Oct 15, 2013

கூகுள் கடந்து வந்த 15 ஆண்டுகள்

கூகுள் கடந்து வந்த 15 ஆண்டுகள்
Posted: 14 Oct 2013

பதினைந்து ஆண்டுகளுக்கு முன், செப்டம்பர் 27ல், மக்கள் தங்கள் இணைய உலாவில், கூகுள் தேடுதளத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். அப்போது ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் இல்லை;

குரோம்புக் பயன்படுத்தி யாரும் வீடியோ பார்க்கவில்லை; கூகுள் கிளாஸ் அணிந்து பாட்டு கேட்கவில்லை; அல்லது ஹாட் பலூன் தரும் இணைய இணைப்பில் தேடலை மேற்கொள்ளவில்லை.

சாதாரண தேடு தளம் தரும் நிறுவனமாக, 15 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப் பட்ட கூகுள் நிறுவனம், இன்று உலகில் மிகச் சிறந்த சக்தியும் தொழில் நுட்பமும் கொண்ட நிறுவனமாக, ஆக்டோபஸ் போல பல திசைகளில் தன் செயல்பாட்டினைக் கொண்டுள்ளது.

உலகின் பல கோடி மக்கள் குறித்த தகவல்களைத் தன்னகத்தே கொண்ட ஒரே நிறுவனம் இதுவாகத்தான் இருக்கும். இந்த உலகம் மட்டுமின்றி,

Sange Muzangu HD Song

Oct 13, 2013

functions-of-all-function-keys-in-computer-keyboardகம்ப்யூட்டரில் எண் வரிசை விசைகளுக்கு மேலே இருப்பது ஃபங்சன் கீ வரிசை. இதில் பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் இரண்டு விசைகள் F1 மற்றும் F5. 
இணையத்தைப் பயன்படுத்தும்போது மட்டும் பெரும்பாலும் F5 விசையை மட்டும் பயன்படுத்துவோம். இது வலைப்பக்கத்தை மீள் தொடக்கம் (Refresh) செய்வதற்குப் பயன்படும். 
மற்ற விசைகளும் இதைப்போன்று பயன்மிக்க பயன்பாடுகளைக் கொண்டதுதான்.
ஒவ்வொரு விசையும் எதற்கு எதற்கு பயன்படுகிறது என்பதை தெரிந்துகொண்டால் மிகவும் பயன்மிக்கதாக இருக்கும். எதையும் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தால் அதுவே பழக்கமாகிவிடும்.  
பிறகு உங்களுக்கும் விரைவாக பிரௌசிங் செய்வது, விரைவாக கணினியைக் கையாள்வது

பெட்டகம்: கணினியில் உள்ள வன் பொருட்களின் தகவலை அறிந்துகொள்ள ...

பெட்டகம்: கணினியில் உள்ள வன் பொருட்களின் தகவலை அறிந்துகொள்ள ...: புதியதாக கணணி வாங்கியவர்கள் அதில் உள்ள வன்பொருள் சாதனங்களை கண்டு மிரட்சியடைவார்கள். சிபியு, மதர்போர்ட், ராம், கிராப்பிக்ஸ், சவுண...

பெட்டகம்: கணினியில் உள்ள வன் பொருட்களின் தகவலை அறிந்துகொள்ள ...

பெட்டகம்: கணினியில் உள்ள வன் பொருட்களின் தகவலை அறிந்துகொள்ள ...: புதியதாக கணணி வாங்கியவர்கள் அதில் உள்ள வன்பொருள் சாதனங்களை கண்டு மிரட்சியடைவார்கள். சிபியு, மதர்போர்ட், ராம், கிராப்பிக்ஸ், சவுண...

இணைய இணைப்பு எப்படி இயங்குகிறது?


எங்கோ ஒரு மூலையில் இயங்கும் கம்ப்யூட்டரில் உள்ள தகவலை, பாட்டை, சினிமாவை, விளையாட்டை எப்படி இன்டர்நெட் நம் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வருகிறது? என்ற கேள்வி இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கும்.

தெளிவான மற்றும் நிறைவான பதில் கிடைக்காததால் கேள்வியாகவே தொடரும் நிலையும் உள்ளது. இங்கு எப்படி உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட் மூலம் தகவல் கள் வந்தடைகின்றன என்று பார்க்கலாம்.

கம்ப்யூட்டரை இயக்கி இன்டர்நெட் இணைப்பை உயிர்ப்பித்து பிரவுசரின் அட்ரஸ் பாரில் ஓர் இணையதளத்தின் முகவரியை டைப் செய்து என்டர் தட்டுகிறீர்கள். பிரவுசர் எதுவாக வேண்டுமானாலும் -- இன்டர் நெட் எக்ஸ்புளோரர், மோஸில்லா பயர்பாக்ஸ், சபாரி, கிரேஸி பிரவுசர், பிளாக் -- என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இதனை "கிளையண்ட்' என அழைக்கிறோம். தற்போதைக்கு "வாடிக்கையாளர்' என வைத்துக் கொள்வோம். இந்த வாடிக்கையாளர் நீங்கள் தேவை என்று சொன்ன, இணைய தளம் வேண்டும் என்று சொன்ன உங்கள் வேண்டுகோளை உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது.

அந்த சர்வர், தான் இணைக்கப்பட்டுள்ள இன்னொரு சர்வருக்கு அதனை

விண்டோஸ் 7 டிப்ஸ்





டாஸ் பார் ட்யூன் அப்: 
ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறியவுடன், நீங்கள் புதிய வடிவிலான டாஸ்க் பாரினைப் பார்த்து வியந்திருப்பீர்கள். 

அது உங்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. செவ்வக வடிவிலான பட்டன்களுக்குப் பதிலாக, சிறிய பட்டன்களைக் காணலாம். இது பலரின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. 

ஆனால் ஒரு சிலருக்கு பழைய வடிவிலான டாஸ்க் பார் தான் பிடிக்கிறது. இவர்கள் புதிய வடிவத்தைத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என எண்ணியிருந்த எனக்கு, டாஸ்க் பார் ப்ராப்பர்ட்டீஸ் பார்த்த போது பழைய வகைக்கு மாறிக் கொள்ளலாம் என்று தெரிய வந்தது. நீங்களும் விரும்பினால் கீழ்க்கண்டபடி அதனை செட் செய்திடலாம்.

டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Taskbar buttons என்ற கீழ் விரி மெனுவினைக் காணவும். இதில் Combine when taskbar is full என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது அந்த புரோகிராம் பெயருடன் நீளமான சதுரத்தில், முன்பு காட்டப்பட்டது போல காட்சி அளிப்பதனைக் காணலாம்.


டாஸ்க்பார் ஹாட் கீ: 

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பலவிதமான ஷார்ட் கட் கீ மற்றும் ஹாட் கீ தொகுப்புகளைத் தந்துள்ளது. கீழே டாஸ்க்பாரில் நாம் இயக்கக் கூடிய

மின் அஞ்சல் சர் வர் வகைகள்



Posted: 11 Oct 2013 


உங்கள் மின் அஞ்சல் கணக்கினைக் கம்ப்யூட்டரில் பதிவு செய்திடுகையில், உங்களுக்கு எந்த வகையான அக்கவுண்ட் வேண்டும் என்று கேள்வி கேட்கப்பட்டு, அவற்றின் வகைகளாக - POP, SMTP மற்றும் IMAP என்பவை காட்டப்படும். இவை எவற்றைக் குறிக்கின்றன? இடையே உள்ள வேறுபாடு என்ன எனப் பார்க்கலாம். 


1. பி.ஓ.பி.3 (POP3 ): 

இதனை Post Office Protocol 3 என விரிக்கலாம். இந்த வகையில் செயல்படும் சர்வரில், உங்களுக்கென வரும் மின் அஞ்சல் செய்திகள் பாதுகாத்து வைக்கப்படும். 

நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில், ஏதேனும் ஒரு (Windows Mail, Outlook அல்லது Thunderbird) இமெயில் கிளையண்ட் புரோகிராமினைப் பயன்படுத்தி, இவற்றை உங்கள் கம்ப்யூட்டருக்குள் பதிக்கலாம். பொதுவாக, அவ்வாறு பதித்தவுடன், அந்த மெயில் செய்திகள் சர்வரிலிருந்து அழிக்கப்படும். 

அப்போதுதான் அடுத்து வரும் செய்திகளுக்கு இடம் கிடைக்கும். நீங்கள், எந்தக் கம்ப்யூட்டரில் இந்த மின் அஞ்சல் செய்திகளைப் பதிந்தீர்களோ, அவற்றை உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, திறந்து பார்த்து படித்து பதில் அனுப்பலாம். அல்லது நீக்கலாம். 


2. ஐமேப் (IMAP): 

Internet Message Access Protocol என இதனை விரித்துக் கூறலாம். இந்த வகை அஞ்சல்களைக் கொண்டிருக்கும் சர்வர் கம்ப்யூட்டரில் உள்ள அஞ்சல்களை,

Oct 12, 2013

விண்டோஸ் 8 - அவசிய ஷார்ட் கட் கீ தொகுப்புகள்






விண்டோஸ் 8, அடிப்படையில் தொடு திரையை மையமாகக் கொண்டு தொடு உணர் நிலை இயக்கத்தினைக் கொண்டதாகும். இருப்பினும், இதனை மவுஸ் மற்றும் கீ போர்டு மூலமும் இயக்கலாம். 

இதில் பல ஷார்ட்கட் கீ தொகுப்புகள் பயன்படுத்தப்பட்டாலும், சிலவற்றை, விண்டோஸ் 8 பயன்படுத்துவோர் கட்டாயம் நினைவில் வைத்திருக்க வேண்டும். அவை: 


தேடல்

Win + F: மெட்ரோ பைல்ஸ் சர்ச் மெனு வினைப் பெற.
Win + Q: மெட்ரோ அப்ளிகேஷன்கள் சர்ச் மெனுவினைப் பெற.
Win + W: மெட்ரோ செட்டிங்ஸ் சர்ச் மெனு பெற. 
Win + . (முற்றுப் புள்ளி):அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனை, இடது, வலது மற்றும் முழுமையாக இழுத்து ஓரத்தில் வைக்க.
Win + , (கமா) டெஸ்க்டாப்பில் ஏரோ பீக் (Aero peek) பெற.


சார்ம்ஸ் மெனு

Win + C: உங்கள் திரையின் வலது பக்கம் சார்ம்ஸ் மெனுவினைக் கொண்டு வர.


ஸ்விட்ச் மெனு

Win + Tab: உங்கள் திரையின் இடது போர்டில் இருந்து ஸ்விட்ச் லிஸ்ட் (Switch List) திறக்க.


பேனர்கள்

Win + I (டி எழுத்து) அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனுக்கான, Settings panel


நெட்வொர்க் மற்றும் ஐ.பி.முகவரி அறிய

இணையத்தைப் பயன்படுத்தும் போது, நம் இணைப்பிற்கென ஓர் ஐ.பி. முகவரி தரப்படுகிறது. நம் கம்ப்யூட்டர் இணைய இணைப்பில் எப்படி இணைக்கப்பட்டுள்ளது என்பதனை அறிய அனைவருக்கும் ஆவலாய் இருக்கும். 

ஒவ்வொரு நேரமும் ஒரு முகவரி தரப்படுவதால், சில செயல்பாடுகளுக்காக, அந்த நேரத்தில் தரப்படும் ஐ.பி. முகவரி அறியவும் ஆசைப்படுவோம். அதனை எப்படி அறியலாம் என்பதனை இங்கு பார்க்கலாம். இங்கு விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இதனை எப்படி அறிவது என்பதனை முதலில் காண்போம்.


முதல் வழி, விண்டோஸ் இயக்க முறையில் கிளிக் செய்து பெறுவது.

1. முதலில் "Network Sharing Center' என்பதனைத் திறந்து கொள்ளவும். உங்களுடைய டாஸ்க் பாரில் உள்ள சிஸ்டம் ட்ரேயில், நெட்வொர்க்கிங் ஐகான் இருந்தால், அதனை கிளிக் செய்து, "Open Network and Sharing Center' என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். 

அல்லது, ஸ்டார்ட் பட்டனில் கிளிக் செய்து, கிடைக்கும் தேடல் கட்டத்தில், network and sharing center என டைப் செய்திடவும். இதற்கான லிங்க் கிடைத்தவுடன், அதில் கிளிக் செய்திடவும். 

2. இப்போது "Network and Sharing Center' கிடைக்கும். இங்கு "Local Area Connection' என்பதில் கிளிக் செய்திடவும். அல்லது, உங்கள் இணைய இணைப்பிற்கு ஒரு

இந்திய வரலாற்றிலேயே நெருங்கிவிட்ட மாபெரும் புயல்


இந்தியா வரலாற்றிலேயே மிகப் பெரும் புயலொன்றை எதிர்நோக்கியுள்ள நிலையில், அதன் கிழக்கு கரையோரப் பகுதிகளில் கடுமையான காற்றுடன் கூடிய மழை கொட்டிக்கொண்டிருக்கிறது.
வங்காள விரிகுடாவிலிருந்து நகர்ந்துவரும் பைலின் புயல் இன்னும் சில மணிநேரங்களில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் நாலரை லட்சம் மக்கள் ஏற்கனவே தமது இருப்பிடங்களை விட்டு பாதுகாப்புக்காக வெளியேறியுள்ளனர்.
ஒடிசா மாநிலத்தின் சில பகுதிகளில் ஏற்கனவே மணிக்கு சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசிக்கொண்டிருக்கிறது.
மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுத்துள்ள இந்திய அதிகாரிகள், புயல் நிலைமைகளை எதிர்கொள்வதற்கான ஆயத்தப்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...