Nov 19, 2013

குடைகள் பற்றிய தகவல்கள்:



மழைக்காலம் வந்துவிட்டாலே நாம் வெளியே செல்வதற்கு குடையைத் தேடுகிறோம். ஒரு சிலர் மழை கோட் உபயோகித்தாலும் நம்மில் பெரும்பாலானோர் குடையையே உபயோகிக்கின்றோம். இன்று பல முன்னேற்றத்துடன் காணப்படும் குடை எவ்வாறு உருவானது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மனிதன் சூரிய வெப்பத்திலிருந்தும் மழையிலிருந்தும் தன்னை காத்துக் கொள்வதற்காக குடையைப் பயன்படுத்தினான். 15 - ஆம் நூற்றாண்டிலிருந்து எகிப்து, அசீரியா, கிரீஸ், சீனமக்கள் குடையைப் பயன்படுத்தியதாக வரலாற்று நூல்களிலிருந்து நாம் அறிகிறோம்.

பழங்காலத்தில் சூரிய ஒளியிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காகவே குடை பயன்படுத்தப்பட்டது. கொலகேசிய தாவரங்களின் இலைகளில் தண்ணீர் ஒட்டாமல் இருப்பதற்கு அதிலுள்ள பசை போன்ற பொருட்களே காரணம் ஆகும். இதைப் பார்த்த சீன மக்கள் தாங்கள் தயாரித்த குடைகளில் பசைகளைப் பூசி தண்ணீர் வழிந்தோட வைத்து மழைக்காலத்தில் பயன்படும் குடையைத் தயாரித்து பயன்படுத்தினார்கள்.

16 - ஆம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பிய நாடுகளில் குடை பிரபலமடைந்தது. இந்த காலக்கட்டத்தில் குடைக்கு அம்ப்ரெல்லா (Umbrella)என்ற பெயர் உருவானது. அம்ப்ரா என்ற லத்தின் வார்த்தைக்கு நிழல் (UMBRA)என்று பொருளாகும். ஐரோப்பாவில் குடை பிரபல்யமாக இருந்தபோதிலும் பெண்கள் மட்டுமே குடையைப் பயன்படுத்தினார்கள். ஜோனாஸ் கான்வே என்ற பெர்சியன் எழுத்தாளர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யும்போது குடையைப் பயன்படுத்தினார். அதிலிருந்து ஆண்கள் மத்தியிலும் குடை பிரபலம் அடைந்தது. முதலில் ஐரோப்பாவில் குடைகள் தயாரிக்க மரக்குச்சிகளும், எண்ணெய் பூசப்பட்ட கலர் கேன்வாஸ்களும் பயன்படுத்தப்பட்டன.

1830 - ல் லண்டனிலுள்ள நியூ ஆக்ஸ்போர்ட் தெருவில் ஜேம்ஸ் ஸ்மித் ஆன்ட் சன்ஸ் என்ற பெயரில் பெருமளவில் குடைகளை விற்பதற்காக கடை தொடங்கப்பட்டது.அதிலிருந்து பல நாடுகளிலும் குடை விற்பனை அதிகரித்தது

DU Meter

DU Meter

Nov 18, 2013

நிமோனியாவை குணப்படுத்தும் சில இயற்கை வைத்தியங்கள்


இயற்கை வைத்தியம் என்று சொன்னால், அது வேஸ்ட் என்று பலர் சொல்வார்கள். ஏனெனில் இயற்கை வைத்தியத்தின் மூலம் எதையும் விரைவில் குணப்படுத்த முடியாது என்பதாலேயே தான். ஆனால் இயற்கை வைத்தியத்தை மேற்கொண்டால், நோயானது உடனே குணமாகாவிட்டாலும், நாளடைவில் முற்றிலும் குணமாகிவிடும். அதுமட்டுமின்றி, இயற்கை வைத்தியத்தினால் எந்த ஒரு பக்க விளையும் ஏற்டாது. அதிலும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருக்கும் போது இயற்கை வைத்தியத்தை மேற்கொண்டால், விரைவில் குணமாகி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
அதென்ன நிமோனியா என்று கேட்கலாம். நிமோனியா என்றால் நுரையீரலில் ஏற்படும் புண்ணாகும். இந்த புண்ணானது வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றினால் ஏற்படக்கூடியது. மேலும் இந்த நிமோனியா இருந்தால், கடுமையான காய்ச்சலுடன், தலை வலி, நெஞ்சு வலி, ஜலதோஷம், மூச்சு விடுவதில் சிரமம், தலை மற்றும் தொண்டை ஜில்லென்று இருக்கும். சிலருக்கு வாந்தி, வயிற்று வலி போன்றவை கூட ஏற்படும். இவற்றை சரியாக குணப்படுத்தாவிட்டால், வாழ்நாள் முழுவதும் இருக்கும்.
நுரையீரல்களில் ஏற்படும் இந்த நோய்க்கு நவீன மருத்துவ சிகிக்சையோடு இயற்கை முறையான சிகிச்சைகளையும் எடுத்துக் கொண்டால், நோயில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இப்போது இந்த நிமோனியாவை குணப்படுத்துவதற்கான சில இயற்கை வைத்தியங்களைப் பார்ப்போம்.

Nov 17, 2013

தென் கொரியாவில் பயங்கரம் : அபார்ட்மென்ட் மீது ஹெலிகாப்டர் மோதி 2 விமானி சாவு



சியோல்: தென் கொரிய தலைநகர் சியோல் நகரில் உள்ள தனியார் எலக்ட்ரானிக் நிறுவனம், ஊழியர்களை அழைத்து செல்ல ஹெலிகாப்டர் வசதி ஏற்படுத்தி தந்துள்ளது. கங்னாம் மாவட்டத்தில் மார்க்கெட் பகுதியில் ஐடி நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான 38 மாடிகளை கொண்ட சொகுசு அபார்ட்மென்ட் ஒன்றும் உள்ளது. நேற்று ஊழியர்களை அழைக்க ஹெலிகாப்டர் சென்றது. மார்க்கெட் பகுதியில் வந்த போது எதிர்பாராதவிதமாக அதன் இறக்கைகள் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மீது உரசியதில் கட்டிடங்களில் உள்ள கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. பயங்கர சத்தம் கேட்டு வீடுகளில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் இறக்கைகள் சேதம் அடைந்து ஹெலிகாப்டர் அப்படியே விழுந்து நொறுங்கியது.
\
தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதுகுறித்து மீட்பு படை அதிகாரி சா யங் கூறுகையில், ஹெலிகாப்டரில் இருந்த விமானி பார்க் இன் க்யூ (57) என்பவரும், அவரது 36 வயது உதவியாளரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினர். அதிர்ஷ்டவசமாக அபார்ட்மென்டில் இருந்தவர்கள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றார்.

ஏலக்காய்

ஏலக்யில் இவ்ளோ இருக்கா?

சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுத
ஏலக்காய்
. ல் சுவை சேர்க்கக்கூடியது.
ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அவை…
* குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை

பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது!


பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது!

நமது சமையலறை அலமா‌ரி‌யி‌ல் இரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு பொரு‌ட்களு‌க்கு‌‌ம் ஒ‌வ்வொரு மரு‌த்துவ குண‌ம் இரு‌க்கு‌ம். அ‌தி‌ல் பூ‌ண்டி‌ற்கு மு‌ன்னு‌ரிமை அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது. பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம. பூ‌ச்‌சி‌க்கடி‌யினா‌ல் உ‌ண்டான ‌விஷ‌ம் பல‌வீனமடையு‌ம். பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில் தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் தேமல் காணாமல் போய் விடும்.

பூ‌ண்டை சா‌ப்‌பிட‌ப் ‌பிடி‌க்காதவ‌ர்களு‌க்கு, ‌பூ‌ண்டு, த‌க்கா‌ளி, வெ‌ங்காய‌ம் போ‌ன்றவ‌ற்றை நசு‌க்‌கி‌ப் போ‌ட்டு சூ‌ப் வை‌த்து‌க் கொடு‌க்கலா‌ம். இ‌ந்த சூ‌ப் ‌குடி‌த்தா‌ல் ச‌ளி ‌பிடி‌ப்பது குறையு‌ம்.

பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...