Oct 13, 2014

உலகின் 100 சிறந்த பிராண்டுகள் பட்டியல் முதலிடம் பிடித்த ஆப்பிள்!


appleஉலகின் 100 சிறந்த “பிராண்டுகள்’ பட்டியலில் ஐஃபோன் உள்ளிட்ட சாதனங்களைத் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்திய நிறுவனமான டாடா, பிரிட்டனில் தயாரிக்கும் லாண்ட் ரோவர் கார் 91-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
ஐஃபோன், மாக் கம்ப்யூட்டர், ஐ-பேட், ஐ-பாட் உள்ளிட்ட சாதனங்களைத் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 119 பில்லியன் டாலராக (சுமார் ரூ. 7.14 லட்சம் கோடி) உள்ளது.
இந்தப் பட்டியலில் கூகுள் இரண்டாமிடத்தில் உள்ளது. இதன் மதிப்பு 107 பில்லியன் டாலராகும் (சுமார் ரூ. 6.42 லட்சம் கோடி). 3-ஆம் இடத்தில் கோகா-கோலா உள்ளது. ஐபிஎம் 4-ஆம் இடத்திலும், மைக்ரோஸாஃப்ட 5-ஆம் இடத்திலும் உள்ளன.
4.47 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 27,000 கோடி) மதிப்புடன், லாண்ட் ரோவர் கார் உள்ளது. பிரிட்டனில் தயாரிக்கப்படும் இந்தக் காரைத் தயாரிக்கும் நிறுவனமானது டாடா குழுமத்தைச் சேர்ந்தது.
வளர்ச்சியடைந்த, வளர்ச்சியடையாத நாடுகள் என பாகுபாடு இல்லாமல், உலகெங்கும் அறியப்பட்ட பெயராக உள்ள நிறுவனங்கள், சாதனங்கள் அடங்கிய “100 சிறந்த பிராண்ட்’ பட்டியலை இன்டர்பிராண்ட் என்ற அமெரிக்க நிறுவனம் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...