May 11, 2013

எடை குறைக்கச் செய்யும் இயற்கை மருந்து


 Weight reduction has become a major concern today. Based on the weight of prayer for etaikkuraip kuraiyacceyyum medicine is full of   food and nutrition productsஎடைக்குறைப்பு இன்று பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. எடைக்குறைப்புக்கு கைக்கொடுக்கும் வீட்டு மருத்துவத்தில் எடை குறையச்செய்யும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது. உங்கள் சமையலறை பொருட்களை பயனபடுத்தியே எடையைக் குறைக்கச் செய்யலாம்.

தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டையை தூளாக்கி நன்கு கொதிக்க வைத்த தண்ணீருடன் தேனையும் கலந்து குடிக்க வேண்டும். இதேபோல் இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு கப் தண்ணீரில்  இலவங்கப்பட்டையின் தூளையும், தேனையும் கலந்து சாப்பிடலாம். இதை வழக்கமாக செய்து வந்தால் பருமனான உடல் கொண்டவர்கள் எளிதில் எடையை குறைத்து விடலாம். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது தடுக்கப்படுகிறது. ஒரு நபர் அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடாலும் கூட இந்த கலவையை எடுத்துக்கொள்ளலாம்.  

வெதுவெதுப்பான தண்ணீரில் பாதி எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஒரு கரண்டி கலந்து சாப்பிட்டால் எடையை குறைக்க செய்யும். மேலும் இதை காலை வேளையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது ஒருசிலருக்கே ஏற்றது. இதை சாப்பிட்ட

பொதுஅறிவுக் கட்டுரைகள் - மகான்கள் அருளிய மகத்தான உலகப் பொன்மொழிகள்

Sri AnnaiNapoleon HillOshaoConfucius



1. சிறந்த வழி

நாம் முன்னேற்றப் பாதையில் செல்வதே நம்மவர்களையும் முன்னேறச் செய்ய சிறந்த வழி - ஸ்ரீ அன்னை

2. பெருந்தன்மையே முதல் படி

1)  இதயத்தில் பெருந்தன்மை இருந்தால், அது, நற்பண்புகளின் அழகாகப் பிரகாசிக்கும்!.
2)  நற்பண்புகளில் அழகு இருந்தால், அது இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும்!.
3)  இல்லத்தில் இணக்கமுடன் வாழ்ந்தால், அது தாய்நாட்டில் சட்டத்தை மதிக்கத் தூண்டும்.
4)  தாய்நாட்டில் சட்டத்தை மதிப்பவர்களால் தான், உலகம் முழுவதும் சமாதானத்தை உருவாக்க முடியும்.
- சீனப் பழமொழி

3. பயப்படாதீர்கள்

நல்ல காரியங்களைச் செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்!
தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!
- நெப்பொலியன் ஹில்

உலகப் பொன்மொழிகள்


1. அஞ்சக்கூடாத விஷயங்களுக்கு அஞ்சுபவர்களும் அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சாதவர்களும் தீய பாதையில் செல்கிறவராகிறார்கள்!

-புத்தர்

2. குறைய வேண்டியது பாவம்; நிறைய வேண்டியது புண்ணியம்!

-கிருபானந்தவாரியார்

3. இல்லை என்று ஒருபோதும் சொல்லாதே; என்னால் இயலாது என்று ஒருநாளும் நினையாதே; நீ வரம்பற்ற வலிமையுடையவன்!

-விவேகானந்தர்

4. பிறருக்குச் சாத்தியமில்லாத ஆசைகளைக் கிளப்பிவிடும் விதத்தில் டாம்பீகமாக வாழ்வதே பெரிய சமூகத் துரோகம்!

-காஞ்சி ஸ்ரீசங்கராச்சாரியார்

5. துன்பம் நேரும்போது சிரிக்க வேண்டும்; துன்பத்தை வெல்வதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை!

-திருவள்ளுவர்

6. காரியங்களைப் பிறர் குறிப்பறிந்து செய்பவரே அறிவுடையவர்!

-ஒளவையார்

7. சம்பாதிக்க வேண்டியவை எவை? கல்வி, செல்வம், புண்ணியம் ஆகியன!

-ஆதிசங்கரர்

8. ஒரு பொருள் மிக அற்பமாக இருந்தபோதிலும் ஒருவர் அதை இகழ்ந்து பேசலாகாது!
உணவைக் குறைத்து உடலை அழகாக்க.. டயட் டிப்ஸ்!

உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.

இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்:

* தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.

* எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.

* வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும்.

* இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு

உடல் பருமன் குறைய...


சித்த மருத்துவ குறிப்புகள்:-



வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.

தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்­ரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.

வெண்மையான பற்களைப் பெற...

வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.

கணைச் சூடு குறைய...

கணைச் சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடு வளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல் தேறிவிடும்.

வலுவான பற்கள்

வேப்பங்குச்சியினால் பல் துஇலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.

பென்சிலின் (மருந்து)உருவான கதை




அறிவியல் உலகில் தற்செயலாக பல பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் பென்சிலின். மரத்தில் இருந்து ஆப்பிள் விழுவதைப் பார்த்ததும்தான், நியூட்டன் புவி ஈர்ப்பு விசையையே கண்டுபிடித்தார். அதேபோல் தான் அலெக்சாண்டர் பிளமிங்கும் பென்சிலினைக் கண்டறிந்தார். அந்த சுவையான சம்பவத்தைப் பற்றிப் பார்ப்போமா.
பிளமிங், 1881ல் ஸ்காட்லாந்தில் பிறந்தார். முதலாம் உலகப் போரின் போது படை வீரர்கள் பலர் காயமடைந்து தொற்றுநோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டு இறந்தனர். இதைக் கேள்விப்பட்டு பாக்டீரியாவைக் கொல்லும் மருந்தைக் கண்டுபிடிப்பேன்’ என்று சபதம் கொண்டார் பிளமிங்.

1928ல் லண்டனில் உள்ள செயிண்ட் மேரி மருத்துவமனையில் ஒரு விடுமுறை நாளில் கிருமிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். அன்று விடுமுறை நாளாக இருந்ததால் ஆய்வுப் பொருட்களை அப்படியே வைத்துவிட்டுச் சென்றார். அதில் ஒரு தட்டு மூடாமல் இருந்தது. சுற்றுப்புறமும் அசுத்தமாக இருந்தது. அப்போது வீசிய காற்றால் மெல்லிய பூஞ்சணம் அந்த

கருமையாக தலைமுடி வளர இயற்க்கை மருத்துவம்



ஒரு கைப்பிடி வேப்பிலையை நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து அந்த நீரைக் கொண்டு தலையைக் கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

இரவில் நெல்லிக்காய், கடுக்காய் பொடிகளை தண்ணீரில் கலந்து காய்ச்சி ஊறவைத்து காலையில் அதனுடன் எலுமிச்சை பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

கறிவேப்பிலை அல்லது வெந்தயத்தைப் அரைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்குப் பிறகு தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

தேங்காய் எண்ணெயில் காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து காய்ச்சி தலையில் தேய்த்தாலும் முடி நன்கு வளரும்.

நேர்வாளங்கொட்டையில் உள்ள பருப்பை எடுத்து நீரை விட்டு நன்கு அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவி வந்தால் முடிவளரும்.

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து தேங்காய் எண்ணெயில் சிறிய துண்டாக நறுக்கி போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

முடி கருப்பாக வளர

உணவில் நெல்லிக்காயை அடிக்கடி சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் இதயத்தை பாதுகாத்துக் கொள்ள சிறந்த 25 வழிகள்



சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு மாரடைப்பு, இதய நோய்கள், மூளை இரத்தக் குழாய் அடைப்பு (வாத நோய்) ஆகிய நோய்கள் வர 20 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இவர்கள் தங்கள் இதயத்தை சிறுநீரகங்களை விட அதிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
சிறுநீரக வியாதி உள்ளவர்கள் தங்கள் இதயத்தைக் காக்க 25 சிறந்த வழிகள் இதோ.

1. தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொண்டு செய்யுங்கள்.

2. எண்ணெய், வெண்ணெய், நெய், கிரீம், மிருகக் கொழுப்பு அதிகம் உள்ள ஆட்டைறைச்சி, மாட்டிறைச்சி, ஈரல் முதலான உறுப்பு இறைச்சிகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

3. உங்கள் உணவில் பூண்டிற்கு முதல் இடம் கொடுங்கள்.

4. பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்கிசிடன்ட் அதிகமுள்ள காரட், ப்ரோக்கோலி, மக்காச்

நீர்ப்பிரமி கொடியின் மருத்துவ குணங்கள்




நீர்ப்பிரமி கொடி வகையைச் சார்ந்தது. நீர் நிலை ஓரங்களில் படர்ந்து வளரும். இதன் இலை பூண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது.

இது இனிப்பு, துவர்ப்புத் தன்மை கொண்டது. இந்தியா எங்கும் பரந்து காணப்படும். மலேசியா, இந்தோனேசியா, பர்மா, இலங்கை நாடுகளிலும் காணப்படுகிறது.

நீர் பிரம்மி செடியில், ஸ்டீரால் மற்றும் Herpestine, Brahmine என்னும் ஆல்கலாய்டுகளும், Bacoside A, Bacoside B ஆகிய குளுக்கோசைடுகளும் உள்ளன.

நினைவாற்றலைத் தூண்ட

பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஞாபக மறதி ஒரு பெரும்பிரச்சனையாகவே இருந்து வருகிறது. ஞாபக மறதி ஒரு தொற்று நோய்க்குச் சமமாகும். இதனை போக்கும் அருமருந்துதான் நீர்பிரம்மி. நீர்பிரம்மி இலைகளை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து தினமும் காலை வேளைகளில் சாப்பிட்டு

May 10, 2013

கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு


மூலிகைகள்.!

என்றும் இளமையோடு வாழ சித்தர் பெருமான் திருமூலர் கூறும் எளிய வழி! 

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். 

கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது? அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம். 

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: 

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்... "காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே.- காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்மூலிகைகள்.!

என்றும் இளமையோடு வாழ சித்தர் பெருமான் திருமூலர் கூறும் எளிய வழி!

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.

கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...