பலன் தெரியும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...