Aug 9, 2012

உடல் பலம் பெற



உடல் பலம் பெற

உடல் மெலிந்து காணப்படுவோர் குண்டாக வேண்டுமானால், வேப்பம்பூவை ஊறவைத்து குடிநீர் தயாரித்து காலையில் பருகி வந்தால் சிறுகச்சிறுக உடல் மெலிவு நீங்கி உடல் குண்டாகத் தொடங்கும்.
பேரீச்சம்பழத்தில் இரும்புசத்து அதிகம் உள்ளது. எந்த காரணத்தினால் உடல் இளைத்து இருந்தாலும் பேரீச்சம்பழத்தை முறையாக உணவோடு சேர்த்து எடுத்துக்கொண்டால் மெலிந்த உடல் தேறும். போகக் களைப்பு நீங்கும். தாது விருத்தியும் பலமும் உண்டாகும்.
முருங்கை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டு கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் கை, கால்கள் உடல் அசதிகள் நீங்கும். உடலில் பலமும் ஏறும். உடலைத் தேற்றும் நல்ல உணவாகும்.
அருகம்புல்லை வேரோடு பறித்து சுத்தம் செய்து, சிறிது தண்ணீர் சேர்த்து

இஞ்சி

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.


3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.


4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.


5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.


6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்

Aug 8, 2012

வயிற்றுப்பூச்சிகளுக்கு சீரகம்


உணவும் சீரகமும் ஒன்றுடன் ஒன்று, உறவு கொண்டவை. சீரகம் இல்லாமல் உணவில்லை. சீரகச் செடி 35 – 45 செ.மீ. உயரம் வளரும் சிறு செடி. இதன் தண்டு பல கிளைகளுடன் கூடியதாகவும், இலைகள் நீட்டமாக, நன்கு பிரிந்து பச்சையாகவும் (கொத்தமல்லி இலையைப் போல்) இருக்கும்.
செடியின் உருண்டையான பகுதிகளில் வெண்ணிறமுள்ள சிறுமலர்கள் தோன்றும்.
பூத்ததும் இந்த உருண்டையான முடிச்சுகள் பிளந்து அவற்றில் மூன்று அங்குலம் நீளமான பழங்கள் தோன்றும். அவற்றில் விதைகள் மிகுந்திருக்கும். கோள வடிவில் 6 மி.மீ. நீளமாக மஞ்சள் – பழுப்பு நிறத்தில் காணப்படும். இந்த விதைகள் தான் சீரகம். நல்ல நறுமணத்துடன் இருக்கும்.
பழைய காலங்களிலிருந்தே உபயோகத்தில் இருக்கும் சீரகம், எகிப்து, சிரியா,

அதிகாலையில் தண்ணீர் பருகினால் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்





தினமும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.

இம் முறையை நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக பின்பற்றி வந்துள்ளார்கள். அவர்கள் தண்ணீருக்குப் பதிலாக பழந்தண்ணீரை

கிட்னி பற்றி நாம் அறிந்ததும் அறியாததும்: 20 கேள்விகளும் பதிலும்



"ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்பறையைப் பார்த்தால் தெரிந்துவிடும். அதுபோலத்தான் நம் உடலும்... நாம் முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்கிறோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத்துச் சொல்லிவிடலாம்..." என்று எளிமையான உதாரணத்தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன்.

கற்ப மூலிகை மரண மாற்று மூலிகை ஆடாதோடை.





மக்கள் ஆரோக்கியமாக வாழ சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள்.  அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப மூலிகைகள்.
இந்த  வகையில் நீண்ட ஆரோக்கியத்தை கொடுக்கவல்ல காய கற்ப மூலிகையான ஆடாதோடை பற்றித் தெரிந்து கொள்வோம்.
இது சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் காணப்படும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும்.  ஆடுகள் தொடாத இலை என்பதால்

Aug 7, 2012

இணைய பாதுகாப்பு #1 - Passwords--கணிணிக்குறிப்புக்கள்,



இணைய பாதுகாப்பு #1 - Passwords


கணினி பயன்படுத்துபவர்களில் அதிகமானோர் இணையத்தை பயன்படுத்தாமல் இருக்க மாட்டார்கள். அந்தளவு இணையத்தின் வளர்ச்சி அபாரமானது. எந்த இணையம் நமக்கு அதிகம் உதவுகிறதோ, அதே இணையம் தான் நமக்கு அதிகமான ஆபத்தையும் விளைவிக்கின்றது. அப்படிப்பட்ட இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது பற்றி பார்ப்போம்.

இது தொடர்பாக ஏற்கனவே சைபர் க்ரைம் - ஒரு பார்வை , ஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள் ஆகிய பதிவுகளில் ஓரளவு பார்த்திருந்தாலும்,

சில இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்:--மூலிகைகள் கீரைகள்!


துளசி:- ஜீரண கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி முதலியவற்றிற்கு சிறந்தது. இரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கின்றது.

வில்வம்:- காய்ச்சல், அனீமியா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்குச் சிறந்தது. காலரா தடுப்பு மருந்தாக வில்வம் செயல்படுகிறது. சிவன் கோயில்களில் வில்வ இலை கிடைக்கும்.

அருகம்புல்:- எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் 9.00 மணிக்கு பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு. அருகம்புல் சாப்பிட்டு 2 மணி நேரம்

வில்வம் இருக்க, செல்வம் எதற்கு?--மூலிகைகள்


வில்வம் இருக்க, செல்வம் எதற்கு?

புராணங்களில் 'பஞ்ச தருக்கள்’ என்று சொல்லப்படும் ஐந்து மரங்களில் முதன்மையானது வில்வம் (இதர நான்கு பாதிரி, வன்னி, மந்தாரை, மா). வில்வ மரத்தை சிவனின் அம்சம் என்பார்கள். வேர், பட்டை, இலை, பழம், விதை என மரத்தின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவ மகத்துவம் வாய்ந்தவை. கூவிளம், கூவிளை, சிவத்துருமம், நின்மலி, மாலூரம் என வில்வ மரத்துக்கு நிறையப் பெயர்கள். இதன் தாவரவியல் பெயர் ஏகல் மார்மெலொஸ் (Aegle marmelos) வில்வ மரம், இலையுதிர் வகையைச் சேர்ந்தது. இமயமலையின் அடிவாரத்தில் இருந்து தென் இந்தியாவின் கடைக்கோடி வரை வில்வ

வல்லாரையின் பயன்கள்--மூலிகைகள் கீரைகள்



வல்லாரையிலையை நிழலில் உலர்த்தி பொடித்து பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்கு செல்லும்முன் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்துபோகும்.
வல்லாரை இலையை நன்கு சுத்தம் செய்து அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து சட்னியாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ மாணவிகளுக்கு உண்டாகும் அறிவுச் சோர்வை நீக்கி ஞாபக மறதியை குணமாக்கும். குறிப்பாக வல்லாரை சட்னியில் புளியை அறவே தவிர்க்க வேண்டும் . உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
வல்லாரையிலையுடன் சம அளவு கீழாநெல்லி இலை சேர்த்து அரைத்து

கற்ப மூலிகை மரண மாற்று மூலிகை ஆடாதோடை.--





மக்கள் ஆரோக்கியமாக வாழ சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள்.  அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப மூலிகைகள்.
இந்த  வகையில் நீண்ட ஆரோக்கியத்தை கொடுக்கவல்ல காய கற்ப மூலிகையான ஆடாதோடை பற்றித் தெரிந்து கொள்வோம்.
இது சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் காணப்படும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும்.  ஆடுகள் தொடாத இலை என்பதால்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...