Sep 2, 2012

சுடுதண்ணி கொட்டி முகம், கை வெந்ததால் 6 லட்சம் காப்பி மேக்கர்கள் வாபஸ்




சீனாவில் தயாரிக்கப்பட்ட காப்பி மேக்கரில் காப்பி போட்ட போது வெந்நீர் தெறித்து முகம் கைகள் வெந்து போனதால், 6 லட்சம் இயந்திரங்கள் அமெரிக்கா, கனடாவில் அதிரடியாக வாபஸ் பெறப்பட்டன. சீனா தயாரிப்பான மிஸ்டர் காப்பி சிங்கிள் கப் என்ற காப்பி மேக்கர் இயந்திரம், அமெரிக்கா, கனடாவில் பரபரப்பாக விற்கப்பட்டன.
இந்த இயந்திரத்தின் விலை 3,600 ரூபாயில் இருந்து 4,800 ரூபாய் வரை பல மாடல்களில் நிறங்களில் விற்கப்பட்டன. கடந்த 2010 செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை லட்சக்கணக்கான இயந்திரங்கள் விற்பனையாகி உள்ளன.

வால்மார்ட் உள்பட பல ஷாப்பிங் சென்டர்களில் இந்த இயந்திரத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில், ஒரு அடி உயரமுள்ள இந்த இயந்திரத்தில் காப்பி போடும் போது, அதில் இருந்து வெந்நீர் தெறித்து பலருக்கு முகம், கைகள் வெந்ததாக புகார்கள் எழுந்தன. காப்பி பவுடருடன் தண்ணீர் பொங்கி தரையில் கொட்டியது. இயந்திரம் சரியாக வேலை செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுவரை 61 பேர் பாதிக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இயந்திரத்தை இறக்குமதி செய்த சன்பீம் புராடக்ஸ் கம்பெனி, காப்பிமேக்கர் சரியாக வேலை செய்யவில்லை என்று 164 பேரிடம் இருந்து புகார் வந்தன. அவர்களில் 61 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வந்தது.
இதையடுத்து அமெரிக்கா, கனடாவில் விற்கப்பட்ட 6 லட்சம் மிஸ்டர் காப்பி இயந்திரம் உடனடியாக வாபஸ் பெறப்பட்டது. இயந்திரத்தை வாங்கியோர் அதை பயன்படுத்த வேண்டாம். வேறு இயந்திரத்தை மாற்றி கொள்ள அறிவிப்பு வெளியிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...