Apr 16, 2012

கோவிலில் செய்ய கூடாதவை

1.கர்ப்ப கிரஹத்தின் கடவுளுக்கு அலங்காரம் நடக்கும்போது த...ிரையிட்டுருப்பார்கள். அச்சமயம் வழிபடுதல் கூடாது. 2.சுவாமிக்கும் பலி பீடத்திற்கும் குறுக்கே செல்லக்கூடாது. 3.பலிபீடம், விக்ரஹம் ஆகியவற்றின் நிழலை மிதித்தல் கூடாது. 4.ஆலயத்தில் நண்பர்களையோ பெரிய மனிதர்களையோ கண்டால் வணங்க கூடாது. இறைவனே மிகப் பெரியவன். அத்தகைய ஆலயத்தில் அனைவரும் சமம். 5.விபூதி, குங்குமம், பிரசாதம் வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டபின் மீதமானவற்றை கீழே கொட்டுதல் சுற்றுத் தூண்களில் தடவுதல், கொட்டுதல் கூடாது. மீதமானவற்றை ஒரு தாளில் மடித்துச் சென்று வீட்டின் பூஜையறையில் வைத்துக் கொண்டு தினசரி இட்டுக் கொள்ளலாம். 6.பிரசாதங்களை ஒருவருக்கொருவர் இட்டுக் கொள்ளுதலும் கூடாது. 7.கோவிலுக்குள்ளேயோ, கோவில் மதிற்புறங்களிலோ எச்சில் துப்புதல், மலம், ஜலம் கழித்தல் கூடவே கூடாது. 8.விபூதி, சந்தன அபிஷேகம், பால் அபிஷேகம் தவிர சுவாமிக்கு இதர திருமஞ்சனம் ஆகும்போது பார்க்க கூடாது. 9.கோவிலில் உள்ள திருவிளக்குகளை கையால் தூண்டவோ தூண்டிய கையை சுவரில் துடைக்கவோ கூடாது. மீதியிருக்கும் எண்ணையை தலையில் தடவிக் கொள்ள கூடாது. 10.சுவாமிகளை தொடுவது, சுவாமிகளின் திருவடிக்கடியில் கற்பூரம் ஏற்றுதல் கூடாது. 11.சட்டை அணிந்து செல்வதை தவிர்ப்பது நல்லது. லுங்கி அணிந்து செல்லுதல் கூடாது. அதிக அழுத்தமான வண்ண உடை ஆடம்பரமான உடை அணிந்து செல்லக் கூடாது. இது மற்றோரின் கவனத்தை திசை திருப்பிவிடும். எளிமையான கதர் துணிகளை அணிந்து செல்லுதல் கூடாது. 12. கோவிலை வேகமாக வலம் வருதல் கூடாது. அடிமேல் அடி வைத்து வலம் வரவேண்டும். மிக நிதானமாக அனைத்து மூர்த்திகளையும் வணங்கிச் செல்ல வேண்டும். 13. எவருடனும் உலக விஷயங்கள், குடும்ப விஷயங்கள் பேசிக்கொண்டு கோவில்களில் வலம் வரக்கூடாது. ஆலயத்தினுள் தெய்வசக்தி நிரம்பியிருக்கும். அச்சக்தி நம் உடலில் ஊடுருவும்படி இறைவனையே மனம் முடிக்க நிரம்பி வலம் வருதல் வேண்டும். 14. போதை வஸ்துக்கள், திண்பண்டங்கள் வாயில் வைத்துக் கொண்டு ஆலயத்தினுள் பிரவேசிக்ககூடவே கூடாது.

ஓவியம் தீட்டும் ரோபோ கண்டுபிடிப்பு

விளையாட்டு சாதனங்களில் தொடங்கிய ரோபோக்கள் படிப்படியாக ஆதிக்கத்தை வளர்த்து கார் தொழிற்சாலைகள், கனரக சாதனங்கள் உற்பத்தி வகையில் புகுந்தன. பின்னர் மருத்துவமனைகளில் சில குறிப்பிட்ட ஆபரேஷன்களையும் வெற்றிகரமாக செய்து சாதனை நிகழ்த்தின. தற்போது ஜெர்மனி நாட்டில் கார்ல்ஸ்ருதி நகரை சேர்ந்த ஒரு நிறுவனத்தினர் ஓவியம் தீட்டும் ரோபோவை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோ முன்பு அமர்ந்தால் போதும் 10 நிமிடங்களில் நமது உருவத்தை மிகவும் தத்ரூபமாக வரைந்து விடுமாம். அதன் செயல்பாடு குறித்து இதனை வடிவமைத்த நிறுவனத்தின் விஞ்ஞானி மார்டினா ரிசெர் கூறுகையில், இதில் உள்ள கேமரா மனித உருவத்தை படம் எடுத்து, நுட்பமான மென்பொருள் உதவியுடன் ரோபோ கரங்களுக்கு அது கட்டளையிடப்பட்டு உருவம் வரையப்படுகிறது என்றார். விரைவில் இந்த ரோபோ சந்தைகளில் அறிமுகமாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Thirai Video - Tamil Live Movies, Videos, Songs. Watch Now, Vijay TV Show, Sun TV, Kalaingar TV Show, Thiraivirunthu, Thiraimovie, Movielanka

Thirai Video - Tamil Live Movies, Videos, Songs. Watch Now, Vijay TV Show, Sun TV, Kalaingar TV Show, Thiraivirunthu, Thiraimovie, Movielanka

உதயநிதி படத்தைப் பார்த்த தந்தை ஸ்டாலின்

கொலிவுட்டில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் படஅதிபரான உதயநிதி நாயகனாக நடித்துள்ள முதல் படம் “ஒரு கல் ஒரு கண்ணாடி” ஆகும். இப்படத்தில் ஹன்சிகா மோத்வானி, சந்தானம், சரண்யா ஆகியோர் நடித்துள்ளனர். நகைச்சுவை இயக்குனர் ராஜேஷ் இயக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். உதயநிதிக்கு முதல்படம் என்றாலும் அவருடைய எதார்த்தமான நடிப்பு திரையுலகில் அனைவரையும் கவர்ந்து விட்டது. இந்நிலையில் உதயநிதி தந்தை ஸ்டாலின் தனது மகன் நடித்த படத்தை திரையரங்கில் மக்களோடு சேர்ந்து பார்த்து மகிழ்ந்துள்ளார். ஸ்டாலின், தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சித் தலைவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்செல்ல

Apr 15, 2012

உங்கள் பாஸ்வேர்டை நினைவில் கொள்ள புதிய மென்பொருள் அறிமுகம்

இன்றைய உலகில் மின்னஞ்சலை(இ-மெயில்) பயன்படுத்தாக நபர்கள் யாரும் இல்லை எனலாம். ஒவ்வொரு நபரும் ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல்களை பயன்படுத்துகின்றனர். எனவே ஒவ்வொரு கணக்கிருக்கும் வெவ்வேறான பாஸ்வேர்ட் கொடுத்து இருப்பதால் அதை அனைத்தையும் ஞாபகம் வைத்து கொள்வது என்பது இயலாத காரியம். இச்சூழ்நிலையில் உங்களது பாஸ்வேர்ட்டை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்கு ஒரு சிறிய மென்பொருள்(சாஃப்ட்வேர்) உதவி புரிகிறது. இந்த சாப்ட்வேர்ரில் உங்களின் அனைத்து பாஸ்வேர்ட் ஐயும் சேமித்து அனைத்திற்கும் சேர்த்து ஒரே ஒரு பாஸ்வேர்ட் கொடுத்து கொள்ளலாம். அதை மட்டும் ஞாபகம் வைத்துக் கொண்டால் போதும். மென்பொருளின் சிறப்பம்சங்கள்: எந்தவொரு நபரும் உங்களது பாஸ்வேர்ட்டை திருடாத படி கடினமான பாஸ்வேர்ட் இந்த மென்பொருள் மூலம் உருவாக்கலாம். குறிப்பிட்ட ஒரு கோப்பை ஒட்டுமொத்த பாஸ்வேர்ட் ஆக தெரிவு செய்யும் வசதி. மின்னஞ்சல், இயங்குதளம் மற்றும் இணையம் என அனைத்திற்கும் தனித்தனியான பாஸ்வேர்ட்டை சேமித்து வைத்துக் கொள்ளும் வசதி. போர்ட்டபிள் மென்பொருள் என்பதால் கணணியில் நிறுவி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை மற்றும் ஏராளமான வசதிகள் உள்ளது. இதற்கு முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்தால் வரும் ZIP கோப்பை Extract செய்து Key pass என்ற கோப்பை ஓபன் செய்யுங்கள்.அதன் பின் தோன்றும் விண்டோவில் அதில் உள்ள New என்ற பட்டனை அழுத்தவும். அதன் பின் தோன்றும் விண்டோவில் உங்களின் Master pass word தெரிவு செய்து கொள்ளுங்கள் அதன்பின் தோன்றும் விண்டோவில் உங்களின் pass word வகையை தெரிவு செய்து கொண்டு Add Entry என்ற பட்டனை அழுத்தி உங்கள் pass word சேமித்து கொள்ளலாம். இதே முறையில் உங்களையுடைய அனைத்து பாஸ்வேர்ட்களையும் இந்த மென்பொருளில் சேமித்து கொள்ளுங்கள். மேலும் இந்த மென்பொருள் மூலம் மிக கடினமான பாஸ்வேர்ட் களை உருவாக்கலாம். இதற்கு Tools - pass word generate சென்று கடினமான பாஸ்வேர்ட்களை உருவாக்கி கொள்ளலாம். இதன் மூலம் உருவாகும் பாஸ்வேர்ட் தானாகவே இந்த மென்பொருளில் சேமிக்கப்படும்.

Apr 14, 2012

Ramanathaswami Temple, Rameswaram - ராமநாதசுவாமி கோவில், இராமேஸ்வரம்

Ramanathaswami Temple, Rameswaram - ராமநாதசுவாமி கோவில், இராமேஸ்வரம்

அம்மன் தரிசனம் - Amman Dharsanam Monthly Aanmiga, Kalachara Magazine

அம்மன் தரிசனம் - Amman Dharsanam Monthly Aanmiga, Kalachara Magazine

Ramanathaswami Temple, Rameswaram - ராமநாதசுவாமி கோவில், இராமேஸ்வரம்

Ramanathaswami Temple, Rameswaram - ராமநாதசுவாமி கோவில், இராமேஸ்வரம்

அமெரிக்க ஐக்கிய நாடு - தமிழ் விக்கிப்பீடியா

அமெரிக்க ஐக்கிய நாடு - தமிழ் விக்கிப்பீடியா

வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன் |

வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன் |

சோழர் - தமிழ் விக்கிப்பீடியா

சோழர் - தமிழ் விக்கிப்பீடியா

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...