May 1, 2015

தொடர்ந்து குமறும் எரிமலை: புகைமண்டலமான சிலி (வீடியோ இணைப்பு)



சிலி நாட்டில் உள்ள கால்புகோ(Calbuco) எரிமலை மீண்டும் 3வது முறையாக வெடித்ததன் காரணமாக புகை பரவி வருகிறது என்று சர்வதேச புவியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.சிலியின் தலைநகரான சாண்டியோகோவில் இருந்து 1400 கிலோ மீற்றர் தொலைவில் தெற்கு துறைமுக நகரமான பர்டோமோண்ட் பகுதியில் கால்புகோ எரிமலை உள்ளது.
கடந்த 43 ஆண்டுகளாக செயலற்று இருந்த இந்த எரிமலை கடந்த 24ம் திகதி வெடித்தது.
எரிமலை வெடித்து சிதறியதில், வானில் சாம்பல் மற்றும் புகைகை கக்கி வருகிறது. சுமார் 20 கிலோ மீற்றர் உயரத்துக்கு சாம்பல் கலந்த புகை
பரவியுள்ளது.
கடந்த வாரம் இராணுவம் மற்றும் பொலிஸ் படையினர் இணைந்து, அப்பகுதியில் உள்ள 4,400 குடியிருப்புவாசிகளை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.
தற்போது இந்த எரிமலையில் இருந்து வெளியேறும் புகைகள், அர்ஜெண்டினா வரை பரவியுள்ளது.
எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலையில் இருக்கும் 90 எரிமலைகளில், மிகவும் ஆபத்தானது கால்புகோ எரிமலை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...