May 5, 2012

புரதங்கள்



புரத உணவுச்சத்து மிகவும் முக்கியமானது. முக்கியமாக வளரும் பருவத்தினருக்கும், நோய் குணமாகி உடல் தேறி வருபவர்களுக்கும், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும், கடுமையான உடல் உழைப்பில் ஈடுபட வேண்டியவர்களுக்கும் இந்த உணவுச்சத்து மிகவும் அவசியமானது.

    உடல் திசுக்களின் கட்டுமானத்திற்கும், தோல் எலும்புகள் மற்றும் தசைகளின் பழுது பார்ப்பிற்கும், உடலுக்கு அடிப்படை பலத்தை வழங்குவதற்கும் புரதம்  தேவைப்படுகிறது.
    புரத உற்பத்திக்கு சுமார் 23 வகையான அமினோ அமிலங்கள் தேவைப்படுகின்றன. இவற்றுள் 15 அமினோ அமிலங்களை நம்முடைய உடலே உணவிலுள்ள வேறு பொருட்களிலிருந்து தயாரித்து கொள்கிறது. மீதமுள்ள வேறு பொருட்களிலிருந்து தயாரித்து கொள்கிறது.
    மீதமுள்ள 8 அமினோ அமிலங்களையும் நம்முடைய உடலினால் தயாரிக்க முடியாது. எனவே

உணவுகளின் மதிப்புகள்




உணவுகளின் மதிப்புகள்
உணவின் தரத்தை போலவே உணவின் அளவும் மிகவும் முக்கியம். இந்த உணவுப் பொருள்களை எந்த அளவில் உணவில் சேர்த்து கொள்வது நல்லது? சாதாரணமாக, அலுவலகம் செல்லும் ஒரு சராசரி மனிதருக்கு தினமும் சுமார் 1500 லிருந்து 2000 கலோரிகள் வரை தேவைப்படும்.

வளரும் பருவத்தினருக்கும், விளையாட்டு வீரர்களுக்கும், உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கும் பொதுவாக ஒரு இயல்பான மனிதருக்கு தேவைப்படும் அளவை விட இரண்டு மடங்கு அதிக கலோரிகள் தேவைப்படும். எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருள்களின்

தக்காளி

மருத்துவக் குணங்கள்:

    நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் தக்காளிப் பழத்தின் மருத்துவக் குணங்களைப் பற்றி இங்கே அறிந்து கொள்வோம்.
    தக்காளியைப் பொதுவாக, சமைக்காமல் பச்சையாகச் சாப்பிடுவதால் இதன் முழுப்பலனையும் பெற முடிகிறது. அப்படிச் சாப்பிடுவது உடலுக்குப் பலம் தருகிறது. இன்னும் சொல்லப்போனால், உடல் பலவீனமாக இருக்கிறவர்களுக்கு அது டானிக் போன்றது.
    இதில் வைட்டமின் ஏ- சுமார் 91 மில்லி கிராம் உள்ளது. தவிர வைட்டமின் பி-1, பி-2, 17 மில்லி கிராமும், வைட்டமின் சி- 9 மில்லி கிராமும், சுண்ணாம்புச்சத்து 2 மில்லி கிராமும் அடங்கி உள்ளன.
    இவை தவிர, நமது உடலில் ரத்த உற்பத்திக்குப் பயன்படுவதோடு மட்டுமின்றி, ரத்தத்தைச் சுத்திகாரிப்பதற்கும், சீரான ரத்த ஓட்டத்திற்கும் இது பயன்படுகிறது.
    தக்காளியை எந்த விதத்தில் சாப்பிட்டாலும்

மாதுளை

மருத்துவக் குணங்கள்:

    சிலருக்கு தலையில் புழுவெட்டு இருந்தால் முடி ஏராளமாக உதிரும். இதைச் சரி செய்யும் தன்மை மாதுளைக்கு உண்டு.
    புளிப்பு ரக மாதுளம் பழத்திலிருந்து 3 டீஸ்பூன் சாறு எடுத்து, அதை தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாக தடவ வேண்டும்.
    மாதுளம்பழத்தின் தோல் பகுதியை நன்றாகக் காய வைத்து பவுடராக்க வேண்டும். இதனுடன் பயத்தம்பருப்பு பவுடரை சம அளவு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் குளித்த பிறகு, உடலில் இந்த பவுடரை பூசி கழுவ வேண்டும். துர்நாற்றம் நீங்குவதுடன் உடலும் குளிர்ச்சியாகி விடும்.
    ஒரு டீஸ்பூன் மாதுளை ஜூஸ், அரை டீஸ்பூன் சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் பளபளப்பு கூடும்.
    ஒரு மாதுளம்பழத்தை நான்காக வெட்டி, அதில் ஒரு துண்டை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, ஆற வைத்துக் கிடைக்கிற தண்ணீரால் கண்களை கழுவினால், கண் பொங்குவது

தூதுவேளை


வணக்கம்.வள்ளலார் எனப்படும் இராமலிங்க அடிகள் சிறப்பித்து கூறிய மூலிகைகளுள் ஒன்று தூதுவேளை.அறிவை விளக்க,நினைவாற்றலை பெருக்க,கபத்தை கரைக்க தூதுவேளை உண்ணவேண்டும் என்கிறார் வள்ளலார்.சிறிய முட்கள் உடைய இலைகள்,பச்சைநிறமான காய்கள்,சிகப்புநிற பழங்களுடன் காணப்படும் கொடியினம் தூதுவேளை.தமிழகம் முழுவதும் காண்ப்படுகிறது. இதன் பயன்கள்.
1.இலையை நெய்யில் வதக்கி துவையலோ,அல்லது கடைந்து குழம்பாகவோ சாப்பிட்டு வர கபம் நீங்கி உடலுக்கு

அரசமரம் மர‌த்‌தி‌ன் சிறப்பு!

அரசமரம் மர‌த்‌தி‌ன் சிறப்பு!

புவியில் வாழும் உயிர்களுக்கு உயிர் கொடுப்பது மரங்கள்தான்.
மரங்கள்தான் சூரிய ஒளியிலிருந்து வெப்பத்தை உள்வாங்கி, குளோரோபில் மூலம் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சி ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.
இதனாலேயே தாம் நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். அப்படி நம் முன்னோர்கள் வழிபட்ட மரங்களுள் அரச மரமும் ஒன்று.இன்று குளக்கரை, கோவில்களில் அரச மரம் இல்லாத கிராமங்களை நாம் காண முடியாது. நீண்ட காலம் வாழும் அரச மரங்கள் தெய்வமாக போற்றப்படுகின்றன. வேம்பை பெண் தெய்வமாக வணங்குவார்கள். அரச மரத்தை ஆண்தெய்வமாக வணங்குவர். பெரும்பாலும் அரச மரம் இருக்கும் இடமெல்லாம் பிள்ளையார் சிலை இருக்கும்.

புத்தபிரான் போதி மரத்தின் கீழ் ஞானம்

May 3, 2012

கொத்தமல்லி

கீரைகளின் இளவரசி கொத்தாக வளரும் கொத்தமல்லி.

இவை குளிர்ச்சி தரும். நல்ல மணம் தரும். கொலஸ்ட்ராலை குறைக்கும். உயிர் நாடியான இருதயத்தை மேம்படுத்துவதால் “இருதய கந்தம்” என்றும் போற்றுகின
மருத்துவக் குணங்கள்:

    உலகில் முதன் முதலாக உணரப்பட்ட மருத்துவப் பொருள் மூலிகைகளே.  நாம் அன்றாடம் பயன்படுத்தும் கீரை, காய்கள், கனிகள் அனைத்துமே ஒவ்வொரு வகையில் மருத்துவப் பயன் கொண்டவையாகும்.
    மக்கள் பிணி நீங்கி  நீண்ட ஆரோக்கிய வாழ்வு வாழ்வதற்கும், இந்த மூலிகைகள் நமக்கு உதவு கின்றன.  இதனையே நாம் கற்ப மூலிகைகள் என்று அழைக்கிறோம்.  மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், கொத்தமல்லி போன்றவற்றை தினமும் மசாலாவாக அரைத்து குழம்பு செய்து உண்ணும் வழக்கம் தென்னிந்தியாவிற்கே உரிய சிறந்த பழக்கமாகும்.
    கறிவேப்பிலை போல் கொத்தமல்லியும் நம் சமையலில் அதிகம் இடம்பெறும் ஒரு மூலிகைப் பொருள் ஆகும்.  இது வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படுவது என நம்மில் பலர்

தேங்காய் எண்ணெய்

மருத்துவக் குணங்கள்:

    சமையலுக்கு பல எண்ணெய்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் தேங்காய் எண்ணெயைஅவற்றில் முதலிடம் பிடித்துள்ளது.
    வெப்ப மண்டலப் பகுதிகளில் வாழும் மக்களின் ஆரோக்கியத்தை ஆராய்ந்தால் தேங்காய் எண்ணெயின் பயனை பல ஆயிரம் ஆண்டுகளாக அனுபவித்து வருவதைக் காணலாம்.
    பாரம்பரிய உணவு முறைகளில் தேங்காய் சேர்த்துச் சமைப்பதே பிரதானமாக இன்றும் உள்ளது. 1930-களில் தென் பசிபிக் நாடுகளில் சுற்றுப்பயணம் செய்த பல் மருத்துவரான டாக்டர் வெஸ்டன் பாரம்பரிய உணவுகளையும் அதன் ஆரோக்கிய குணங்களையும் ஆராய்ந்தபோது அவற்றை உண்ணும் மக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் சிறப்பாக இருந்ததைக் கண்டறிந்தார்.
    தேங்காய் எண்ணெயில் அதிக அளவு கொழுப்புச் சத்து இருந்தாலும் மக்கள் திடகாத்திரமாக இருந்தனர். இதுபோல்

பூசணிக்காய்



மருத்துவக் குணங்கள்:

    பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது.
    காய்கறி வகைகளில் ஒன்றான, இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத் தணிக்கும்.
    சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல் வலி தீரும். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.
    மருத்துவத்தில் பூசணிக்காயின் கதுப்பு, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி,

காரட்

மருத்துவக் குணங்கள்:

    இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை எனலாம். இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை.
    கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.
    வைட்டமின் “ஏ” சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.
    இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.
    இவை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது. மேலும், குடல் புண்கள் வராமல்

வெள்ளரிக்காய்


மருத்துவக் குணங்கள்:

    காய்கறிகளுள்ளே குறைவான கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் கிடைக்கும் கலோரி 18 தான்.
    விஞ்ஞானிகள் வெள்ளரிக்காயைப் பழவகையில் சேர்த்துள்ளனர்; ஆனால், மக்கள் இதைக்காய்கறிப் பட்டியலில் சேர்த்துள்ளனர்; பச்சையாகவும், சமையலில் சேர்த்தும் சாப்பிடுகின்றனர்.
    வெள்ளரிக்காய், குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத்தனிச்சுவையுடையது. நன்கு செரிமானம் ஆகக்கூடியது. சிறுநீர்ப்பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது.
    இக்காய் பித்த நீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது.
    அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகளை, வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் குணமாக்குவதில் வல்லமை மிக்க உணவாகத் திகழ்வதையும் நிரூபித்துள்ளன.
    ஆந்திர உணவில் எப்போதும் வெள்ளரிக்காயும்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...