Sep 2, 2012

ஒரு பெண்ணின் இருதயம்


உலகத்தின் முதல் இருதய மாற்று ஆபரேஷனை வெற்றிகரமாகச் செய்த தென் ஆப்பிரிக்க டாக்டர் கிரிஸ்டியான் பர்னார்ட் ஒன் லைஃப்என்ற தலைப்பில் தன் சுயசரிதத்தை எழுதியிருக்கிறார். அதில் ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளான்ட்என்ற பாகத்திலிருந்து ஒரு சில பகுதிகள் 
:
 
‘‘லாயி வாஷ்கான்ஸ்கியின் இதயம் மோசமடைந்திருந்தது. தகுந்த மாற்று இருதயம் கிடைத்தவுடன் அவருக்கு புதிய இதயத்தைப் பொருத்த காத்துக் கொண்டிருந்தோம்.


கார் விபத்தில் அகப்பட்டுக் கொண்ட டெனிஸ் டார்வல் என்ற 24 வயதுப் பெண்ணின் இருதயம் எங்களுக்குக் கிடைத்தது. இதோ டெனிஸின் தந்தை கூறுவதைக் கேளுங்கள்:

செயற்கைக்கண் பொருத்தப்பட்ட ஆஸ்திரேலிய பெண்ணுக்கு ஒளிக்கற்றைகள் தெரியும் அதிசயம்.



உலகின் முதல், "மாதிரி செயற்கை கண்' பொருத்தப்பட்ட, பார்வையற்ற ஆஸ்திரேலியப் பெண்ணுக்கு, ஒளிக்கற்றைகளை பார்க்கும் திறன் கிடைத்துள்ளது. தொடர் ஆய்வுகளின் மூலம், 2014ம் ஆண்டுக்குள் முழுமையான, "செயற்கை கண்' தயாராகும் என, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவால் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட தமிழ் விஞ்ஞானிக்கு வடமெரிக்காவில் கவுரவம்.


இந்தியாவால் வெளியேற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட தமிழ் விஞ்ஞானி சிவா அய்யாதுரையை வட அமெரிக்கத் தமிழர் பேரவையான பெட்னா சிறப்பித்து கவுரப்படுத்தியிருக்கிறது.
இப்போதெல்லாம் 'மெயில்' வந்துருக்கு ன்னு வீட்டிலே யாரும் சொன்னால் அது தபாலில் வந்த மெயில் என்ற எண்ணம் வருவதில்லை. 'மெயில்' என்றால் ‘இமெயில்' தான் என்று ஆகிவிட்டது. ஃபேஸ்புக், டுவிட்டர் என வெவ்வேறு பரிமாணங்களில் தகவல் தொழில் நுட்பம் முன்னேற்றம் கண்டாலும், இமெயில் எனபது அன்றாட செயல்களில் முக்கிய அம்சமாகிவிட்டது. தற்போதைய வாழ்க்கை முறையையே மாற்றிப் போட்டுவிட்டது.

சட்டப்படி வருபவர்களுக்கே புகலிடம் வழங்கப்படும்!அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன்!


சட்டவிரோதமான முறையில் ஆஸியில் புகலிடம் கோருபவர்களுக்கு இனிமேல் அடைக்கலம் வழங்க தயாரில்லை எனவும்,  சட்ட திட்டங்களுக்கு அமைவாக புகலிடம் கோருபவர்களுக்கு மாத்திரமே புகலிடம் வழங்கப்படும் எனவும்  அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார்.
தற்போது படகுகள் மூலம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு ஆஸிக்கு பெருமளவானோர் புகலிடக் கோரிக்கையாளர்களாக நுழைகின்றனர்.

செவ்வாய் கிரகத்திற்கு விஞ்ஞானிகளை அனுப்ப பிக்பிரதர் நிகழ்ச்சி மூலம் நிதிதிரட்டும் நெதர்லாந்து.


செவ்வாய் கிரக ஆய்வுப் பணியில் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் மேற்கொண்டுள்ளது. 7 ஆண்டு ஆய்வுக்கு பிறகு அங்கு மனித இனம் வாழ முடியுமா? என்பதை ஆராய கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது.

அங்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு மேற்கொள்ள முடியுமா? என்பது குறித்து அடுத்த ஆண்டில் ஆராய்ச்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. ஆனால் இன்னும் 10 ஆண்டுகளில் அதாவது 2023-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு 4 விஞ்ஞானிகளை அனுப்ப நெதர்லாந்து திட்டமிட்டுள்ளது. இதற்கு மார்ஸ்-1 என்று பெயரிடப்பட்டுள்ளது.

சுடுதண்ணி கொட்டி முகம், கை வெந்ததால் 6 லட்சம் காப்பி மேக்கர்கள் வாபஸ்




சீனாவில் தயாரிக்கப்பட்ட காப்பி மேக்கரில் காப்பி போட்ட போது வெந்நீர் தெறித்து முகம் கைகள் வெந்து போனதால், 6 லட்சம் இயந்திரங்கள் அமெரிக்கா, கனடாவில் அதிரடியாக வாபஸ் பெறப்பட்டன. சீனா தயாரிப்பான மிஸ்டர் காப்பி சிங்கிள் கப் என்ற காப்பி மேக்கர் இயந்திரம், அமெரிக்கா, கனடாவில் பரபரப்பாக விற்கப்பட்டன.
இந்த இயந்திரத்தின் விலை 3,600 ரூபாயில் இருந்து 4,800 ரூபாய் வரை பல மாடல்களில் நிறங்களில் விற்கப்பட்டன. கடந்த 2010 செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை லட்சக்கணக்கான இயந்திரங்கள் விற்பனையாகி உள்ளன.

போப் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்ட இத்தாலி கர்தினால் திடீர் மரணம்

இத்தாலி நாட்டைச் சேர்ந்த கர்தினால் கார்லோ மரியா மார்ட்டின் இத்தாலியில் உள்ள மிலனில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85. இவர் ஐரோப்பாவின் மிகப்பெரிய கத்தோலிக்க சபையின் தலைவராகவும் மிலன் நகரின் ஆர்ச்பிஷப் ஆகவும் பல ஆண்டுகள் பதவி வகித்தார்.

அடுத்த போப் ஆண்டவரின் பதவிக்கு இவரது பெயர் முன் மொழியப்பட்டிருந்தது. கத்தோலிக்க சபைகளில் நிலவும் முறைகேடுகளுக்கு எதிராக கார்லோ மரியா மார்ட்டின் குரல் எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

சீனாவில் இருந்து தப்பியது: 3 வாரங்கள் கடலில் மிதந்து சென்ற பூனை- கலிபோர்னியாவில் மீட்பு

நன்றாக நீந்த தெரிந்த நீச்சல் வீரர்கள் கூட தொடர்ந்து ஓய்வில்லாமல் 24 மணி நேரத்திற்கு மேல் நீந்தினால், கை, கால்கள் சோர்வடைந்து  கரையேறி விடுவார்கள். அப்படி, கரை ஏதும் தென் படாவிட்டால் தண்ணீரில் மூழ்கி, மூச்சு திணறி இறந்து போவார்கள். ஆனால் கண்டெய்னர் ஒன்றில் சிக்கிக் கொண்ட 5 மாத பூனை குட்டி, பெருங்கடல் வழியாக 3 வாரம் மிதந்தபடியே சீனாவில் இருந்து அமெரிக்காவில் உள்ள  கலிபோர்னியா மாகாணத்திற்கு உயிருடன் வந்து சேர்ந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த 3 வார கடல் பயணத்தின் போது, உணவு எதுவும் சாப்பிடாமல், தண்ணீர் கூட குடிக்காமல் கடல் பயணம் செய்த இந்த பூனைக்குட்டியை லாஸ் ஏஞ்சல்ஸ் கால் நடை மருத்துவமனை பராமரித்து  வருகின்றது. `ஹலோ' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பூனை குட்டி, மருத்துவமனைக்கு வரும் போது கண்கள் இருண்ட நிலையில் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டது.

உடனே, அதை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து மரணத்தில் இருந்து காப்பாற்றி விட்டோம். விரைவில் `ஹலோ' டிஸ்சார்ஜ் ஆகிவிடும் என்று கால் நடை மருத்துவர்கள் கூறினர். 

இருதயம் பலம் பெற.




இருதய பட படப்பு குறைய:-மாசிக்காயைப் பால் விட்டு உரைத்து காலை மாலை இரு வேளையும் ஒன்று அல்லது இரண்டு குன்றி மணி அளவில் நாவிற் தடவி சுவைத்து வர இருதய பட படப்புத் தீரும்.

2.
இதயம் பட படப்பு தீர:-தினசரி ஒவ்வொரு பேரிக்காயை தின்று வர இதய பட படப்புத் தீரும்.

3.
இதய நோய்கள் தீரு:-துளசி இலைச்சாறு,தேன் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து வெந்நீரில் கலந்து காலை மாலை 48 நாட்கள் சாப்பிட்டு வர இதய நோய்கள் அனைத்தும் நீங்கும்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...