Sep 18, 2012

நகர வாழ்க்கை, மூளையை பாதிக்கிறது: ஆய்வில் தகவல்


கிராமப்புறத்தில் வாழும் மனிதர்களை விட நகர்ப்புறத்தில் வசிக்கும் மனிதர்கள் அதிக மனஅழுத்தத்திற்கு உள்ளாவதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது. நகர்புறத்தில் காணப்படும் வேறுபட்ட சமூக அமைப்பு, அதிக சப்தம் மற்றும் மக்கள் நெருக்கடி ஆகியவை காரணமாக மூளையின் அதிக உணர்வு மிக்கதான மற்றும் மனஅழுத்தத்துடன் தொடர்பு கொண்ட அமைக்டலா என்ற பகுதி அதிகமாக செயல்படுவது தெரிய வந்துள்ளது. மேலும், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் பகுதியாகவும், சுற்றுப்புறத்தோடு தொடர்பு கொண்டதாகவும் விளங்கும் மூளையின் மற்றொரு பகுதியான சிங்குலேட் கார்டெக்ஸ், நகர்ப்புறத்தில் பிறந்தவர்களிடம் தேவையற்ற வகையில் அதிகமாக செயல்படுவதும் ஆய்விலிருந்து தெரிய வருகிறது. வரும் 2050-ம் ஆண்டிற்குள் ஏறக்குறைய 70 சதம் பேர் நகர்ப்புற வாழ்க்கைக்கு வந்து விடுவர் என கூறப்படுவதால் ஒழுங்கற்ற மனநிலை, எதிலும் அதிக ஆர்வமின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க சிறந்த மனநலத்துடன் வாழ்வதற்கு ஏற்ப நகர்ப்புறங்களை தற்போதிருந்தே வடிவமைத்து அதற்கேற்ற வகையில் வாழ்க்கை முறையினை அமைத்து கொள்வது நலம் தரும் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...