Aug 16, 2012


குருட்டு எலிகளைப் பார்க்கவைத்த விஞ்ஞானிகள்!
விஞ்ஞானிகளால் குருட்டு எலிகளைத் திரும்பவும் தெளிவாகப் பார்க்கவைக்க முடிந்துள்ளது. இதன்மூலம் பல மில்லியன்கணக்கானோரிற்கு நம்பிக்கையொன்று கிடைத்துள்ளது.

இப்பிராணியின் பார்வை ஒரு குழந்தையின் முகத்தைப் பிரித்துப்பார்க்கவும் ஒரு பூங்காவிலுள்ள காட்சிகளின் விபரங்களைப் பார்க்கவும் நகரும் விம்பத்தினைத் தடந்தொடரக்கூடிய நிலையுடன் இருந்தது.


இந்தத் தொழினுட்பமானது சிறியதொரு கமெராவினைக் கொண்ட உயர்-தொழினுட்பக் கண்ணாடிகளைக் கொண்டுள்ளது. சத்திரசிகிச்சையில்லாமல் பயன்படுத்தப்படும் இதனை இன்னும் ஒன்றிரண்டு வருடங்களில் மனிதர்களில் பயன்படுத்தக்கூடியவாறிருக்குமென்கின்றனர்.

இது 500,000 பிரித்தானியர்களைப் பாதிப்பதாக உள்ளதெனவும் அடுத்த 25 ஆண்டுகளில் 3 மடங்காக உயரலாமென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் இதற்காக இதுவரை சில சிகிச்சைகளே உள்ளதாகவும் நாளாந்தம் செய்யும் வாசிப்பு, வாகனம் ஓட்டுதல் மற்றும் படம் பார்த்தல் போன்றவற்றைக் குணப்படுத்துவதற்கான எந்தவொரு சிகிச்சையும் காணப்படவில்லை.

விஞ்ஞானிகள் ஏற்கனவே சில பார்வைக் கோளாறுகளைக் குணப்படுத்த பொருத்தக்கூடிய சிப்களை உருவாக்கியுள்ளனர்.

ஆனால் இத்தொழினுட்பத்தினை உருவாக்கியுள்ள நரம்பியல் விஞ்ஞானியான ஷெலியா நிரன்பேர்க் கூறுகையில் தனது உருவாக்கம் நல்லதொரு தெளிவான படத்தினை உற்பத்திசெய்யுமென்றும் கிட்டத்தட்ட இது வழமையான பார்வையை ஒத்திருக்குமென்றும் கூறுகின்றார்.

ஒன்றைப் பார்க்கையில் விழிவெண்படலத்திலுள்ள கலங்களில் ஒளி விழுகின்றது. கண்ணின் கீழுள்ள திரை மின் சமிக்கைகளாக மாறி மூளைக்கு அனுப்பப்பட்டு விம்பங்களாக வருகின்றன.

மின்னலைகள் மாற்றப்படும் வடிவம் ஒரு நாயிலிருந்து ஒரு பூனைக்கோ அல்லது ஒரு குழந்தைக்கோ மாறுபடும்.
வயதுபோனவர்களிடம் இந்த ஒளியை எடுக்கும் தன்மை குறைந்துவிடும்.

இதனால் குறைந்தளவு தரவே மூளைக்குக் கொண்டுசெல்லப்படுவதால் பார்வையும் குறைவடைந்துவிடுகின்றது.

இந்தக் கலங்களை மாற்றி மாற்றப்படும் தகவல்களை நேரடியாகவே மூளைக்கு அனுப்பும் வழிமுறையொன்றைக் கண்டுபிடித்துள்ளார் இந்த நிபுணர்.

அத்துடன் அவர் துல்லியமாக அத்தகவல்களை மாற்றவும் செயற்பட்டு வருகின்றார்.

எலிகளில் செய்யப்பட்ட பரிசோதனைகளில் இந்தத் தொழினுட்பத்தின்மூலம் சாதாரண பார்வை ஏற்பட்டுள்ளமை தெரிகின்றன.

இதே முறையினை அவர் தற்போது குரங்கின் கண்களில் பரிசோதித்து வருகின்றார்.

குரங்குகளதும் மனிதர்களதும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியானவை என்பதால் இன்னும் 5 அல்லது 6 வருடங்களில் இது பரவலாகப் பயன்பாட்டில் வந்துவிடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.



No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...