Mar 3, 2014

உக்ரைனில் ரஷ்ய கப்பல்கள்! போர் மூளும் அபாயம் (வீடியோ இணைப்பு)

உக்ரைனுக்கு இரண்டு போர்க் கப்பல்களை ரஷ்யா அனுப்பி உள்ளதால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
உக்ரைனில் ஜனாதிபதியாக பதவி வகித்த விக்டர் யானுகோவிச்சுக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது.
போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாத விக்டர் தலைமறைவானார், இதனையடுத்து இடைக்கால ஜனாதிபதியாக ஒலேக்சாண்டர் துர்ஷிநோவ், பிரதமராக அர்செனி யாத்செனியுக் பொறுப்பு ஏற்றனர்.
இதன்பின் ரஷ்யாவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள உக்ரைனின் கிரீமியா சுயாட்சி பிரதேசத்தில் போராட்டம் வலுவடைந்தது, ரஷ்ய ஆதரவாளர்கள் தலைநகரிலுள்ள அரசாங்க அலுவலகங்களை கைப்பற்ற, ரஷ்ய ராணுவமும் நுழைந்து 2 விமான நிலையங்களை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன. இது மேலும் 2 நகரங்களுக்கு பரவி ரஷ்ய ஆதரவாளர்களுக்கும், இடைக்கால அரசு ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது.
இந்த சூழ்நிலையில் உக்ரைனுக்கு கூடுதல் ராணுவத்தை அனுப்ப ரஷ்ய நாடாளுமன்றமும்
ஒப்புதல் கொடுத்தது.
இதனை தொடர்ந்து ரஷ்யா 2 போர்க்கப்பல்களை உக்ரைன் கடல் பகுதிக்கு அனுப்பியது, இந்த நீர்மூழ்கி எதிர்ப்பு 2 போர் கப்பல்களும் செவாஸ்தோபோல் நகருக்கு அருகே கருங்கடல் பகுதியில் நடமாடுவதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுப்பது குறித்து ராணுவ தளபதிகள் மற்றும் பாதுகாப்பு துறையினருடன் உக்ரைன் இடைக்கால ஜனாதிபதி ஒலெக்சாண்டர் துர்ஷிநோவ் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
அதோடு பிரதமர் யாத்செனியுக் இந்த விவகாரம் குறித்து ரஷ்ய பிரதமர் டிமிதே மெட்வதேயுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஷ்யா ராணுவத்தை உடனே வாபஸ் பெற கேட்டுக்கொண்டார்.
ரஷ்யா- உக்ரைன் நாடுகள் பதிலுக்கு பதிலடி கொடுக்க தயார் நிலைக்கு ஆயத்தமாகி வருவதால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...