Sep 26, 2012

உலகில் பரவும் ஆபத்தான புதிய வைரஸ் நோய் - ஐ.நா எச்சரிக்கை!
[Wednesday, 2012-09-26
சில ஆண்டுகளுக்கு முன்பு சார்ஸ் எனும் நோய் உலகம் முழுவதும் பரவி ஏராளமானோரை பலி கொண்டது. இப்போது அதேபோல் ஒருவித வைரஸ் பரவி வருகிறது. சவுதிஅரேபி யாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் மர்ம நோயால் இறந்தார். அவரை தாக்கிய நோய் எது என்று ஆய்வு செய்தபோது அது புதிய வகை வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டது என்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் கத்தார் நாட்டை சேர்ந்த ஒருவருக்கும் இதே நோய் தாக்கி இருக்கிறது. அவர் சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு லண்டன் சென்றார். அங்கு நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். தற்போது அவருடைய சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். அவரையும் புதிய வகை வைரஸ் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வைரசை இங்கிலாந்து சுகாதார மையம் ஆய்வு செய்தது. இதுவரை மனிதனை தாக்காத புதிய வகை வைரஸ் என்று சுகாதார மையம் தெரிவித்து இருக்கிறது.இந்த வைரஸ் மேலும் பரவினால் பெரும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சுகாதார மையம் கூறுகிறது. இதையடுத்து உலக சுகாதா நிறுவனம் உலகம் முழுவதற்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வைரசை அழிக்க உடனடியாக மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.

Sep 25, 2012

பேஷியல் செய்யப் போறீங்களா? இதை படிச்சுட்டு செய்யுங்க...



முகத்தை அழகு படுத்துவதற்கு ஒரு ஈஸியான வழி என்றால் அது ஃபேஷியல் செய்வது தான். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள், தூசிகள், கரும்புள்ளிகள் போன்றவை நீங்கிவிடும். இத்தகைய ஃபேஷியலை அழகு நிலையங்களுக்குச் சென்றும் செய்யலாம் அல்லது வீட்டிலும் செய்யலாம். அவ்வாறு ஃபேஷியல் செய்யும் போது, முதலில் சருமத்தின் மீது சரியான பராமரிப்பு கொடுக்க வேண்டும். அதிலும் ஃபேஷியல் அனைத்து சருமத்தினருக்கும் ஏற்றதல்ல. ஒருசில
கென்யா காட்டில் நடைபயிலும் சிங்கக் குட்டிகள்..

கென்யாவின் காட்டுப்பகுதிக்குள் வீதிவழியாக சிங்கங்கள் தமது குட்டிகளை அழைத்துச் செல்லும் காட்சிகளே இவை, இந்த அரிய புகைப்படங்கள் David Lazar எனும் படப்பிடிப்பாளரால் எடுக்கப்பட்டவை.
இப்படங்கள் எடுப்பதற்காக காட்டிலேயே இரண்டு நாட்கள் வரை தனித்திருந்த David Lazar இனது அனுபவங்கள் திகிலானதுடன் சுவாரசியமானவை. காலை சூரிய உதயத்திற்கு முன்னமே சிங்கங்களின்

இன்டர்நெட் இல்லாதபோதும் கூகுளில் தகவல்களை பெறும் புதிய வசதி..

.

இன்டர்நெட் வசதி இல்லாமல் கூகுளில் எப்படி சர்ச் செய்வது? இது கொஞ்சம் கடினமான கேள்வி தான். ஆனால் இதற்கு விடையளிப்பது மிக சுலபம். இக்கட்டான தருணங்களில் கைகொடுக்கிறது கூகுளின் சில வசதிகள். மிக முக்கியமான சில தகவல்களை கூகுளில் சர்ச் செய்வதன் மூலம் பெற முடியும். ஆனால் இதற்கு இன்டர்நெட் மிக அவசியம்.
இன்டர்நெட் இல்லாமலும், மொபைலில் வேண்டிய தகவல்களை

'The Internet Association' உலகின் முன்னணி இணையங்களின் கூட்டிணைவில் ஏற்பட்டுள்ள சர்ச்சை



இணையத்தளங்களின் பொருளாதார நிலையை ஸ்திரத்தன்மையுடன் பேணுவதற்கும் இணையங்களின் மாற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்கும் உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப, சமூக வலையமைப்பு நிறுவனங்கள் இணைந்து குழு ஒன்றினை ஸ்தாபித்துள்ளது. இந்த அமைப்புத் தொடர்பில் ஒருபுறம் சாதகமான கருத்துக்கள் வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கும் அதேவேளை சர்ச்சைகளும்

கணணி பயன்பாட்டை இலகுபடுத்த சில குறிப்புக்கள்..



பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தி சில பைல்களை டவுண்லோட் செய்கிறீர்கள். வழக்கமாக டெஸ்க் டாப்பில் டவுண்லோட் செய்திடுவோம். அல்லது எங்கே டவுண்லோட் செய்திட என்று ஒரு சிறிய விண்டோவில் கேட்கும்போது, கம்ப்யூட்டர் டைரக்டரியை பிரவுஸ் செய்து, போல்டரைத் தேர்ந்தெடுத்து ஓகே கொடுப்போம். சில வேளைகளில், சில தளங்களில் இந்த டயலாக் பாக்ஸ் எல்லாம் கிடைக்காதபடி செய்து வைத்திருப்பார்கள். நாமும் டவுண்லோட்

உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது இலந்தை பழம்


இலந்தை கனி மிக அதிகமான மருத்துவ குணம் கொண்ட ஒரு கனியாக விளங்குகிறது. 100 கிராம் இலந்தையில் 74% கலோரி,17 % மாவுப் பொருள், 0.8 % புரதம், மற்றும் தாது உப்புகள், இரும்புசத்துகள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது.
* உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை

இதயத்தை பாதிக்குது இன்ஸ்டன்ட் உணவு!

ht1348

உடனடி உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டவர்களில் நீங்களும் ஒருவரா? உங்கள் இதயம், சிறுநீரகம், மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகள் பழுதடைந்தால் சிகிச்சை எடுத்துக்கொள்ள, இப்போதே சேமிக்கத் தொடங்குங்கள். மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக நினைக்க வேண்டாம்!

அன்றாட உணவில் ஆரோக்கியம் தரும் உணவுகள் அவசியம்


ht1353 நம் உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.
வெள்ளைப் பூண்டு:  பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட

ரத்தக் குழாய்அடைப்பும், இதய நோயும்!


தகொலஸ்டிரால் எனப்படும், கொழுப்புப் பொருட்கள் சிறிது சிறிதாக ரத்தக் குழாய்களின் உட்புறம் படிவதனால் ஏற்படும் அடைப்பு ஆகும். எங்கெல்லாம் இப்படிக் கொழுப்புப் பொருட்கள் படிந்து குவிகின்றனவோ, அங்கெல்லாம், ரத்தக் குழாயைச் சுருங்கச் செய்கின்றன. அதன் விளைவாக, இதயத்துக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. இப்படி குறைவாக ரத்தம் அளிக்கப்படும் நிலையைத் தான், "இஸ்கெமியா’(ischemia) என்றழைக்கின்றனர்.

அஞ்ஜினா என்றால் என்ன?:
அஞ்ஜினா என்பது, சில நிமிடங்களே நீடிக்கக் கூடிய, ஒரு வகையான நெஞ்சுவலி அல்லது சுகவீனம். அதை, இதயம் அதிக ரத்தம் கேட்டு அழுவதாக எடுத்துக் கொள்ளலாம். இதயத்துக்கு வேண்டிய பிராணவாயு மற்றும் ஊட்டச் சத்துக்கள், தேவையான அளவுக்குக் கிடைக்காமையைக் குறிக்கும், ஓர் அறிகுறி தான் அது. இந்த வலியைப்

Sep 24, 2012


Google இன் பன்முகங்கள்... !

கூகுள் இன்று இணையத்தின் தூண் என்றால் அது மிகையாகாது. இணையத்தின் அனைத்து பகுதிகளிலும் தனது வேர் பரப்பி நிற்கும் மிகப் பெரிய ஆலமரம் தான் அது. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஜிமெயில், கூகுள் பிளஸ், பிளாக்கர், அட்சென
்ஸ் என்ற பலவற்றை பற்றி தெரியும். இன்னும் தெரியாத பல உள்ளன.

Google search


கூகுள் தனது கடையை விரித்த போது விற்ற முதல் பொருள் இதுதான். இன்றுவரை இதில் அது தான் கிங் என்றும் நிரூபித்து வருகிறது. சில சமயங்களில் Google.com, google.lk என்று பார்த்து இருப்பீர்கள், ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு டொமைனில் இயங்கி வரும் இது மொத்தம் 198 டொமைன்களில் உள்ளது.


வெறும் Search என்ற வார்த்தையோடு நின்று விடாமல் இதில் பல வசதிகளை வழங்குவது தான்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...