Aug 16, 2012

பெண்களுக்கான சொத்துரிமை.... சட்டம் என்ன சொல்கிறது?--உங்களுக்கு உதவும் சட்டங்கள்



நாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களுக்கு சொத்தில் எவ்வளவு உரிமை இருக்கிறது என்பது பெரும்பாலான பெண்களுக்கே தெளிவாகத் தெரியவில்லை.

ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என பொத்தாம் பொதுவாக தெரிகிறதே ஒழிய, பெண்களுக்கு எப்போதெல்லாம் சொத்து கிடைக்கும்? என்னென்ன உரிமை இருக்கிறது என்று தெரிவதில்லை. பெண்களுக்கு இருக்கும் சொத்து சம்பந்தப்பட்ட உரிமைகளைப் பற்றி இங்கே விளக்கமாக கூறுகிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணன்.

ஒருநாள் வலியை பொறுக்கலாம்... வாழ்நாள் வலியை தவிர்க்கலாம்


சிசேரியன் சிக்கலுக்கு சிறப்பான தீர்வுகள் !


'சென்னையைப் பொறுத்தவரை கடந்த ஐந்து ஆண்டுகளைவிட, இப்போது சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்து இருக்கிறது!’
- அதிர்ச்சி தர வேண்டிய இச்செய்தி, 'அப்படியா..?’ என்கிற சம்பிரதாய விசாரணையுடன் அடுத்த வேலையை நோக்கி நகர வைக்கிறது. அந்தளவுக்கு சிசேரியன் பிரசவத்துக்குப் பழகிவிட்டார்கள் மக்கள்!
''முன்பெல்லாம் பதினைந்து, இருபது சதவிகித சிசேரியன் கேஸ்களை அட்டெண்ட் பண்ணிட்டு இருந்த நாங்க, இப்ப ஐம்பது சதவிகித கேஸ்களை அட்டெண்ட் பண்றோம்'' என்று சிசேரியனின் 'விஸ்வரூபம்' பேசும் சென்னை, எழும்பூர் மகப்பேறு மருத்துவ நிலையத்தின் முண்னாள் இயக்குநர் டாக்டர் மோகனாம்பாள்,

இயற்கை அழகு குறிப்புகள்


* கழுத்து கருவளையம் மறைய தக்காளிசாறு அரை ஸ்பூன்,தேன் அரைஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டுவர கருவளையம் சிறிது நாளில் மறைந்துவிடும்
 
* முகம் மற்றும் மேனி அழகிற்க்கு கடலைபருப்பு கால்கிலோ, பாசிபயறு கால்கிலோ, ஆவரம்பூ100[காயவைத்தது]கிராம், முன்றையும் அரைத்து சோப்புக்கு பதிலாக பயன்படுத்தினால் பயன் கிடைக்கும்
 
* கண்கருவளையம் போக ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில், மஞ்சள்பொடி, சிறிதளவு உப்பு கலந்து கருவளையத்தில் போடவும்.கருவளையம் கொஞ்ச நாளில் கண்கருவளையம் காணமல் போகும்.

நாற்பதிலும் நலம்!



நாற்பதிலும் நலம்!

நாற்பது வயதில் நாய்க் குணம் என்று நம் ஊரில் சொல்வதை, மருத்துவ உலகம் 'மிட்லைஃப் ப்ளூஸ்’, 'மிட் லைஃப் கிரைசிஸ்’ என்று பல அடைமொழிகளைக் கொடுத்து வர்ணிக்கிறது. இந்தப் பருவத்தில் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பல திருப்புமுனைகள் நடக்கின்றன. குடும்பப் பொறுப்புகள், வாழ்வியல் எதிர்பார்ப்புகள், அத்தியாவசியத் தேவைகள் என எல்லாமும் சேர்ந்து அழுத்தும். உடலிலும் மனதிலும் சோர்வு ஏற்படும்.

பெரும்பாலும் இந்த வயதை ஒருவர் கடக்கும்போதுதான், வயதான அவரது அப்பாவும் அம்மாவும் நோய்வாய்ப்பட்டு இறப்பார்கள். இந்தக் காலத்தில்தான் ஒருவருக்கு குடும்பம், வேலை என எல்லா இடங்களிலும் பொறுப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகள் பதின்பருவத்தின் உச்சத்தில் இருப்பார்கள்.

அடுக்கடுக்காய்ப் பலன் தரும் கடுக்காய்! ---இய‌ற்கை வைத்தியம்





'தாயினும் சிறந்தது கடுக்காய்’ என்கிறது 'பதார்த்த குண சிந்தாமணி’ நூல். 'அடுக்கடுக்காய் வந்த பிணி யாவும் கடுக்காய் கண்டு காணாமல் போகும்’ என்கிறது கிராமத்துச் சொலவடை.
விளையும் இடம், நிறம், வடிவம், அதில் உள்ள டானின் என்ற வேதிப் பொருளின் அளவு என இவற்றின் அடிப்படையில் கடுக்காய் மரத்தில் பல வகைகள் இருக்கின்றன. இது இலை உதிர் வகை மரமாகும். இந்தியாவில் உள்ள மொத்தக் கடுக்காய் மரங்களில் முக்கால் பங்கு மத்தியப் பிரதேசத்தில் இருக்கின்றன. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் பெரும் அளவு கடுக்காய் மரங்கள் உள்ளன. இதன் இலை கால்நடைத் தீவனமாகவும், இதன் பிசின் கோந்தாகவும் பயன்படுகிறது. மரப் பட்டையில் உள்ள டேனின், தோல் பதனிட உதவும் இயற்கைப் பொருளாகும். பூக்கள் தேன் மிகுதியாகக்கொண்டவை. மரம், கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுகிறது.

பாதுகாக்க 10 வழிகள்: கண்


கண்டதிப்பிலி ரசம் சளி,இருமலுக்கு—எங்க வீட்டு டயட்


Aug 15, 2012

நித்தியானந்தா அடியாட்களால் அருணகிரிநாதர் சிறை வைப்பு: கர்நாடக சாமியார் புகார்




17 அடி நீள மலைப்பாம்பு அமெரிக்காவில் சிக்கியது



மேற்கு பாம் பீச்: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள எவர்கிளேட் தேசிய உயிரியல் பூங்காவுக்குள் 17.7 அடி நீளம், 75 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பாம்பு கருத்தரித்து 87 முட்டைகளை வயிற்றில் வைத்துள்ளது சாதனை அளவாக கருதப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவை பூர்விகமாகக் கொண்ட இந்த வகைப் பாம்புகள் எங்கும் பரவிக்கிடக்கின்றன. எவர்கிவேட் உயிரியல் பூங்காவில் ஆயிரக்கணக்கான மலைப்பாம்புகள் உள்ளன. மான்கள் உள்ளிட்ட விலங்குகளை அப்படியே சுருட்டி நெருக்கிக் கொன்று விழுங்கும் இந்த வகைப் பாம்புகளின் எண்ணிக்கையை குறைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் அவற்றின் எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ளது. தற்போது இந்தளவுக்கு பெரிய பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது என்று பாம்பு ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்

பிரேசிலை சென்றடைந்தது ஒலிம்பிக் கொடி



நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள், அடுத்து எதிர்வரும் 2016ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெறவுள்ளது.

இதற்காக ரியோடி ஜெனிரோ நகர மேயர் எடுர்டோ பயஸ், கவர்னர் ஜெர்சியோ கேப்ரல் ஆகியோர் கொடியை தனி விமானத்தின் மூலம் லண்டனிலிருந்து பிரேசில் நாட்டுக்கு எடுத்து வந்தனர்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...