May 5, 2012

தூதுவேளை


வணக்கம்.வள்ளலார் எனப்படும் இராமலிங்க அடிகள் சிறப்பித்து கூறிய மூலிகைகளுள் ஒன்று தூதுவேளை.அறிவை விளக்க,நினைவாற்றலை பெருக்க,கபத்தை கரைக்க தூதுவேளை உண்ணவேண்டும் என்கிறார் வள்ளலார்.சிறிய முட்கள் உடைய இலைகள்,பச்சைநிறமான காய்கள்,சிகப்புநிற பழங்களுடன் காணப்படும் கொடியினம் தூதுவேளை.தமிழகம் முழுவதும் காண்ப்படுகிறது. இதன் பயன்கள்.
1.இலையை நெய்யில் வதக்கி துவையலோ,அல்லது கடைந்து குழம்பாகவோ சாப்பிட்டு வர கபம் நீங்கி உடலுக்கு
வலு கொடுத்து அறிவாற்றலை அதிகரிக்கும்.
2.இலைச்சாற்றை காலை,மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர எலும்புருக்கி,மார்புசளி நீங்கும்.
3.காயை தயிர்,உப்பில் ஊறவைத்து பதப்படுத்தி வறுத்து உண்டுவர இதய பலவீனம்,மலச்சிக்கல் தீரும்.
4.இதன் முழு சமூலத்தையும் 50கிராம் அளவு நீரில் காய்ச்சி கஷாயமாக காலை,மாலை அருந்திவர இரைப்பு,சளி,இருமல் தீரும்.
5.பத்து அல்லது 12 தூதுவேளைப்பூக்கள் எடுத்து பாலில் காய்ச்சி ஒரு மண்டலம் சாப்பிட்டுவர உடல் பலம், முகத்தில் வசீகரமான அழகை பெறலாம்.
6.தூதுவேளை,பற்படாகம்,விஷ்ணுகிரந்தி,கண்டங்கத்திரி இவற்றை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் காய்ச்சி 8 ல் ஒரு பங்காக சுண்ட செய்து கிடைப்பது தூதுவேளை குடிநீர்.இதனை ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை 10மி.லி கொடுத்துவர நிமோனியா,டைபாய்டு போன்றவை குணமாகும்.
தெருமுனையில் வெய்ட் பண்ணறேன்,ஒரு கைப்பை எடுத்துக்கொண்டு வாங்க,தூதுவேளை பறிக்க போகலாம்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...