Oct 25, 2014

கிருமிகளை அழிக்கும் மஞ்சள்



-இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள் மஞ்சள். மஞ்சளில் குர்க்குமின் (Curcumin ) எனும் வேதிப்பொருள் உண்டு. இதுவே மஞ்சளுக்கு நிறத்தை  தருகிறது. மஞ்சள் தனக்குள் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. தமிழர் பாரம்பரியத்தில் மஞ்சளுக்கு மகத்தான இடம் உண்டு. வழிபாட்டில்  துவங்கி, உணவு, மருந்து, அழகுசாதனப் பொருள், கிருமிநாசினி என தமிழர் வாழ்வில் மஞ்சளையும் மருத்துவத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. சித்த  மருத்துவத்தில் முக்கியப் பயன்பாட்டுப் பொருளாகவும் மஞ்சள் இருந்துள்ளது.


மஞ்சள் அழகு சாதனப் பொருளாக பெண்களால் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தப்படுகிறது. கஸ்தூரி மஞ்சள் முகத்திற்கு ஒருவித மினுமினுப்பையும்,  வசீகரத்தையும் தருகிறது. வாசனைப் பொடிகளிலும், வாசனைத் தைலங்களிலும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. சமையல் அறையில் மணக்கும் வசீகரம் விரலி  மஞ்சளுக்கே உரியது. மஞ்சள் தான் இருக்கும் இடத்தில் கிருமிகளை அழிப்பதுடன் நிறத்தால் அழகையும் தருகிறது.

ஒரு காலத்தில் நோய் வராமல் தடுப்பதற்காக வாசற்படிகளில்

மஞ்சளையும் துணிக்குப் போடும் சோப்பையும் கலந்து கட்டிகளுக்குப் பூசினால் உடைந்துவிடும். அம்மை நோய் பாதிக்கப்பட்டால் மஞ்சளுடன் வேப்ப  இலைகளையும் அரைத்து பூசுவது வழக்கம். அம்மை நோய் வந்தவர்களைச் சுற்றி மஞ்சள் நீரைத் தெளிப்பதால் நோய் பரவாமல் தடுக்கலாம். மது வகைகள், பழச்சாறு போன்றவற்றிலும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. 


இது பசியைத் தூண்டுவதோடு செரிமானத்திற்கும் உதவும் மருத்துவ குணம் கொண்டது. ரத்தத்தை சுத்தப்படுத்தி, குடற்பூச்சிகளைக் கொல்லும் ஆற்றல்  வாய்ந்தது. நீரழிவு மற்றும் தொழுநோயைக் கட்டுப்படுத்திக் குறைப்பதோடு, சரும நோய்களைப் போக்கக்கூடிய சக்தியும் மஞ்சளுக்கு அதிகமாக உண்டு. மஞ்சளை சுட்டு பற்பொடியாய் உபயோகித்தால் பல் நோய்கள் குணமாகும். மஞ்சளின் சத்து எண்ணெய் உட்கொண்டால் கல்லீரலில் பித்தநீர் சுரப்பதையும்  கட்டியாவதையும் குணப்படுத்த வாய்ப்பு உள்ளது. கலப்படமில்லாத மஞ்சள் தூள் கடைகளில் கிடைப்பது அரிதுதான். 

சுத்தமான விரலி மஞ்சளை வாங்கி வீட்டிலோ, மெஷினிலோ அரைத்து வைத்தும் பயன்படுத்தலாம். மஞ்சள் கலந்த குழம்பு நல்ல மணம், நிறம் கொடுப்பதோடு,  வயிறு தொடர்பான நோய்களையும் போக்குகிறது. இறைச்சி வகைகள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கிறது. பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி,  சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால், நோய் தீரும். பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் வயிற்று வலி, கர்ப்பப்பை சிக்கலுக்கு, மஞ்சள் பொடி  சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கிறது.

விரலி மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கடும் தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை  குணமாகும். மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும்.மஞ்சள் பூசிக் குளிப்பதால் உடலில் தோன்றும் துர்நாற்றத்தை விரட்டலாம்.  மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசினால் படைகள், விஷக்கடிகள் நீங்கும். இவ்வளவு மருத்துவ குணங்களைக் கொண்ட மஞ்சளை  சமையல், அழகு சாதனம், மருந்து என தேவைக்கு ஏற்பட பயன்படுத்தலாம். வீட்டிலேயே எளிய முறையில் பயன்படுத்த வாய்ப்புள்ளதால் இனி மஞ்சளை  மறுப்பாரும் உண்டோ!
மஞ்சள் பூசுவது, வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பது போன்ற பழக்கம் இருந்தது. சிறு  உடல் நலப் பிரச்னைகளுக்கு மருந்தாகவும் பயன்பட்டது. மூக்கடைப்புக்கு மஞ்சளை சுட்டு அந்தப் புகையை மூக்கின் வழியாக இழுத்தால் குணமாகும். வேனல்  கட்டி, நகச்சுற்றி, வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு மஞ்சளை அரைத்து மாவுடன் கலந்து பாதிப்பு உள்ள இடத்தில் பற்றுப் போட வேண்டும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...