Mar 30, 2014

ரெட் ஒயினின் அழகு நன்மைகள்

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் பானங்களில் ரெட் ஒயினும் ஒன்று என்று தெரியும். மேலும் ஆய்வு ஒன்றிலும் ரெட் ஒயின் சாப்பிட்டால், இதய நோய் வருவதைத் தவிர்க்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் ரெட் ஒயினை அளவாக சாப்பிட்டு வந்தால், உடலை ஆரோக்கியமாகவும், அதுவே அளவுக்கு மீறினால், மோசமான விளைவையும் சந்திக்கக்கூடும். அதுமட்டுமல்லாமல், அக்காலத்தில் எல்லாம் ரெட் ஒயின் ஒரு மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதனால் தான் இன்றும் ப்ரெஞ்சு மக்கள், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு, தினமும் அளவான அளவில் ரெட் ஒயினை சாப்பிட்டு வருகின்றனர். இத்தகைய ரெட் ஒயின் உடலுக்கு மட்டும் நன்மைகளை தருவதில்லை. சருமம் மற்றும் கூந்தலுக்கும் பல நன்மைகளைத் தருகிறது. அதனால் தான் அதனைப் பருகுபவர்களின் சருமம் மென்மையாகவும், பொலிவோடும் இருக்கிறது. அதற்காக இதனை பருகினால் தான் அழகைப் பெற முடியும் என்று சொல்லவில்லை. அழகாக வெளிப்படுவதற்கு ரெட் ஒயின் கொண்டு சருமத்தைப் பராமரிக்கலாம். மேலும் தற்போது ரெட் ஒயின் ஃபேஷியல் என்ற ஒன்றும் பிரபலமாக உள்ளது. பல பெண்களும் அந்த ஒயின் ஃபேஷியலை மேற்கொள்ள விரும்புகிறார்கள். இத்தகைய ஃபேஷியலை பணம் இருப்போர் மேற்கொள்ளலாம். ஆனால் பணம் இல்லாதவர்கள் நிலைமை என்ன? எனவே தான் தமிழ் போல்ட் ஸ்கை, இத்தகைய ரெட் ஒயினைக் கொண்டு வீட்டிலேயே எப்படி சருமத்தையும், கூந்தலையும் அழகாக பராமரிக்கலாம் என்று கொடுத்துள்ளது. அதைப் படித்து, ரெட் ஒயினை வாங்கி, எளிதாக அழகை மேம்படுத்துங்கள்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...