May 2, 2013

அமாவாசை கழித்து வரும் மூன்றாம் நாளை திரிதியை திதி என்பர்


| :



                  மாவாசை கழித்து வரும் மூன்றாம் நாளை திரிதியை திதி என்பர். சித்திரை மாதத்தில் வரும் திரிதியை திதி மிகச் சிறப்பானது. இதனைதான் "அட்சய திரிதியை' என்பர். அட்சயம் என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள். அள்ள அள்ளக் குறையாது அள்ளித் தரும் அற்புதத் திருநாள் இது. இந்நாளில் செய்யப்படும் எந்த நற்காரியமும் தான- தர்மங்களும் அதிகப் பலன்களைத் தரும் என்பர்.

இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது. அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாமே. அன்று உப்பு, அரிசி மற்றும் தேவையான ஓரிரு ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என வாங்கலாம். எப்படியும் நாம் மாதாமாதம் மளிகைப் பொருட்கள் வாங்கி ஆக வேண்டும். அதனை இம்மாதத்தில் மட்டும் இந்த அட்சய திரிதியை நாளில் வாங்கி வளம் பெறலாமே.

இந்த அற்புதமான திருநாளில்தான் குசேலன் தன் பால்ய குரு குல நண்பனான கண்ணபிரானைச் சந்தித்து தன் வறுமையைப் போக்கிக் கொண்டான். குபேரன் சங்கநிதி, பதும நிதியை போன்ற நிதிகளைப் பெற்றான். பாண்டவர்கள் தங்களின் வனவாசத்தின்போது சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்றனர். இது மணிமேகலை பெற்ற அட்சய பாத்திரம் போன்றது. எடுக்க எடுக்க குறையாமல் உணவு வழங்கும் பாத்திரம்தான் இது. வனவாசத்திற்கு இதுதான் பெரிதும் பாண்டவர்களுக்குப் பயன்பட்டது.

இந்த அட்சய திரிதியை நாளில்தான் பிட்சாடனரான சிவபெருமான் தன் கபால (பிரம்ம கபாலம்) பிட்சை பாத்திரத்தில் நிரம்பும் அளவு உணவை காசியில் அன்னபூரணியிடமிருந்து பெற்றுக்கொண்டார். கௌரவர்கள் சபையில் துச்சாதனன் பாஞ்சாலியின் உடையை உருவி மானபங்கப்படுத்தினான். அப்போது கண்ணபிரான் "அட்சய' என்று கூறி கைகாட்டி அருள, துச்சாதனன் உருவ உருவ புடவை வளர்ந்து கொண்டே இருந்த நாள் இந்த அட்சய திரிதியை நாளில்தான். இதனால்தான் பாஞ்சாலி மானம் காப்பாற்றப்பட்டது.

வட இந்தியாவில் இந்நாளை "அகஜித்' என்பர். ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள். அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான்.

ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ லட்சமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான்.

எனவே, அட்சயதிரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும். நம் இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும். அன்று செய்யும் தான- தர்மத்தால் மரண பயம் நீங்கி உடல்நலம் உண்டாகும். அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும்.















அட்சய திரிதியை: நெருங்கியாச்சு

Temple images
அட்சய திரிதியை: நெருங்கியாச்சு மினி தீபாவளி!

அட்சயதிரிதியை மே 13ல் வருகிறது. இந்த நாளில் ஏதாவது பொருள் வாங்க வேண்டும் என இப்போதே திட்டமிடல் நடந்து கொண்டிருக்கிறது. நகை, பிரிட்ஜ், ஏசி, டிவி, துணிமணிகள் என குழந்தை முதல் பெரியவர் வரை மினி தீபாவளியாகவே இந்த நாளைக் கருதுகின்றனர். திட்டமிடல் என்பது வாழ்க்கையில் பெரிய விஷயம். அந்த வழக்கத்தை இந்த திருவிழா நம் மத்தியில் கொண்டு வந்திருக்கிறது. குறிப்பாக, இந்த நாளுக்காக பணத்தை சேமிக்க துவங்கி விட்டார்கள் பலர். அதாவது சுக்கிரதிசை தேடி வருகிறது.  சரி...சுக்கிரதிசை என்கிறார்களே! அப்படியென்றால் என்ன!
யார் கையிலாவது நாலு காசு புழங்கினால் போதும்! அவனுக்கென்னப்பா!

தக்காளி ஸ்குவாஷ்.

தக்காளி ஸ்குவாஷ்.
தேவையான பொருட்கள்:
நன்றாக பழுத்த தக்காளி -1 1/2 கிலோ.
தக்காளியை வேக வைத்து ஆறியவுடன் மிக்சியில் அடித்து வடி கட்டவும்.
ஒரு லிட்டர் ஜுஸ் இருந்தால் ஒன்றரை கிலோ சீனி, ஒரு லிட்டர் தண்ணீர், ஒரு தேக்கரண்டி சிட்ரிக் ஆசிட் மூன்றையும் சேர்த்து பாகு தயாரித்து ஆற வைத்து, தக்காளி ஜூஸுடன் கலக்கவும்.
டொமேடொ ரெட் கலரை தண்ணீரில் கரைத்து, 3/4 தேக்கரண்டி ‘சோடியம் பென்சோயேட்’ சேர்த்து பாட்டிலில் நிரப்பவும். லஸ்ஸி.
நான்கு கப் கெட்டித் தயிரில் ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாறு,மற்றும் எட்டு தேக்கரண்டி சீனி போடவும்.
இதனை மிக்சியிலிட்டு ஐஸ் கட்டிகளும் போட்டு  நுரை வரும் வரை அடிக்கவும்.
இதனை உடனே குடிக்க வேண்டும். லெமன் க்ரஷ்.
ஒரு லிட்டர் எலுமிச்சை சாறு இருந்தால் இரண்டு கிலோ சீனி, ஒரு லிட்டர் தண்ணீர், சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்து பாகு தயாரிக்கவும்.
பாகு ஆறிய பின்பு  பழச் சாறு , லெமன் எசென்ஸ் 4 தேக்கரண்டி, சிறிதளவு லெமன் மஞ்சள் கலர் பவுடர்,  தண்ணீரில் கரைத்த 3/4 தேக்கரண்டி ‘பொட்டாசியம் மெடா பை சல்பைடு’ சேர்த்து பாட்டிலில் நிரப்பவும்.
லெமன் பார்லி ஸ்குவாஷ்.
எலுமிச்சை பழச் சாறு 1 லிட்டர் இருந்தால் பார்லி மாவு 3 தேக்கரண்டி எடுத்து, கட்டி தட்டாமல் சிறிது  தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.
1.6 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து அத்துடன் கரைத்து வைத்திருக்கும் பார்லி மாவை கலக்கவும்.
மாவு வெந்த பின்பு 1.4 கிலோசீனி சேர்த்து, சீனி கரைந்ததும்சிறிதளவு எலுமிச்சைப் பழச்சாறு கலந்து வடி கட்டவும்.
பாகு நன்றாக ஆறியவுடன் பழச்சாறு, 2தேக்கரண்டி லெமன் எசென்ஸ், சிறிது தண்ணீரில் கரைத்த முக்கால் தேக்கரண்டி ‘பொட்டாசியம் மெடா பை சல்பைடு’  என்ற மருந்து மூன்றையும் சேர்த்து பாட்டிலில் நிரப்பவும்.

குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிறைந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று.


சுப காரியத்தில் முதல் இடம் வகிக்கும் பழம் தான் எலுமிச்சை. இது உலகெங்கும் நிறைந்து காணப்படும் பழமாகும். குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிறைந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று.

மனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களை குணமாக்கும் சர்வ ரோக நிவாரணியாக எலுமிச்சை திகழ்கிறது. முதன்முதலாக 1784ல் கார்ஸ்வில் ஹெம்ஷீலி என்பவர் எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதைக் கண்டுபிடித்தார். மருத்துவர் ப்ளென்னின் (1875) ஆராய்ச்சியில் கெட்ட இரத்தத்தை தூய்மை படுத்தும் மருந்துகளில் எலுமிச்சையை விட சிறந்தது வேறு இல்லை என கண்டறிந்தார்.

உதாரணமாக இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மனிய வீரர்களின் காயத்தில் இருந்து ஓழுகும் இரத்தத்தை உடனடியாக நிறுத்த எலுமிச்சையை உபயோகப் படுத்தியதாக

May 1, 2013

நல்லூர் இராசதானி

வியாழன், வைகாசி 02, 2013 8:03:55 மு.ப

 

 
 

பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்
வட இலங்கையில் முதன் முறையாக ஒரு மன்னன் ஆட்சிக்கு உட்பட்ட அரசு தோன்றிய காலமாக 13 ஆம் நூற்றாண்டு காணப்படுகிறது. இவ் அரசின் தலைநகர் அமைந்த இடமாக நல்லூர் விளங்குகிறது. இந் நல்லூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆரியச்சக்கரவர்த்திகளும், அவர்களைத் தொடர்ந்து சுதேச மன்னர்களும் ஏறத்தாழ 350 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்கள். இவர்களுடைய ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணம், தீவகம், தென்மராட்சி, வடமராட்சி, வலிகாமம், வெளிநாடு என்று அழைக்கபடும் பூநகரி, பொன்னாலை, வன்னி போன்ற பிரதேசங்கள் நேரடிக் கண்காணிப்பில் இருந்தன. இவற்றைத் தவிர திருகோணமலை மாவட்டம், கிழக்கிலங்கையில் சில வன்னிமைகள் ஆகியனவும் யாழ்ப்பாண அரசை ஏற்று நிர்வாகம் நடத்தினார்கள். திருமண உறவுகள் மூலம் இவ் அரசுகளுடன் உடன்பாடு ஏற்படுத்தி, அவர்களை யாழ்ப்பாண மன்னர்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தமைக்கும் ஆதாரங்கள் உள்ளன.

ஆகவே யாழ்ப்பாண மன்னர்களின் 350 ஆண்டு கால ஆட்சியில் ஒரு மையமாக நல்லூர் இராசதானியே காணப்படுகிறது. இங்கு உள்ள புராதன எச்சங்கள் அனைத்தும் யாழ்ப்பாண இராச்சியத்துக்கு உரியது என்று நாம் கூறமுடியாது. ஆனால் அவ் விடங்களில் புராதன எச்சங்கள் தோன்றியமைக்கு, யாழ்ப்பாண மன்னர்களுடைய இராசதானி அங்கு இருந்தமை ஒரு முக்கிய காரணமாகும். போர்த்துக்கேய ஆசிரியராக குவைரோஸ், தனது இறுதி யுத்தம் நல்லூரில் நடைபெற்றதாகக் குறிப்பிடுவதை உதாரணமாகக் கூறலாம். அந்த இறுதி யுத்தத்தின்போது மிகப் பெரிய ஒரு கோயிலைத் தாங்கள் சங்கிலிய மன்னனிடம் இருந்து கைப்பற்றி, அக்கோயிலையே தமது பாதுகாப்பு அரணாகவும், நிர்வாக அரணாகவும் பயன்படுத்தியதாக தமது குறிப்புக்களில் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

ஆகவே அத்தகைய ஒரு பின்னணியில் பிற்காலத்தில் ஒல்லாந்தர் கால, ஆங்கிலேயர் கால கட்டடங்கள் காணப்பட்டமைக்கு, ஏற்கனவே இருந்த இராசதானி மையத்தை அவர்கள் கைப்பற்றி, அங்கிருந்து ஆட்சி செய்ததன் விளைவுதான் எனக் கூறமுடியும். தற்போது நல்லூர்ப் பிரதேசத்தில் உள்ள யாழ்ப்பாண அரசு காலச் சின்னக்களும் யாழ்ப்பாண அரசுகளைத் தொடர்ந்து ஆட்சி செய்த போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கிலேய காலச் சான்றுகளும் காணப்படுவதற்கு முக்கிய காரணம் நல்லூர் இராசதானி ஆகும். ஆயினும் தற்போது நல்லூர்ப் பிரதேசத்தில் நான்கு வகையான வரலாற்றுச் சின்னங்கள் காணப்படுகின்றன. யமுனா ஏரி, சங்கிலியன் தோரண வாயில், சங்கிலியன் தோப்பு, மந்திரிமனை என்பனவே அவையாகும்.



யமுனா ஏரி
இவற்றில் யமுனா ஏரியானது, யாழ்ப்பாண அரசு கால தொன்மைச் சின்னமாகப் பலராலும் கருதப்படுகிறது. யமுனா ஏரியின் வரலாற்று முக்கியத்துவம், யாழ்ப்பாண வைபவமாலையில் சிறப்பித்துக் கூறப்படுவது இங்கு நோக்கத்தக்கது. அதில் கங்கை நதியில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை ஊற்றி, அவ்விடத்திலே யமுனா ஏரி ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. யமுனா ஏரி பல்வேறு கால கட்டங்களில் புனரமைக்கப்பட்டமைக்கு உட்படுத்தப்பட்டபோது, அங்கிருந்து புராதன கட்டட எச்சங்களும், வழிபாட்டுக்குரிய தெய்வச் சிலைகளும் கிடைத்தமை மூலம் இவ் ஏரி வரலாற்றுப் பழமை வாய்ந்த ஏரி என்பதற்கு மிக முக்கியமான சான்றாக அமைகிறது. 'ப ' வடிவில் அமைந்த இவ் ஏரியின் அமைப்பானது, பிற்காலத்தில் தோன்றிய ஏரிகள் மற்றும் கேணிகள் ஆகியவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகக் காணப்படுகிறது. மேலும் யாழ்ப்பாண அரசு தொடர்பான இலக்கியங்களிலே யமுனா ஏரிக்குக் கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் அது ஒரு பழைமையான ஏரி என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

சங்கிலியன் தோரண வாயில்

நல்லூர் பிரதேசத்தில் காணப்படுகின்ற மிக முக்கியமான கலை வடிவமாக சங்கிலியன் தோரண வாயில் காணப்படுகிறது. சங்கிலியன் தோரண வாயிலானது, மன்னனுடைய அரண்மைக்குச் செல்லுகின்ற வாசலின் உட்பகுதி என்பது பொது மக்கள் பலருடைய பொதுவான அபிப்பிராயம் ஆகும். யாழ்ப்பாண அரசு தொடர்பாகத் தோன்றிய நூல்களான கைலாய மாலை, யாழ்ப்பாண வைபவமாலை முதலான இலக்கியங்களிலே யாழ்ப்பாண அரசு கால அரண்மனைகள், கோட்டைகள், வீதிகள் போன்றவற்றைப் பற்றிய விபரமான செய்திகள் காணப்படுகின்றன. அந் நூல்களில் குறிப்பிடப்பட்ட பலவற்றை தற்போது பார்க்க முடியாவிட்டாலும், இத்தோரண வாயில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கலை வடிவமாகவும், வரலாற்றுச் சின்னமாகவும் பார்க்கப்படுகிறது. இத் தோரண வாயிலின் அழகும், கலை மரபும், தோற்றமும் ஒல்லாந்தர் காலத்தை ஒத்தது என்பது அறிஞர்களின் பொதுவான கருத்தாகும்.

ஆயினும் அவ் விடத்திலே அவர்கள் ஒரு தோரண வாயிலை அல்லது ஒரு வாசல் பகுதியை அமைந்தமைக்கு, ஏற்கனவே அங்கிருந்து ஆட்சி புரிந்த யாழ்ப்பாண மன்னர்களைப் போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் வெற்றி கொண்டமைதான் முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. ஆகவே இந்தத் தோரண வாயிலின் கலை மரபிலே பிற்காலப் பிற நாட்டுக் கலை மரபுகள் காணப்பட்டாலும், அதில் காணப்படுகின்ற கபோதம், கும்முட்டம் போன்ற கலை வடிவங்கள் ஒரு திராவிடக் கலை மரபுக்கு உரியதாகக் காணப்படுகிறது. பொதுவாக வரலாற்று ஆசிரியர்கள் இத்தோரண வாயிலின் கலை வடிவிலே அன்னியக் கலை மரபும், சுதேச கலை மரபும் கலந்து காணப்படுவதாகச் சுட்டிக் காட்டுகின்றனர்.

சங்கிலியன் தோரண வாயில் பழைமையான ஒரு இருப்பிடத்தின், தொடர்ச்சியான பிற்கால வடிவமாகப் பார்க்கப்பட்டாலும், இவ்விடத்திலே பழைமையான ஓர் இருப்பிடம் இருந்திருக்கலாம் என்பதை தோரண வாயிலுக்கு சில யார் தொலைவில் கிழக்கு நோக்கிச் செல்லுகின்ற போது காணப்படுகின்ற சின்னங்கள் மிக முக்கிய சான்றுகளாகக் காணப்படுகின்றன. குறிப்பாக இலங்கைத் தொல்லியல் திணைக்களம் அங்கு அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது, அப்பிரதேசத்தின் நிலத்துக்குக் கீழே மிகப் பெரிய அரண்மனை போன்ற கட்டடங்கள் இருந்ததற்கான எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனால்தான் என்னவோ, பாரம்பரியமாக சங்கிலியன் தோப்பு அல்லது சங்கிலியன் இருப்பிடம் என்று கூறப்படும் இடத்தில் எதிர்பாராத வகையில் கிடைத்த தொல்லியல் சான்றுகள், அங்கு ஒரு புராதன அரண்மனை அல்லது இருப்பிடம் இருந்தது என்பதை உறுதிப்படுத்துகின்றது. அதன் காரணமாகவே தோரண வாயிலுக்குக் கிழக்கே காணப்படுகின்ற கட்டடங்களையும், அதன் கலை வடிவங்களையும் பொது மக்கள் சங்கிலிய மன்னனின் அரண்மனைக் கட்டடத்தின் ஒரு பகுதி எனக் கூறுகிறார்கள். அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது உள்ள கட்டட அத்திவாரத்தின் கீழ் தென்மேற்கு நோக்கியும், தென் கிழக்கு நோக்கியும் பல அத்திவாரங்களும், பல சிதைவுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மந்திரிமனை

நல்லூரில் காணப்படுகின்ற, பலரையும் கவர்ந்த ஒரு நினைவுச் சின்னமாக மந்திரிமனை காணப்படுகின்றது. இது யாழ்ப்பாணத்தில் கண்டு பிடிக்கப்பட்ட அல்லது அங்கு தற்போது காணப்படுகின்ற பழைமையான பல்வேறு கட்டடங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு கலை வடிவமாகும். இதன் அமைப்பு, தோற்றம், அழகு, தொழிநுட்பம் ஆகியன யாழ்ப்பாணத்தில் உள்ள மிகத் தொன்மையான கலை மரபுக்கு சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளது. இக் கட்டடப் பகுதியின் மேற் பக்கத்தில் தெற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய திசைகளை நோக்கி மூன்று கல்வெட்டுச் சாசனங்கள் காணப்படுகின்றன. இவை பிற்காலத்துக்குரிய சாசனங்களாகவே காணப்பட்டாலும், அரச இலட்சனையோடு உள்ள பிற்காலத்துக்குரிய கட்டடம் என கூற முடியாது. ஏனெனில், யாழ்ப்பாண அரசு தொடர்பான பல இலக்கியங்களில் இவ் அரண்மனை பற்றிய குறிப்புகள் பல காணப்படுகின்றன. ஒல்லாந்தர் அல்லது போர்த்துக்கேயருக்கு உதவியாக இருந்தவர்களுக்காக, அவர்கள் கட்டிக் கொடுத்த கலை வடிவமாகவும் இதை சில அறிஞர்கள் நோக்குகிறார்கள்.

ஆனாலும் யாழ்ப்பாணத்தில் உள்ள மிகச் சிறந்த, பாதுகாக்கப்பட வேண்டிய, முக்கியமான கலை வடிவமாக இம் மந்திரிமனை காணப்படுகிறது. இதன் அமைப்பு ஒல்லாந்தர் கால அல்லது பிற்பட்ட ஒல்லாந்தர் காலத்துக்கு உரியதாக இருந்தாலும், அதன் மர வேலைப்பாடுகளும், தொழிநுட்பமும் மிகப் பழமையானவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே யாழ்ப்பாணத்தில் ஒரு அரசு 13 ஆம் நூற்றாண்டுக்கும் 16 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் இருந்தது என்பதற்கு இம் மந்திரிமனை மிகச் சிறந்த ஒரு சான்றாகும். பொதுவாக இம் மந்திரிமனையை அவதானித்த மேற்குலக அறிஞர்களும், சுதேச அறிஞர்களும் "இதன் கலை வடிவத்தில் அன்னியக் கலை மரமும், சுதேச கலை மரமும் கலந்து காணப்படுவதற்கு முக்கிய காரணம் இம்மந்திரிமனையைக் கட்டியவர்கள் சுதேச மக்களாக இருக்க வேண்டும்" எனக் குறிப்பிடுகின்றனர்.

ஆகவே நாம் இன்று பார்க்கின்ற நல்லூரில் ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் கட்டடங்கள் இல்லாவிட்டாலும், பொதுவாக நகரிலும், கடற்கரையிலும் தங்கள் இருப்பிடங்களையும், நிர்வாக மையங்களையும், இராணுவ மையங்களையும் அமைத்துக் கொண்ட போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் அவற்றை அங்கு அமைக்காது நல்லூரில் அமைத்துக் கொண்டமைக்கு ஏற்கனவே நல்லூரிலே ஒரு இராசதானி இருந்தமைதான் மிக முக்கிய காரணமாகும். ஆகவே கலை மரபில் அன்னியக் கலை மரபு இருக்கின்ற காரணத்தால் இக் கலை வடிவங்களை நாம் புறக்கணிக்க முடியாது. அதிலே சுதேச கலை மரபுகளும் கலந்து காணப்படுகின்றன. ஆகவே இக்கலை வடிவமும் பாதுகாக்கப்பட வேண்டும்.

தொகுப்பு: உமா பிரகாஷ்



 yarlmann Facebook yarlmann twitter yarlmann Video

நல்லூர் சட்டநாதர் கோயில்


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நல்லூர், சட்டநாதர் கோயிலின் முன்புறத் தோற்றம்
நல்லூர் சட்டநாதர் கோயில் இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில், யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியை அண்டி அமைந்துள்ளது. இதன் தோற்றம் சட்டநாதர் என்னும் ஒரு சித்தரின் சமாதியுடன் தொடர்புடையது என்று சிலர் கூறுகின்றனர். இச்சித்தர் 10, 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவர். இவர் பாம்பாட்டிச் சித்தரின் குருவாவர். பாம்பாட்டிச் சித்தர் இந்த ஆலயம் பற்றிப் பல பாடல்கள் இயற்றியுள்ளார். எனினும், யாழ்ப்பாணத்தின் வரலாறு கூறும் யாழ்ப்பாண வைபவமாலை, யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட முதல் ஆரியச் சக்கரவர்த்தி நல்லூர் நகரை அமைத்தபோது அதற்குக் காவலாக அதன் வட திசைக்குச் சட்டநாதேசுவரர் கோயிலை அமைப்பித்ததாகக் கூறுகிறது. இதுவே இன்றைய சட்டநாதர் கோயில் என்பது பல வரலாற்றாளர்களது கருத்து. யாழ்ப்பாண இராச்சியக் காலத் தொடர்பு கொண்ட மந்திரி மனை, சங்கிலித் தோப்பு, பண்டாரக் குளம் ஆகியவற்றுக்கு மிக அண்மையில் இக் கோயில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சட்டை முனியுடன் தொடர்புள்ள இத்திருத்தலம் சட்டைநாத ஈஸ்வரர் என்றிருந்து பின்னர் மருவி சட்டநாதர் ஈஸ்வர கோயிலாக மாறியிருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர்.
1620 ஆம் ஆண்டில் போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றித் தமது நேரடி ஆளுகையின் கீழ் கொண்டு வந்த பின்னர், யாழ்ப்பாணத்தில் இருந்த எல்லா இந்துக் கோயில்களையும் அவர்கள் இடித்து விட்டனர். அப்போது, சட்டநாதர் கோயிலும் அழிந்து போய்விட்டது. தற்போதுள்ள கோயில் பிற்காலத்தில் முன்னைய கோயில் இருந்த அதே இடத்தில் கட்டப்பட்டது எனக் கருதப்படுகிறது.

நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயில்


நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவில்

நல்லூர் வீரமாகளி அம்மன் கோயில்
நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவில் is located in Sri Lanka
நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவில்
தேசப்படத்தில் நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயில்
ஆள்கூறுகள்: 9°40′23.32″N 80°1′29.56″Eஅமைவு: 9°40′23.32″N 80°1′29.56″E
பெயர்
பெயர்: வீரமாகாளி அம்மன் கோவில்
அமைவிடம்
நாடு: இலங்கை
மாகாணம்: வடமாகாணம்
மாவட்டம்: யாழ்ப்பாணம்
அமைவு: நல்லூர், பருத்தித் துறை வீதியில்
கோயில் தகவல்கள்
மூலவர்: அம்மன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு: திராவிடக் கட்டிடக்கலை
நல்லூர் வீரமாகாளி அம்மன் தீர்த்தக் கேணி
நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயில் யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரில் இருந்து பருத்தித்துறை செல்லும் வீதியில், யாழ் நகரிலிருந்து சுமார் 2 கிமீ தொலைவில் புகழ் பெற்ற நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு அண்மையில் அமைந்துள்ளது. தற்போது உள்ள கோயில் ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. எனினும், இதே இடத்தில் யாழ்ப்பாண அரசுக் காலத்திலேயே வீரமாகாளி அம்மனுக்குக் கோயில் இருந்தாக யாழ்ப்பாண வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

வரலாறு

யாழ்ப்பாண அரசு நிறுவப்பட்ட காலத்தில், அதன் முதல் அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தி என்பவனால் தலைநகரமான நல்லூரின் மேற்குத் திசையில் இக் கோயில் அமைக்கப்பட்டதாக 1790களில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் யாழ்ப்பாண வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது. அம்மன்னன் நல்லூர் நகரைக் கட்டியபோது அதன் நான்கு திசைகளிலும் கோயில்களை அமைத்ததாகவும், மேற்குத் திசையில் அமைக்கப்பட்டதே வீரமாகாளி அம்மன் கோயில் எனவும் அந்நூல் கூறும். இக்கூற்றை உறுதிப்படுத்துவதற்கான வேறு சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. இது உண்மையாயின் இக்கோயில் கிபி 12 ஆம் நூற்றாண்டளவில் கட்டப்பட்டது எனக் கொள்ள முடியும்.
குவைறோஸ் என்னும் போத்துக்கீசப் பாதிரியார் எழுதிய நூலில், யாழ்ப்பாணத்தைப் போத்துக்கீசர் கைப்பற்றியபோது நடைபெற்ற போர் இரண்டு கோயில்களுக்கு இடையே காணப்பட்ட பகுதியில் நடைபெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று வீரமாகாளி அம்மன் கோயிலே எனக் கருதப்படுகின்றது.
கிபி 1620 ஆம் ஆண்டில், யாழ்ப்பாணம் போத்துக்கீசரின் நேரடி ஆட்சிக்குள் சென்ற பின்னர், ஏனைய இந்துக் கோயில்களுடன் சேர்த்து இதுவும் இடித்து அழிக்கப்பட்டது. கி.பி 1700 களின் இறுதிப் பகுதியில் ஒல்லாந்தர் ஆட்சியின் போதும், அதன் பின்னர் பிரித்தானியர் ஆட்சியின் போதும், முன்னர் இடிக்கப்பட்ட கோயில்கள் மீளமைக்கப்பட்டபோது இக் கோயிலும் அது முன்னர் இருந்த இடத்திலேயே மீளமைக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது.

நல்லூர் கந்தசுவாமி கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நல்லூர் கந்தசுவாமி கோயில், தற்போதைய முகப்புத் தோற்றம்

தென்முக வாயிலில் 2011 ஆம் கட்டிமுடிக்கப்பட்ட இராஜகோபுரம்
நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள நல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளதூ. நல்லூர் 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது. இக்கோயிலின் தோற்றம் பற்றிச் சரியான தெளிவு இல்லையெனினும், யாழ்ப்பாண அரசு காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு கோயிலாக இருந்தது என்பதில் ஐயமில்லை.

வரலாறு

யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சனொருவனான புவனேகவாகு என்பவனால் இக் கோயில் கட்டுவிக்கப்பட்டதென யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இதற்கு ஆதாரமான பின்வரும் தனிப்பாடல், 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் கைலாய மாலை என்னும் நூலின் இறுதியில் காணப்படுகின்றது.
இலகிய சகாத்தமெண்ணூற் றெழுபதாமாண்டதெல்லை
யலர்பொலி மாலை மார்பனாம் புனனேகவாகு
நலமிகுந்திடு யாழ்ப்பாண நகரிகட்டுவித்து நல்லைக்
குலவிய கந்தவேட்குக் கோயிலும் புரிவித்தானே
ஆனால் இது 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிப் 17 ஆண்டுகள் ஆண்ட கோட்டே சிங்கள அரசின் பிரதிநிதியான, பிற்காலத்தில் சிறீசங்கபோதி புவனேகவாகு எனப்பெயர் கொண்டு கோட்டே அரசனான, சண்பகப் பெருமாள் என்பவனால் கட்டப்பட்டதென வேறு சிலர் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரமாக நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் இன்றும் கூறப்பட்டுவரும் கட்டியத்தை இவர்கள் காட்டுகிறார்கள். சமஸ்கிருதத்தில் உள்ள இக் கட்டியத்தின் பகுதி பின்வருமாறு உள்ளது:
சிறீமான் மஹாராஜாதி ராஜாய அகண்ட பூமண்டலப்ரதியதி கந்தர விஸ்வாந்த கீர்த்தி சிறீ கஜவல்லி மஹாவல்லி சமேத சுப்ரமண்ய பாதாரவிந்த ஜனாதிரூட சோடச மஹாதான சூர்யகுல வம்ஸோத்பவ சிறீ சங்கபோதி புவனேகபாகு ஸமுஹா
திருவருள் பொருந்திய தெய்வயானையுடனும், வள்ளியம்மனுடனும் சேர்ந்திருக்கின்ற சுப்பிரமணியரின் திருவடிகளை வணங்குபவனும், மன்னர்களுக்கு மன்னனும், மிகுந்த செல்வங்களுடையவனும், இப் பரந்த பூமண்டலத்தில் எல்லாத்திசைகளிலும் புகழப்படுபவனும், மக்கள் தலைவனும், பதினாறு பெருந்தானங்களைச் செய்பவனும், சூரிய குலத்தில் உதித்தவனுமாகிய சிறீசங்கபோதி புவனேகவாகு... என்பது இதன் பொருள்.
முன்னரே சிறியதாக இருந்த கோயிலைத் தனது ஆட்சிக்காலத்தில் புவனேகவாகு பெருப்பித்துக் கட்டியிருக்கக் கூடும் என்பதே பொருத்தம் என்பது வேறுசிலர் கருத்து.
Nallur Panorama 2008.jpg
யாழ்ப்பாண அரசின் இறுதிக்காலத்தில் நல்லூரிலிருந்த மிகப்பெரிய கோவில் இதுவேயென்பது போத்துக்கீசருடைய குறிப்புக்களிலிருந்து தெரியவருகிறது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசத் தளபதியான பிலிப்பே டி ஒலிவேரா, 1620ல் அரசின் தலை நகரத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றியபோது நல்லூர்க் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டான். இதிலிருந்து பெறப்பட்ட கற்கள் யாழ்ப்பாணத்தில் புதிய கோட்டை கட்டுவதில் பயன்பட்டதாகத் தெரிகின்றது. இது இருந்த இடத்தில் போத்துக்கீசர் சிறிய கத்தோலிக்க தேவாலயமொன்றை அமைத்ததாகத் தெரிகிறது. பின்னர் ஒல்லாந்தர் இதனைத் தாங்கள் சார்ந்த புரட்டஸ்தாந்த கிறிஸ்தவ தேவாலயமாக மாற்றினார்கள். இன்றும் இவ்விடத்தில் பிற்காலத்தில் பெரிதாகத் திருத்தியமைக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயமே காணப்படுகின்றது.
ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் (1658 - 1798) இறுதி ஆண்டுகளில் இந்துக் கோயில்கள் அமைப்பது தொடர்பாக ஆட்சியாளர்களின் இறுக்கம் ஓரளவு தளர்ந்தபோது, நல்லூர் கந்தசுவாமி கோயில் மீள அமைக்கப்பட்டது. முன்னைய இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் இருந்தபடியால் இன்னொரு இடத்தில் கோயிலை அமைத்தார்கள்.
ஆறுமுக சுவாமிக்காக புதிதாக கட்டப்படும் கோபுரம் 21 -11 -2009 அன்று இவ் படம் எடுக்கபட்டது

யாழ்ப்பாணம்


யாழ்ப்பாணம்
மேலிருந்து இடதுபுறமாக: பொது நூலகம், யாழ் பல்கலைக்கழகம், கந்தரோடை தொல்லியல் களம், நல்லூர் கந்தசுவாமி கோவில், 2ம் சங்கிலியின் சிலை, யாழ்ப்பாணக் கோட்டை நுழைவாயில், மந்திரிமனை (நல்லூர்)
Red pog.svg
யாழ்ப்பாணம்
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9.663897° N 80.015812° E
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்  - 0-10 மீட்டர்
ஒரு தோற்றம்.
கால வலயம்
SST (ஒ.ச.நே.+5:30)
அரச அதிபர் இமெல்டா சுகுமார்
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்

 - 40000
 - +021 மற்றும் 060-221
 - NP
Gislanka locator.svgயாழ்ப்பாணம் (Jaffna, சிங்களம்: යාපනය) என்பது இலங்கைத் தீவின் வடமுனையிலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தின் தலைநகராகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குப் பகுதியில் யாழ்ப்பாண நீரேரியைப் பார்த்தபடி அமைந்துள்ளது. இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து 396 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்நகரம், 88,138 மக்கட்தொகையினைக் கொண்டு 12வது பெரிய நகரமாக விளங்குகிறது.[1] 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடமாகாணத்தின் தலைநகரமாக விளங்கிய யாழ்ப்பாணம், அந்த ஆண்டில், தற்காலிகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து உருவான வட-கிழக்கு மாகாணசபைக்குத் திருகோணமலையைத் தலைநகரமாக்கியபின், மாகாணத் தலைநகரம் என்ற நிலையை இழந்தது. வடக்குக் கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட பின்னர் வடமாகாணத் தலைநகராக யாழ்ப்பாணம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[2]
1981இல் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, யாழ் நகரின் மக்கள்தொகை 118,000 ஆக இருந்தது. 20 ஆண்டுகளின் பின் நாட்டில் 2001ல் கணக்கெடுப்பு நடந்தபோது, யாழ்ப்பாணத்தில் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. எனினும் அவ்வாண்டில் இந்நகரின் மக்கள்தொகை 145,000 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் காரணமாகப் பல வழிகளிலும் பெரிதும் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், உரிய வளர்ச்சியைப் பெறவில்லையென்றே சொல்லவேண்டும்.
1981ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, தமிழர்கள் பெரும்பான்மையினராக இருந்தபோதும், குறிப்பிடத்தக்க அளவில் முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வந்தார்கள். சிங்களவர்கள் மிகவும் குறைவே. சமய அடிப்படையில் யாழ்நகரில், இந்துக்களே பெரும்பான்மையினராக உள்ளனர்.

பொருளடக்கம்

பெயர்க்காரணம்

தற்காலத்தில் யாழ்ப்பாணம் என்பது, இலங்கையின் வட மாகாணத்தைச் சேர்ந்த 5 மாவட்டங்களில் ஒன்றாக அதன் வட கோடியில் அமைந்துள்ள மாவட்டத்தையும், அம்மாவட்டத்தின் பிரதான நகரத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை விட போர்த்துக்கீசர் கைப்பற்றுவதற்கு முன்னர் இலங்கையின் வடபகுதியில், இருந்துவந்த தமிழர் நாடும் யாழ்ப்பாண அரசு என்றே குறிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்த வரலாறு பற்றி, ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இலங்கையில் தமிழ், சிங்கள இனங்களுக்கிடையே முரண்பாடுகள் உச்சக்கட்டத்திலிருக்கும் இக்காலத்தில், இரண்டு இனங்களையும் சேர்ந்தவர்கள் தங்கள் தங்கள் கொள்கைகளுக்குப் பொருந்தும் விதத்தில், வெவ்வேறு ஆய்வாளர்களின் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்கள்.
18ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இயற்றப்பட்ட யாழ்ப்பாணத்தின் வரலாறு கூறும், யாழ்ப்பாண வைபவமாலை எனும் நூல், முற்காலத்தில் இலங்கையை ஆண்ட அரசனொருவனால், இந்தியாவிலிருந்து வந்த யாழிசையில் வல்ல குருடனான யாழ்ப்பாணன் ஒருவனுக்கு வட பகுதியிலிருந்த மணற்றி (அல்லது மணற்றிடல்) எனும் இடம் பரிசாக அழிக்கப்பட்டதென்றும், அப்பகுதி யாழ்ப்பாணம் என்று பெயர் பெற்றுப்பின்னர் முழுப்பிரதேசத்துக்குமே இப்பெயர் வழங்குவதாயிற்று என்றும் கூறும். இம்மணற்றி என்னும் பெயர் இறையனார் அகப்பொருள் உதாரணச் செய்யுட்களில் வருகின்றது.
வேறு சிலர், நல்ல ஊர் என்னும் கருத்தைத் தருகின்ற சிங்களச் சொல்லான, யஹபனே என்பதிலிருந்தோ, அல்லது சிங்கள இலக்கியங்கள் சிலவற்றில், இப்பகுதியைக் குறிக்கப் பயன்பட்ட, யாபாபட்டுன என்ற சொல்லிலிருந்தோ மருவி வந்ததே யாழ்ப்பாணம் என்கிறார்கள். எனினும் யாழ்ப்பாணம் என்ற பெயரில் இருந்தே யஹபனே, யாபாபட்டுன ஆகிய சொற்கள் மருவி வந்ததாகக் கொள்ளப்படுகிறது.

வரலாறு

தோற்றம்

1620 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண அரசு போத்துக்கீசர் வசம் செல்லும் வரையில், அதன் தலைநகரம் என்ற வகையில் நல்லூரே இப் பகுதியில் பிரதான நகரமாக இருந்தது. அக்காலத்தில் இன்றைய யாழ்ப்பாண நகரத்துள் அடங்கும் கொழும்புத்துறையில் ஒரு சிறிய இறங்கு துறையும், பின்னர் போத்துக்கீசரின் கோட்டை இருந்த இடத்தில் முஸ்லிம் வணிகர்களின் இறங்குதுறையும், பண்டசாலைகளும், சில குடியிருப்புக்களும் இருந்ததாகத் தெரிகிறது. 1590 ஆம் ஆண்டில் போத்துக்கீசர் யாழ்ப்பாண அரசனைக் கொன்று அவ்விடத்தில் இன்னொரு அரசனை நியமித்த பின்னர் அவர்களது செல்வாக்கு அதிகரித்தது. தொடர்ந்து சமயம் பரப்புவதற்காக வந்த கிறிஸ்தவப் பாதிரிமார்கள் யாழ்ப்பாணக் கடற்கரையோரத்தில் கத்தோலிக்கத் தேவாலயம் ஒன்றையும், அவர்களுக்கான இருப்பிடங்களையும் கட்டியிருந்தனர். பின்னர் முஸ்லிம் வணிகர்களின் பண்டசாலைகள் இருந்த இடத்தைக் கைப்பற்றிக் கொண்டு அவ்விடத்தில் முன்னரிலும் பெரிதாகக் கட்டிடங்களைக் கட்டியிருந்ததாகத் தெரிகிறது. இக்கட்டிடங்கள் வழிபாட்டிடங்களாகவும், சமயம் பரப்பும் இடங்களாகவும் இருந்தது மட்டுமன்றிச் சில சமயங்களில் போத்தூக்கீசருக்கான ஆயுதக் கிடங்குகளாகவும், பாதுகாப்பு இடங்களாகவும் இருந்தன. வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை யாழ்ப்பாண அரசன் நாவாந்துறைப் பகுதியில் குடியேற்றினான். கரையோரப்பகுதிகளில் மீன்பிடிக் குடியேற்றங்களும் இருந்தன. தற்போதைய யாழ்ப்பாண நகரத்தின் மையப்பகுதி அமைந்துள்ள இடங்கள் அக்காலத்தில் சதுப்பு நிலங்களாகவும், பனங் கூடல்களாகவுமே இருந்ததாகத் தெரிகிறது.
1620ல் யாழ்ப்பாண அரசை மீண்டும் தாக்கிய போத்துக்கீசர் அதனைக் கைப்பற்றித் தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து நல்லூர் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என உணர்ந்த அவர்கள் தங்கள் நிர்வாகத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றினர்.

போத்துக்கீசரின் ஆட்சியின் கீழ் யாழ்ப்பாண நகரம்

யாழ்ப்பாணத்தைத் தங்களுடைய நிர்வாக மையம் ஆக்கிய போத்துக்கீசர், முன்னர் தங்களுடைய தேவாலயம் அமைந்திருந்த இடத்தில் சதுர வடிவில் அமைந்த பெரிய கோட்டையொன்றைக் கட்டினார்கள். மதிலால் சூழப்பட்டிருந்த இக் கோட்டையுள் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும், வேறு நிர்வாகக் கட்டிடங்களும் அமைந்திருந்தன. கோட்டைக்கு வெளியே போத்துக்கீசரின் இருப்பிடங்களோடுகூடிய யாழ்ப்பாண நகரம் அமைந்திருந்தது. யாழ்ப்பாண நகரில் அமைந்திருந்த கட்டிடங்களுள் கோட்டையையும் அது சார்ந்த கட்டிடங்களையும் தவிர, அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் மதப்பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கத்தோலிக்க மடங்களைச் சேர்ந்த பெரிய கட்டிடங்களும் இருந்ததாகத் தெரிகிறது.
உள்ளூர் மக்களின் குடியிருப்புக்கள் இக்காலத்திலும், பெரும்பாலும் நல்லூரை அண்டியே இருந்திருக்கக்கூடும். இன்றைய யாழ்ப்பாண நகரத்துள் அடங்கும் சோனகத்தெரு என்று அழைக்கப்படும் இடத்தில் சிறிய அளவில் முஸ்லிம் வணிகர்களின் குடியிருப்புக்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. இன்றைய கரையூர், பாசையூர் ஆகிய இடங்களை அண்டிச் சிறிய சிறிய மீன்பிடிக்குடியிருப்புக்களும் இருந்ததாகத் தெரிகிறது.
போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தில் 40 ஆண்டுகளுக்கும் குறைவான காலமே ஆட்சி செலுத்தினர் இதனால் யாழ்ப்பாண நகரம் பெருமளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கக்கூடிய சாத்தியங்கள் இல்லை. எனினும், இன்று யாழ்ப்பாண நகரத்துள் பெரிய அளவில் மக்களால் பின்பற்றப்படும் கத்தோலிக்க சமயமும், நிர்வாகம் தொடர்பான சில இடப்பெயர்களும் போத்துக்கீசர் தொடர்பை இன்றும் எடுத்துக்காட்டுகின்றன. 1658 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண நகரம் ஒல்லாந்தரிடம் வீழ்ச்சியடைந்தது

ஒல்லாந்தரின் ஆட்சியின் கீழ் யாழ்ப்பாண நகரம்

ஏறத்தாழ 140 ஆண்டுகள் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்டனர். இதனால் அவர்களின் சுவடுகளை இன்றும் யாழ்ப்பாண நகரத்தில் காணமுடியும். போத்துக்கீசர் கட்டிய கோட்டையை இடித்துவிட்டு, புதிய கோட்டையொன்றை ஒல்லாந்தர் கட்டினர். இன்று பறங்கித் தெரு என்று அழைக்கப்படும் இடத்திலேயே ஒல்லாந்தருடைய குடியிருப்புக்கள் அமைந்திருந்தன. மிக அண்மைக்காலம் வரை இப்பகுதியில் ஒல்லாந்தர் காலக் கட்டிடக்கலையைக் காட்டும் பல கட்டிடங்கள் இருந்தன. அண்மைக்காலத்தில் இடம்பெற்ற போர் நடவடிக்கைகளால் இவற்றுட் பல அழிந்துபோய் விட்டன.
இவர்களுடைய காலத்தில் யாழ்ப்பாண நகரம் ஓரளவுக்கு விரிவடைந்தது என்று சொல்லமுடியும். பறங்கித் தெருப் பகுதியைத் தவிர, வண்ணார்பண்ணை போன்ற பகுதிகள் நகரத்தின் உள்ளூர் மக்களுக்குரிய பகுதிகளாக வளர்ச்சி பெற்றன.
இவர்களுடைய ஆட்சியின் இறுதிக் காலத்தில் இந்து சமயம் தொடர்பான பிடிவாதம் தளர்ந்ததைத் தொடந்து முக்கியமான இந்துக் கோயில்கள் சில இன்றைய யாழ்ப்பாண நகரத்தின் எல்லைக்குள் அமைந்தன. பிற்காலத்தில் இப்பகுதிகள் சைவ சமயத்தவரின் பண்பாட்டு மையங்களாக உருவாக இது வழி சமைத்தது. நல்லூர் கந்தசுவாமி கோயில், வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயில், யாழ் பெருமாள் கோயில் என்பன இவற்றுள் முக்கியமானவை. இது போன்றே, அடக்கி வைக்கப்பட்டு இருந்த கத்தோலிக்க மதமும் புத்துயிர் பெறலாயிற்று.

பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் யாழ்ப்பாண நகரம்


பிரித்தானியர் காலத்தில் யாழ் நகர மக்களால் கட்டப்பட்ட மணிக்கூட்டுக் கோபுரம்
பிரித்தானியர் ஆட்சி யாழ்ப்பாணத்தில் 152 ஆண்டுகாலம் நீடித்தது. இக் காலத்தில் யாழ்ப்பாணம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சமூக, பொருளாதார மற்றும் பௌதீக வளர்ச்சிகளைப் பெற்றது எனலாம். தற்காலத்து யாழ்ப்பாணக் கல்வி மேம்பாட்டுக்கு அச்சாணியாக விளங்கிய பாடசாலைகள் அனைத்தும் இக்காலத்தில் உருவாக்கப்பட்டவையே. யாழ்ப்பாண நகரத்திலிருந்து குடாநாட்டின் பல பகுதிகளையும் இணைக்கும் வீதிகள் அமைக்கப்பட்டன. அத்துடன், யாழ்ப்பாணத்துடன் கண்டி,கொழும்பு போன்ற தென்னிலங்கை நகரங்களுக்கான வீதிகளும் உருவாயின.

ஆட்சி

யாழ்ப்பாண மாநகரசபை யாழ் நகரை ஆட்சி செய்கின்றது. இது 1865 மாநகர சபைகளின் அவசரச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. பிரித்தானியர் அதிகாரத்தைப் பகிர விரும்பாததால் யாழ் நகர் பல வருடங்களாக யாழ் நகர் மாநகர சபை தேர்வு செய்யப்படாமல் இருந்தது.[3] முதலாவது தெரிவு செய்யப்பட்ட மாநகர முதல்வர் கதிரவேலு பொன்னம்பலம் ஆவார்.[4]
இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல் 11 வருடங்களின் பின் 2009 இல் இடம்பெற்றது. மாநகர சபை 29 உறுப்பினர்களைக் கொண்டது.[5]

யாழ்ப்பாண நூலகம்

1935ல் உருவான யாழ்பாண நூலகம் இலங்கைத் தமிழர்களின் பண்பாட்டு சின்னமாக விளங்கியது. 1981ல் நாசவேலையால் ஏற்பட்ட தீ விபத்தில் முழுவதும் நாசமாகியது [6].

உள்நாட்டு போர்

புவியியல் மற்றும் காலநிலை

யாழ் ஏரியினால் நகரம் சூழப்பட்டுக் காணப்படுகின்றது. யாழ் தீபகற்பம் சுண்ணாம்புக் கல்லைக் கொண்டு காணப்படுகின்றது. முழு நிலமும் தட்டையாகவும் கடலிலிருந்து உயர்ந்தும் காணப்படுகின்றது. பனை மரங்கள் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன. தளை அலரி போன்ற போன்ற மரங்களும் அதிகம் காணப்படுகின்றன.[7]
யாழ்ப்பாணம் வெப்பமண்டல மழைகாட்டு காலநிலையைக் கொண்டு மிக வறட்சியான காலநிலையுடைய மாதம் அற்றுக் காணப்படுகின்றது. யாழ்ப்பாணம் இலங்கையில் அதிகளவு சராசரி வெப்ப நிலையான 83 °F (28 °C)க் கொண்டுள்ளது. வெப்பம் ஏப்ரல், மே, ஆகஸ்து, செப்டெம்பர் மாதங்களில் உயர்ந்து காணப்படும். திசம்பர், சனவரி மாதங்களில் குளிர்ச்சியாகக் காணப்படும். வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்றினால் வருடாந்த கிடைக்கின்றது. இடத்துக்கிடம் வருடத்திற்கு வருடம் இது வேறுபடும். யாழ் தீபகற்பத்தின் மேற்குப் பகுதி சராசரி மழை வீழ்ச்சி 5 அங்குலம் ஆகும்.[7]
[மறை]தட்பவெப்ப நிலை தகவல், யாழ்ப்பாணம்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
தினசரி சராசரி °C (°F) 25
(77)
26
(79)
28
(82)
29
(84)
29
(84)
28
(82)
28
(82)
28
(82)
28
(82)
27
(81)
25
(77)
24
(75)
27
(81)
பொழிவு mm (inches) 70
(2.76)
30
(1.18)
20
(0.79)
50
(1.97)
40
(1.57)
10
(0.39)
20
(0.79)
30
(1.18)
60
(2.36)
230
(9.06)
380
(14.96)
260
(10.24)
1,270
(50)
ஆதாரம்: Weatherbase[8]

மக்கள் தொகையியல்

வரலாற்று அடிப்படையில் யாழ் நகரில் தமிழர், இலங்கைச் சோனகர், பறங்கியர் வாழ்ந்து வந்தனர்.[9]
1880 முதல் 2010 வரையான சனத்தொகை[10][9][11][12]
ஆண்டு 1880 1891 1901 1911 1921 1931 1946 1953 1963 1971 1981 1994 2007 2010
சனத்தொகை 4,000 43,179 33,879 40,441 42,436 45,708 62,543 77,811 94,670 107,184 118,224 149,000 83,563 84,416
தரம்
2வது 3வது 2வது 2வது 2வது 2வது 3வது 3வது 3வது 4வது

14வது
மூலம் கணிப்பு கணக்கெடுப்பு கணக்கெடுப்பு கணக்கெடுப்பு கணக்கெடுப்பு கணக்கெடுப்பு கணக்கெடுப்பு கணக்கெடுப்பு கணக்கெடுப்பு கணக்கெடுப்பு கணக்கெடுப்பு கணிப்பு கணிப்பு கணக்கெடுப்பு

யாழ் புறநகர்ப்பகுதி

புறநகர்
அரியாலை
சுன்னாகம்
நல்லூர்
சுண்டிக்குழி
நாவற்குழி
கோப்பாய்
கொக்குவில்
கோண்டாவில்
மண்டைதீவு
உரும்பிராய்
கைதடி

சமயம்

யாழ்ப்பாணத்தில் கிறித்தவ சமயம்

முதன்மைக் கட்டுரை: யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்டம்

பின்வருவனவற்றையும் பார்க்கவும்

யாழ்ப்பாணத்தில் காணக்கூடிய இடங்கள்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...