Aug 17, 2012

மிகப்பெரிய மலைப்பாம்பு பிடிப்பட்டது!

இலங்கையில் இதுவரை பிடிக்கப்பட்டவற்றில் மிகப் பெரிய மலைப்பாம்பு எனக் கருதப்படும் 22 அடி நீளமுள்ள மலைப்பாம்பு நேற்று (16) மாத்தளை உகுவெல பிரதேசத்தில் பிடிக்கப்பட்டது.
இதனை எடை 122 கிலோகிராம் என வனசீவராசி பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மலைப்பாம்பு எலஹெர கிரிதலே புனித பூமியில் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இதே பிரதேத்தில் இதற்குச் சமாந்தரமான மலைப்பாம்பொன்று பிடிக்கப்பட்டு, பாதுகாப்பான வனப்பிரதேசத்தில் விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

::. மாத்தளையில் உலாவிய இராட்சதன் (photo) .:: newJaffna.com

::. மாத்தளையில் உலாவிய இராட்சதன் (photo) .:: newJaffna.com

கலைஞர்கருணாநிதி.காம்-தொடங்கி வைத்தார் கருணாநிதி


சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தனது முதுபெரும் வயதில் இணையதளத்திற்குள் முறைப்படி காலெடி எடுத்து வைத்துள்ளார். கலைஞர்கருணாநிதி. காம் என்ற பெயரிலான அவரது புதிய இணையதளம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
சமீபத்தில்தான் கருணாநிதி டிவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றுக்குள் புகுந்தார். இப்போது இணையதள வீட்டுக்குள்ளும் புதுமுனை புகுவிழா நடத்தி அடியெடுத்து வைத்துள்ளார்.
http://www.kalaignarkarunanidhi.com என்ற பெயரிலான இந்த புதிய இணையதளம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. கருணாநிதியை அதைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தி.க. தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், இனி இந்த இணையதளத்திலும், திமுக நிகழ்ச்சிகளை அனைவரும் அறிந்து கொள்ளலாம். டுவிட்டர், பேஸ்புக்கில் சேர்ந்ததன் மூலம் இளைய தலைமுறையினருடன் பேச வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார் தனக்கே உரிய மந்தகாச புன்னகையுடன்.
இந்த இணையதளம் தற்போது தொடங்கப்பட்டுள்ள போதிலும் இன்னும் முறையாக அப்டேட் செய்யப்படவில்லை. அதுதொடர்பான பணிகள் நடந்து வருவதாக அதில் செய்தி போடப்பட்டுள்ளது.
கருணாநிதி டிவிட்டர் பக்கம்
கருணாநிதியின் பேஸ்புக் பக்கம்

தெ.ஆப்பிரிக்க போலீஸ் அராஜகம் : 36 சுரங்கத் தொழிலாளர்கள் சுட்டுக் கொலை


தென் ஆப்பிரிக்காவில் உள்ள மரிகானாவில் லான்மின் பிளாட்டினம் சுரங்கத்தில் தொழிலாளர்கள் தீவிர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் போலீசுக்கும், தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட சண்டையில் 36 தொழிலாளர்கள் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டது நாடு முழுதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குண்டுதுளைக்காத ஜாக்கெட்டுகளுடன் குதிரை மீது வந்த போலீஸ் படையினர் தொழிலாளர்கள் மீது கண்மூடித் தனமாகச் சுட்டனர் இதில் 36 பேர் பலியாகினர். தொழிலாளர்கள் பக்கத்திலிருந்தும் துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீங்கள் பாம்பு இறைச்சியில் பேர்கர் சாப்பிட்டதுண்டா?

நீங்கள் பாம்பு இறைச்சியில் பேர்கர் சாப்பிட்டதுண்டா?இந்தோனேசியா நாட்டில் மிக பிரபலமான உணவுகளில் ஒன்றாக கருதப்படுவது பாம்பு பேர்கர் ஆகும். மேலும் இந்த பேர்கர் குறிப்பாக நாக பாம்புகளை கொன்று அவற்றின் இறைச்சியிலிருந்து தயாரிக்கப்படுவதால் மிகவும் சுவையானது என்று கருதப்படுகிறது




மனித உடல் மியூசியம் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா?



தாய்லாந்து நாட்டில் பாங்காக் நகரில், மனித உடல் மியூசியம் உள்ளது. தெற்காசியாவிலேயே 130 மனித உடல்களைக் கொண்ட மியூசியம் இதுவாகும்.






மிகவும் அரிதாக காட்சியளிக்கும் வெள்ளை நிற கங்காரு




Aug 16, 2012

பழங்கால 10 சென்ட் நாணயம் ரூ.10 கோடிக்கு ஏலம்


அமெரிக்காவில் உள்ள ஏலம் விடும் மையம் சமீபத்தில் 10 சென்ட் (10 காசு) நாணயங்களை ஏலம் விட்டனர். இது 1873-ம் ஆண்டு வெளியிடப்பட்ட பழங்கால நாணயம் ஆகும். இது ஆச்சரியப்படும் அளவுக்கு தொகையை ஈட்டியது.
இந்த நாணயத்துக்கு ரூ.8 கோடி என விலை நிர்ணயித்து இருந்தனர். ஆனால் அதையும் விஞ்சி ரூ.10 கோடிக்கு(2 மில்லியன் டொலர்) அது ஏலம் எடுக்கப்பட்டது. இந்த நாணயத்தை வாங்கியவர் பற்றிய விவரம் அறிவிக்கப்படவில்லை.


இது மீன் என்றால் நீங்கள் நம்புவீர்களா!


மீன் வகைகளில் ஒன்றானதும், sarcastic fringeheads என்ற பெயரைக் கொண்டு காணப்படுகிறது. மிகவும் ஆழமான பகுதியில் காணப்படும் இந்த மீன் மிகவும் கோபம் கொண்டதாகும். இந்த மீனின் தாக்குதலுக்கு பயந்து ஓடும் அக்டோபஸைக் காணொளியில் காணலாம்.



குருட்டு எலிகளைப் பார்க்கவைத்த விஞ்ஞானிகள்!
விஞ்ஞானிகளால் குருட்டு எலிகளைத் திரும்பவும் தெளிவாகப் பார்க்கவைக்க முடிந்துள்ளது. இதன்மூலம் பல மில்லியன்கணக்கானோரிற்கு நம்பிக்கையொன்று கிடைத்துள்ளது.

இப்பிராணியின் பார்வை ஒரு குழந்தையின் முகத்தைப் பிரித்துப்பார்க்கவும் ஒரு பூங்காவிலுள்ள காட்சிகளின் விபரங்களைப் பார்க்கவும் நகரும் விம்பத்தினைத் தடந்தொடரக்கூடிய நிலையுடன் இருந்தது.

அடுத்த நேர உணவுக்காக கூலாக காத்திருக்கும் சிங்கங்கள்!


தன்சானியா காட்டுப்பகுதியில் Daniel Dolpire எனும் படப்பிடிப்பாளரால் எடுக்கப்பட்ட படங்கள் ஆறு சிங்கங்கள் தமது அடுத்த உணவுக்காக காத்திருப்பதை வெளிக்காட்டுகின்றன.

59 வயதான Daniel Dolpire கடந்த 20 வருடங்களாக புகைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் தனது படம் பற்றி சொல்கையில் சிங்கங்கள் பொதுவாக தனிமை விரும்பிகள் உணவுக்காக வேட்டையாடும் போதும் உணவை உண்ணும் போதும் சேர்ந்து உண்பவை.

இவ்வாறு ஒன்றாக ஓய்வெடுக்கும் சிங்கங்கள் தனக்கு புதுவித தோற்றத்தை தந்ததாக கூறினார்.



Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...