Oct 14, 2014

சனிக்கிரகத்தின் வளையங்கள்

சனிக்கிரகத்தின் வளையங்கள்



சனிக்கிரகத்தைச் சுற்றி அழகான மூன்று வளையங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டு வந்தது. அவற்றில் வெளிப்புறம் காணப்படும் இரண்டு வளையங்களும் மிகப் பிரகாசத்துடன் திகழ்கின்றன. இவற்றைத் தாண்டி சனியின் மிக அருகாமையில் காணப்படும் உள் வளையம், அவ்வளவு ஒளியுடையது அல்ல. பிரகாசமான இரண்டு வளையங்களையும் 1610-ம் ஆண்டு கலிலியோ என்ற வானவியல் அறிஞர் தான் கண்டுபிடித்தார். ஆனால், அவருக்கு அதைப்பற்றித் தெரியவில்லை. 1850-ம் ஆண்டு தான் மூன்றாவது வளையம் கண்டுபிடிக்கப்பட்டது.
வளையங்களாகத் தெரிபவை, உண்மையில் வளையங்கள் கிடையாது. முன்பு எப்போதோ சனியைச் சுற்றி வந்த உபகிரகம் ஒன்று, சனியை நெருங்கி வரும்போது உடைந்து துகள்களாகி சனியைச் சுற்றி வருகிறது என்கிறார்கள், விஞ்ஞானிகள். இந்த வளையங்கள் பல்லாயிரக்கணக்கான சிறிய துகள்களால் ஆனவை என்ற கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் துகள்கள் எங்கிருந்து வந்தன என்பது மட்டும் மர்மமாகவே உள்ளது.
செயற்கைக்கோளை சனிக்கிரகத்துக்கு ஆராய்ச்சி செய்ய அனுப்பும்போது, செயற்கைக் கோள் அந்த வளையங்களை உடைத்து விடாதா? என்று பலருக்கும் சந்தேகம் தோன்றலாம்.
தற்போதைய ஆய்வுகளின்படி சனியைச் சுற்றி 11 வளையங்கள் இருப்பதாகத் தெரிவிக் கின்றனர், ஆராய்ச்சியாளர்கள். இன்னும் கூட சில வளையங்கள் இருக்கலாம் என்றும் அவர்கள் நம்புகின்றனர். சில வருடங்களுக்கு முன்புகூட புதிதாக இரண்டு வளையங் கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வளையங்கள், பெரும்பாலும் தூசியும், பனித்துகள் களும் நிறைந்தவை.
பயனியர் 2 (1979), வாயேஜர் 1 (1980), வாயேஜர் 2 (1981) ஆகிய விண்கலங்கள் இதுவரை சனிக்கிரகத்துக்குச் சென்றிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதில் பயனியர் விண்கலம், சனிக்கிரகத்தில் இருந்து சுமார் 20 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் பறந்தது. வாயேஜர் விண்கலங்களும் சனியின் குறிப்பிட்ட தூரத்தில் பறந்து ஆராய்ச்சி செய்துள்ளன.
2004-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதியன்று, சனிக்கிரகத்தின் வளையங்களைத் துளைத்துக் கொண்டு ழைந்தது காசினி-ஹைஜீன்ஸ் விண்கலம். 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந் தேதி ஹைஜீன்சை மட்டும் சனியின் துணைக்கோளான டைட்டனில் இறக்கி விட்டது, காசினி.
காசினி, சனிக்கிரகத்தின் வளையங்களுக்குள் ழைந்ததால், அந்த வளையங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. காரணம், வளையங்களில் இருப்பவை தூசியும், பனித் துகள்களும் தான். இவை ஒரே இடத்தில் திடப்பொருள் போல இருக்காது. விண்கலம் அவற்றில் மோதினாலும், அவை வளையத்துக்குள்ளேயே வேறொரு இடத்தில் சுற்றிக் கொண்டிருக்கும்.
Categories:ள்

மிகச் சிறிய பறவை!



உலகிலேயே மிகச் சிறிய பறவை கிபா நாட்டில் உள்ளது. `மெல்லிஸிகா ஹெலனே’ என்ற தேன்சிட்டுதான் அது. அப்பறவையின் எடை வெறும் 2 கிராம்தான். அலகு முதல் வால் வரை அதன் நீளம் 2 அங்குலம். பெண் பறவையை விட ஆண் பறவை கால் அங்குலம் சிறியது. இந்தக் கணக்குப்படி பார்த்தால் உலகின் மிகச் சிறிய பறவை இதுதான். இதில் ஆண் பறவை வேகமாகச் சிறகுகளை அடிக்கும் தன்மை கொண்டது. அது ஒரு வினாடிக்கு 80 தடவைகள் இறக்கையை அடிக்கும்.    அப்போது `விர்’ என்ற சப்தம் மட்டும் கேட்கும். ஆண் பறவையும், பெண் பறவையும் தனித்தனியாகவே பறக்கும். இவற்றின் இனச்சேர்க்கை சில வினாடிகளில் முடிந்து விடும். இந்த நேரத்தைத் தவிர மற்ற வேளைகளில் ஆணும், பெண்ணும் ஒன்றையொன்று கண்டு கொள்ளாது. இவை சிலந்தியின் வலையைக் கொண்டு மரக்கிளைகளில் மிகச் சிறிய கூடுகளை அமைத்துக்கொள்கின்றன. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதால் இப்பறவை களுக்கு அடிக்கடி உணவு தேவைப்படும். சிறிய சிலந்திகளும், ஈக்களும்தான் இவற்றின் உணவு. ஆனால் இதற்கு மிகவும் பிடித்த உணவு பூந்தேன்தான். எனவே மலர்களைத் தேடி இவை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சளைக்காமல் பறக்கும்.

பார்க்க முடியாத கிரகம்



சூரியக்குடும்பத்தில் உள்ள புதனைத்தான் `பார்க்க முடியாத கிரகம்’ என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். ஆங்கிலத்தில் `மெர்குரி’ என்று அழைக்கப்படும் புதன், சூரியனுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. புதன் குறித்த சில அடிப்படைத் தகவல்களைப் பார்ப்போம்…
* பூமியின் விட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு தான், புதனின் விட்டம். அதேபோல பூமியின் மொத்த எடையில் 5.5 சதவீதம் தான் புதனின் எடை.
* சூரியனை மிக வேகமாகச் சுற்றி வரும் புதன், சூரியனில் இருந்து சுமார் 5.8 கோடி கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
* நம்முடைய நாள் (24 மணி நேரம்) கணக்குப்படி 88 நாட்களில் சூரியனைச் சுற்றி வருகிறது, புதன். அதாவது, புதனில் ஒரு வருடம் என்பது நமக்கு 88 நாட்களாகும்.
* புதன், தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 55 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. * மெர்குரி என்பது, ரோம் நாட்டிலுள்ள `சந்தனத்தால் ஆன இறக்கைகளைக் கொண்ட தேவதூதனின்’ பெயராகும். * இந்தக் கிரகம் சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால், சூரிய ஒளியின் பிரகாசத்துக்கு நடுவே இதைக் காண்பது கடினம். பொதுவாக சூரிய உதயத்திற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பும், சூரிய அஸ்தமனத்திற்கு ஒருமணி நேரத்திற்குப் பின்பும் தான் இதைப் பார்க்க முடியும். அதையும் எப்போதாவது தான் பார்க்க முடியும். எனவே, புதனைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
* புதனுக்கு மிக மெல்லிய வளிமண்டலம் இருக்கிறது. இந்த வளிமண்டலம், சோடியம், பொட்டாசியம், ஹீலியம் மற்றும் ஹைட்ரஜனால் ஆனது. * பகல் நேரத்தில் 427 டிகிரி செல்சியஸ் வெப்பமும், இரவு நேரத்தில் 173 டிகிரி செல்சியஸ் வெப்பமும் புதனில் காணப்படும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...