Sep 18, 2012

நகர வாழ்க்கை, மூளையை பாதிக்கிறது: ஆய்வில் தகவல்


கிராமப்புறத்தில் வாழும் மனிதர்களை விட நகர்ப்புறத்தில் வசிக்கும் மனிதர்கள் அதிக மனஅழுத்தத்திற்கு உள்ளாவதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது. நகர்புறத்தில் காணப்படும் வேறுபட்ட சமூக அமைப்பு, அதிக சப்தம் மற்றும் மக்கள் நெருக்கடி ஆகியவை காரணமாக மூளையின் அதிக உணர்வு மிக்கதான மற்றும் மனஅழுத்தத்துடன் தொடர்பு கொண்ட அமைக்டலா என்ற பகுதி அதிகமாக செயல்படுவது தெரிய வந்துள்ளது. மேலும், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் பகுதியாகவும், சுற்றுப்புறத்தோடு தொடர்பு கொண்டதாகவும் விளங்கும் மூளையின் மற்றொரு பகுதியான சிங்குலேட் கார்டெக்ஸ், நகர்ப்புறத்தில் பிறந்தவர்களிடம் தேவையற்ற வகையில் அதிகமாக செயல்படுவதும் ஆய்விலிருந்து தெரிய வருகிறது. வரும் 2050-ம் ஆண்டிற்குள் ஏறக்குறைய 70 சதம் பேர் நகர்ப்புற வாழ்க்கைக்கு வந்து விடுவர் என கூறப்படுவதால் ஒழுங்கற்ற மனநிலை, எதிலும் அதிக ஆர்வமின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க சிறந்த மனநலத்துடன் வாழ்வதற்கு ஏற்ப நகர்ப்புறங்களை தற்போதிருந்தே வடிவமைத்து அதற்கேற்ற வகையில் வாழ்க்கை முறையினை அமைத்து கொள்வது நலம் தரும் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

ஆரோக்கியத்துக்கும் நல்ல தோற்றத்துக்கும் காரட் சாப்பிடுங்கள்



பிரிட்டனின் பிரிஸ்டால் பல்கலை கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு ஒன்றில் மனிதர்களின் தோல் நிறத்திற்கும் அவர்கள் தோற்றத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நல்ல மஞ்சள் நிறமாக இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும் நல்ல தோற்றத்துடனும் இருப்பதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். 'கேராடெனாய்டுகள்' அடங்கிய பழங்கள், காய்கறிகள் குறிப்பாக கேரட்டுகள் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என அவர்கள் அறிவுறுத்துகின்றனர். நல்ல பலன் தர சுமார் இரண்டு மாதங்களாகலாம் என மேலும் கூறப்படுகிறது. மேலும், இருதய நோய் வருவதையும் இது தவிர்க்குமாம்.

உலகளவில் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவது இந்தியர்களே: உலக சுகாதார அமைப்பு



இங்கிலாந்தில் பிரபலமாகும் புதிய வகை யோகா



ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் கிறிஸ்டோபர் ஹாரிஸன் (வயது 50) என்பவர் தான் கண்டுபிடித்த புவியீர்ப்பு விசைக்கெதிராக மேற்கொள்ளும் யோகா முறையை பிரபலப்படுத்தி வருகிறார். தரையிலிருந்து சில அடிகள் உயரத்தில் தொட்டில் போன்ற அமைப்பில் பயிற்சியாளர்கள் தொங்கி கொண்டு கைகளை விரித்து தலையை உயரே தூக்கிய நிலையில் பயிற்சி மேற்கொள்கின்றனர். மற்றும் கூட்டுப்புழு போன்ற பயிற்சியினையும் செய்கின்றனர். இங்கிலாந்தில் கடந்த 10 வருடங்களாக இப்பயிற்சியினை கற்று தேர்ந்து தற்போது பலருக்கும் கற்று தரும் கிறிஸ்டோபர் அயர்லாந்து, இத்தாலி மற்றும் அமெரிக்காவிலும் பயிற்சியினை விரிவுபடுத்த இருக்கிறார்.

படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம்: ஒரு ஆய்வின் தகவல்


படுத்ததும் தூங்கிப்போகிறவர்களுக்கு அது ஒரு வரம். ஆனால், எல்லோருக்கும் இது சாத்தியமில்லை. சிலருக்கு படுத்ததற்கு நீண்ட நேரத்திற்குப்பின்னரே தூக்கம் வரும். அப்படியும் தூக்கம் வராதவர்கள் கெளண்டிங் ஷீப் செய்வதுண்டு. அதாவது, எளிதில் தூக்கம் வராதவர்கள் ஒன்றிலிருந்து 100.... 200..... 300 வரை

நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய வியாதிக்கான 29 புதிய மரபணுக்கள் கண்டுபிடிப்பு



மனிதர்களில் நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய வியாதி மல்டிபிள் ஸ்கிளிரோசிஸ். இந்த வியாதி, நரம்பிழைகளை சூழ்ந்து அதற்கு பாதுகாப்பு அளிக்கும் மைலின் ஷீத் என்ற பாதுகாப்பு வளையத்தை தாக்கி நரம்பின் பணிகளை முடக்குகிறது

இந்திய நறுமண பொருள்கள் புதிய சிகிச்சை முறைகள் உருவாக வழிவகுக்கும்: ஆய்வில் தகவல்



இந்திய நறுமண பொருள்கள் மருத்துவ ரீதியாக எவ்வாறு பயன்படுகிறது என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. நறுமண பொருள்களில் மஞ்சள் பற்றிய ஆய்வில், குர்குமின் என்ற பொருள் அதற்கு மஞ்சள் நிறத்தை கொடுக்கிறது என்றும் மேலும் டிரைகிளிசரைடு என்ற வேதி பொருளின் தாக்கத்தை

மருந்தாக பயன்படும் காட் மீன்கள் பற்றி சிறப்பு தகவல்கள்



மனிதர்களுக்கு விட்டமின் A, D மற்றும் E குறைவு ஏற்பட்டால் காட் லிவர் ஆயில் தான் மருந்து. இந்த மருந்தை நமக்கு தருவது காட் என்னும் ஒருவகை கடல் வாழ் மீனினம். இந்த மீன்களுக்கு பகைவர்கள் பாக்டீரியாக்கள் மற்றும் ஒட்டுண்ணிகள். பாக்டீரியாக்கள் மற்றும் ஒட்டுண்ணிகளிடமிருந்து இவற்றை பாதுகாக்க

வேதனை தரும் பரிசோதனைகளுக்கு குட்பை: அதி நுட்ப பரிசோதனை அறிமுகம்



ஸ்பேஸ் ஏஜ் வகையை சேர்ந்த அதி நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வியாதிகளுக்கான காரணங்களை கண்டறியும் வசதியை பெரும் பொருள் செலவில் இங்கிலாந்து மருத்துவமனை ஒன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த மருத்துவமனையில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட விண்கலத்தில் இடம் பெற்றிருந்த உடல் பரிசோதனை கருவிகள் உட்பட பல நவீன கருவிகள் உள்ளன. இனி, நோயாளிகளுக்கு வேதனை தரும் பரிசோதனைகளுக்கு குட்பை சொல்லப்படும் என்று இந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஸ்டார் ட்ரெக் விண்கலத்தில் விண்வெளி வீரர்களின் உடல் நலத்தை கண்காணிக்க பயன்படுத்தப்பட்ட ட்ரை கார்டர் ஸ்கேனர்களுக்கு இணையான கருவிகள் இதில் இடம் பெற்றுள்ளன. நோயாளிகளின் பார்வை, நுகர்வு மற்றும் உணர்வுகளை மட்டுமே ஆய்ந்து வியாதிகளை இந்த கருவிகள் கண்டுபிடித்துவிடும் திறன் பெற்றவை என்று கூறப்படுகிறது. சாதாரண அமீபியாக்கள் காரணமான வயிற்று வலி முதல் கேன்சர் போன்ற கொடிய வியாதிகள் வரை அனைத்துக்கும் இந்த கருவிகளை பயன்படுத்தலாம் என தெரிகிறது.

அதிக பருமன் என்ற எண்ணமே உடல் எடையை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்

 நார்வே,
நார்வே நாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலை கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் உடல் பருமன் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில், தங்களை தாங்களே அதிக பருமன் உள்ளவர்கள் என நினைப்பவர்கள் மற்றவர்களை காட்டிலும் அதிக உடல் எடை கொண்டவர்களாக வளர்கின்றனர். இது உளவியல் அடிப்படையில் ஏற்படும் அழுத்தம் காரணமாக உண்டாவதாக அவர்கள் கூறுகின்றனர். இதனால் அவர்களின் இடை பகுதி விரிவடைகிறது. மேலும், அவர்கள் மேற்கொள்ளும் சரிவிகிதமற்ற உணவு, காலை உணவை தவிர்த்தல் ஆகியவை காரணமாகவும் உடல் எடை அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

திடீர் அறிவிப்பு! இஸ்ரேலின் இருப்பு கேள்விக்குறி?


2012ல் பல நாடுகள் மோதிக்கொள்ளவிருக்கின்றன.அமெரிக்காவும் இஸ்ரேலும் பலமான அச்சுறுத்தல்களை ஈரான் மீது விட்டுகொண்டிருக்கிறார்கள்.இதில் இன்று ஈரான் முதல் முறையாக வெளிப்படையாக தக்க பதிலடியொன்றை கொடுத்துள்ளது.இது முழு உலகையே அதிர வைத்துள்ளது.இதில் இன்னுமொரு சுவாரிஸ்சயம் என்ன என்கிறீர்களா?ஏற்கனவே மேற்குலக நாடுகள் உட்பட பல நாடுகள் மொஸாட் என்ற அமைப்பால் பாதிக்கபட்டுள்ளன.ஆகவே இஸ்ரேல் இல்லாமல் போனால் கவலையில்லை என்பது தான்.ஈரானும் பல வழிகளில் முக்கியமாக வளைகுடா யுத்தங்களால் படிப்பினைகளை கற்றுகொண்டவர்கள்.கீழே படியுங்கள் அவர்களின் சுவரிஸ்யமான அறிக்கைகள்:-

ஈரான் நியூக்ளியர் குண்டுகள் பெறுவதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா எடுக்கும் என ஐ.நா அமைப்பிற்கான அமெரிக்காவின் மூத்த தூதரான சூசன் ரைஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஈரான் நியூக்ளியர் ஆயுதங்கள் பெறுவதை அமெரிக்க அனுமதிக்காது. இவ்விடயத்தில் ஜனாதிபதி பராக் ஒபாமா மிகத் தெள்ளத் தெளிவான முடிவில் உள்ளார்.

அவ்வாறு நடப்பதை தடுக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம். இராணுவ நடவடிக்கை உட்பட அனைத்து முடிவுகளும் அந்நாட்டிற்கு எதிராக தயாராக உள்ளன.

இது ஒரு நசுக்கும் கொள்கையாக இருக்கவில்லை. ஈரான் அணு ஆயுதங்களை பெருக்கும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது அமெரிக்காவின் ஒரு கொள்கையாக உள்ளது.

இதை ஜனாதிபதி பலமுறை வலியுறுத்தியும் சொல்லி வந்து இருக்கிறார். இது தான் இறுதி முடிவு. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இதையே அவர்களுக்கான ரெட் லைன் என்றும் கூறிவருகிறார்.

இது குறித்து இஸ்ரேல் நாட்டு பாதுகாப்பு, புலனாய்வு மற்றும் கொள்கை அதிகாரிகள் அனைவருடனும் தொடர்ந்து அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு எதிராக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

ஈரான் அணு ஆயுதங்களை பெருக்கும் நடவடிக்கைகளை கைவிடவில்லை என்றால், அந்நாட்டின் மீது எந்நேரமும் படையெடுக்கும் ஆணையை பிறப்பிக்க தேவையான அதிகாரத்தை ஜனாதிபதி பராக் ஒபாமா பெற்றுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.


ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு மையங்கள் மீது தாக்குதல் நடந்தால், நாங்கள் கொடுக்கும் பதிலடியில் இஸ்ரேலில் எதுவுமே மிஞ்சியிருக்காது என்று ஈரான் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானையொட்டிய வளைகுடா கடற்பரப்பில் அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் மிகப் பெரிய போர் ஒத்திகையை மேற்கொள்ள உள்ளன. இதற்கான பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள் வளைகுடா கடற்பரப்பில் முகாமிட்டு வருகின்றன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஈரான் ராணுவ தளபதி முகமது ஜபாரி டெஹ்ரானில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, எங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் எப்படி பதிலடி கொடுப்பது என்பதில் தெளிவாக இருக்கிறோம். நிச்சயமாக சொல்கிறோம்.. இஸ்ரேலில் எதுவுமே மிச்சமிருக்காது.

அமெரிக்கா எங்கள் மீது போர் தொடுக்குமேயானால் மேற்குலக நாடுகளும், அமெரிக்காவும் ஒரு பக்கமும் நாங்கள் ஒருபக்கமுமாக நிற்போம். இது இயற்கையானது. அதேபோல் போர் நடைபெறும் போது ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்படுவதுவம் இயல்பான ஒன்றானதுதான்.

லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஏற்கெனவே இஸ்ரேலை இலக்கு வைத்து 40 ஆயிரம் ஏவுகணைகளை நிறுத்தியுள்ளனர். எங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அந்நாடு மீது தாக்குதல் நடத்துமாறு ஹிஸ்புல்லா அமைப்பை கேட்டுக் கொள்வோம். அப்புறம் இஸ்ரேலில் எதுவுமே எஞ்சியிருக்காது என்றார்.

ஈரான் தரப்பிலிருந்து இதுவரை இப்படி விரிவாக பதிலடித் தாக்குதல் பற்றி பேசுவது இதுவே முதல்முறை என்பதால் அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...