Apr 13, 2014

வெள்ள அபாயத்தில் கனடா: எச்சரிக்கும் ஆய்வாளர்கள்



வெள்ள அபாயத்தில் கனடா: எச்சரிக்கும் ஆய்வாளர்கள்
 ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014,
கனடாவின் ஒன்ராறியோவில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் கவனமுடன் இருக்கும்படி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கனடாவின் ஒன்ராறியோ கிழக்கு நகர ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என்பதால் அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
இதை தடுக்க தொண்டர்கள் முக்கிய பகுதிகளில் மணல் மூட்டைகளை அணைகளாக கட்ட உதவ வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் நகராட்சியில் ஏற்கனவே அவசரகால நிலைமை பிறப்பிக்கபட்டுள்ளதாகவும் அதே நேரம் மேலதிக மழை வீழ்ச்சி ஏற்பட்டால், ஆறுகள் அணைகளை உடைத்துக் கொண்டு பாய்ந்துவிடும் என்ற காரணத்தால் வெள்ளத்தை தவிர்ப்பதற்கான முயற்சிகளை தீவிரமாக வானிலை ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை இரவு ஆறு ஒன்று உச்சத்தை தொட்டுவிட்டதாகவும் வேறு இரண்டு மெதுவாக உயரந்து வருவதாகவும் குயின்ரே பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது.
அத்துடன் ஏரி ஒன்று 24-மணித்தியாலங்களிற்குள் 12-செ.மீ வரை உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இது கடந்த 2008ம் ஆண்டில் ஏற்பட்ட மோசமான வெள்ளப் பெருக்கை விடவும் மிக மோசமாக இருக்கும் எனவும் கருதப்படுகிறது.
எனவே மக்கள் கவனமுடன் இருக்கும்படி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முகப்பு

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...