Jan 26, 2013


அமெரிக்காவில் மிகப்பெரிய இந்து ஆலயம் திறப்பு!

largest Hindu temple in the United States




  • 2
     

அமெரிக்காவின், லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில், 20 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள, சுவாமி நாராயண் கோயில் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும், சுவாமி நாராயண் கோயில்கள் உள்ளன. தற்போது, அமெரிக்காவின், லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில், 68வது கோயில், 100மில்லியன் டொலர் செலவில், கட்டப்பட்டுள்ளது. 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த கோயில், பூகம்பத்தால் பாதிக்கப்படாத வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலின் பெரும்பாலான பகுதிகள், இத்தாலிய பளிங்கு கற்களால் வடிவமைக்கப்பட்டு, ஜொலிக்கின்றன. இந்த கோயிலுக்கு தேவையான மின்சக்தி, சூரிய சக்தி மூலம் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின், ஹாலிவுட் திரைப்பட நகரத்துக்கு அருகே, இந்த கோயில் அமைந்துள்ளதால், சுற்றுலா பயணிகள் ஈர்க்கும் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஹெலிகாப்டரில் பறந்து அசத்திய அஸ்டன் மார்ட்டின் கார்..!

ஹெலிகாப்டரில் பறந்து அசத்திய அஸ்டன் மார்ட்டின் கார்..!



  • 37
     

அஸ்டன் மார்ட்டின் கார் நிறுவனம் துவங்கப்பட்டு நூறாண்டுகள் ஆகிறது. இந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.
அதில் ஒரு பகுதியாக…
தனது வாங்கிஷ் காரை புர்ஜ் அல் அராப் ஓட்டலின் பக்கவாட்டில் ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் ஹெலிபேடில் காரை ஹெலிகாப்டர் உதவியுடன் தூக்கி வந்து நிறுத்தி இந்த விழாவை சிறப்பித்தது அஸ்டன் மார்ட்டின்.

இரும்பு கர்டரில் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சி

Picture 1 of 8
ஹெலிகாப்டரில் பறப்பதற்காக ராட்சத இரும்பு கர்டரில் நிறுத்தப்பட்டிருக்கும் அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் கார்.


  • 37
     




  • 34
     

gmail-labsகூகுளின் ஜிமெயில் தரும் ஏராளமான பயனுள்ள வசதிகளில் ஒன்று ஜிமெயில் லேப்ஸ்(Gmail Labs). இவற்றை சோதனையில் இருக்கும் வசதிகள் என்று சொல்லலாம். இவை ஜிமெயில்க்காக சோதனை அடிப்படையில் உருவாக்கியது, உங்கள் வேலைகளை எளிதாக்க உதவும் இவற்றை பற்றி பார்ப்போம் இன்று.
Gmail Labs என்றால் என்ன?
ஜிமெயில் தன்னுள்ளேயே ஏராளமான வசதிகளை கொண்டிருந்தாலும் அவை அனைத்தும் நமக்கு எந்த வகையில் பிரச்சினை வராதவாறு அமைத்து இருக்கும். ஆனால் ஜிமெயில் Labs என்பது Testing இல் இருப்பவை, பல Labs பயனுள்ள வசதிகளை தரும் போதும், சிலவற்றை பலர் விரும்பாமல் போகலாம். அம்மாதிரியான வசதிகளை பயனர் மீது திணிக்காமல், விரும்பியவர்கள் மட்டும் பயன்படுத்தலாம் என்பதற்கு உருவாக்கப்பட்டது.
இவற்றின் செயல்பாட்டை பொறுத்து குறிப்பிட்ட Lab ஜிமெயில் Feature ஆக சேர்க்கப்படும் அல்லது நீக்கப்படும். இது பயன்படுத்துபவர்களின் Feedback

LG அறிமுகப்படு​த்தும் Optimus G கைப்பேசிகள்!

optmius_g





  • 6
     

இலத்திரனியல் உற்பத்தியில் முன்னணியில் திகழும் நிறுவனங்களுள் ஒன்றான LG ஆனது Optimus G எனும் புதிய கைப்பேசிகளை விரைவில் அறிமுகப்படுத்துகின்றது.
Android 4.1 Jellybean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசிகள் 5 அங்குல அளவு உடைய தொடுதிரையினை கொண்டுள்ளதாகவும் 1.7 GHz வேகத்தில் செயலாற்றவல்லதும் Snapdragon Pro தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதுமான Processor மற்றும் 3,000 mAh மின்கலம், 13 மெகாபிக்சல் கமெரா ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இவற்றுடன் பிரதான நினைவகமாக 2 GB RAM காணப்படுவதுடன் சேமிப்பு வசதியானது 32 GB ஆக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Jan 25, 2013

மருதனார்மடத்தில் விண்ணைத்தொடும் உயரத்தில் வீரஹனுமான்

கடந்த ஒருவருடத்திற்கு மேலாக மருதனார்மடம் சந்தியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் ஆலயத்தில் 60 அடி உயரமான பிரமாண்டமான ஆஞ்சநேயர் சிலை வெளிநாட்டிலிருந்து வந்த சிற்பக்கலைஞர்களால் உருவமைக்கப்பட்டு இருக்கிறது.
ஆலய முன்வாசலில் விண்ணைத்தொடும் இச்சிலையினை நூற்றுக்கணக்கான பக்தர்கள் பார்வையிட்டு வருகின்றனர். இச் சிற்ப வடிவமைப்புக்காக சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொகை செலவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...