Oct 26, 2014



புளிய மரம்


புளிய மரம் பேபேசி இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதன் கனி புளிப்புச் சுவை கொண்டது. இது தென்னிந்தியச் சமையலில் முக்கியமான ஒன்றாகும்.புளிய மரங்களை பார்க்கும்போது வயதான பெரிய மனிதர்களை பார்க்கும் ஒரு உணர்வு உண்டாகிறது! இப்போது இருக்கும் புளிய மரங்கள் எல்லாம் மிக வயதான மரங்களாக தோன்றுகிறது

நயாகரா அருவி


இது உலகத்திலேயே உள்ள அருங்காட்சிகளில் ஒன்றாக போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் இதனை பார்க்க 10 மில்லியன் மக்கள் வருகின்றனர். இப்பேரருவி கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குமான எல்லையில் ஓடும் சுமார் 56 கி.மீ நீளமுள்ள நயாகரா ஆற்றின் பாதி தொலைவில் அமைந்துள்ளது. இது தனியான இரண்டு பெரிய அருவிகளைக் கொண்டது. சுமார் 85% நீர் கனடாவில் உள்ள ஹோஸ் (ஹார்ஸ்) ஷூ அருவி என ஆங்கிலத்தில் வழங்கப்படும் குதிரை இலாட அருவியிலும், மீதம் உள்ளது அமெரிக்கப் பகுதியில் உள்ள அமெரிக்கன் அருவியிலும் விழுகின்றது. இவை இரண்டும் அல்லாமல் ஒரு சிறிய பிரைடல் வெய்ல் அருவியும் உண்டு. குதிரை இலாட அருவி 792 மீ அகலம் கொண்டது, உயரம் 53 மீ. அதிக உயரமானதாக இல்லாவிடினும் நயகாரா அருவியானது மிகவும் அகலமானது. அமெரிக்கன் அருவி 55 மீ உயரமும், 305 மீ அகலமும் கொண்டது. நயாகராப் பேரருவியில் ஆறு மில்லியன் கன அடிக்கு (168,000 m³) அதிகமான நீரானது ஒவ்வொரு நிமிடமும் இந்த அருவியினூடு பாய்ந்துசெல்கிறது. உலகில் மிகவும் பரவலாக அறியப்பட்ட இந்த அருவியானது வட அமெரிக்காவின் அதிசக்தி வாய்ந்த அருவியாகவும் இருக்கிறது.

வான வில்லாய் நீர்வீழ்ச்சி

இரவில் மாறிவிடும் நிறக் காட்சி !

வீணாகும் மாய விளக்குகள் !

வேடிக்கை காட்டும் பிழைப்புகள் !

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...