Nov 19, 2013

குடைகள் பற்றிய தகவல்கள்:



மழைக்காலம் வந்துவிட்டாலே நாம் வெளியே செல்வதற்கு குடையைத் தேடுகிறோம். ஒரு சிலர் மழை கோட் உபயோகித்தாலும் நம்மில் பெரும்பாலானோர் குடையையே உபயோகிக்கின்றோம். இன்று பல முன்னேற்றத்துடன் காணப்படும் குடை எவ்வாறு உருவானது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மனிதன் சூரிய வெப்பத்திலிருந்தும் மழையிலிருந்தும் தன்னை காத்துக் கொள்வதற்காக குடையைப் பயன்படுத்தினான். 15 - ஆம் நூற்றாண்டிலிருந்து எகிப்து, அசீரியா, கிரீஸ், சீனமக்கள் குடையைப் பயன்படுத்தியதாக வரலாற்று நூல்களிலிருந்து நாம் அறிகிறோம்.

பழங்காலத்தில் சூரிய ஒளியிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காகவே குடை பயன்படுத்தப்பட்டது. கொலகேசிய தாவரங்களின் இலைகளில் தண்ணீர் ஒட்டாமல் இருப்பதற்கு அதிலுள்ள பசை போன்ற பொருட்களே காரணம் ஆகும். இதைப் பார்த்த சீன மக்கள் தாங்கள் தயாரித்த குடைகளில் பசைகளைப் பூசி தண்ணீர் வழிந்தோட வைத்து மழைக்காலத்தில் பயன்படும் குடையைத் தயாரித்து பயன்படுத்தினார்கள்.

16 - ஆம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பிய நாடுகளில் குடை பிரபலமடைந்தது. இந்த காலக்கட்டத்தில் குடைக்கு அம்ப்ரெல்லா (Umbrella)என்ற பெயர் உருவானது. அம்ப்ரா என்ற லத்தின் வார்த்தைக்கு நிழல் (UMBRA)என்று பொருளாகும். ஐரோப்பாவில் குடை பிரபல்யமாக இருந்தபோதிலும் பெண்கள் மட்டுமே குடையைப் பயன்படுத்தினார்கள். ஜோனாஸ் கான்வே என்ற பெர்சியன் எழுத்தாளர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யும்போது குடையைப் பயன்படுத்தினார். அதிலிருந்து ஆண்கள் மத்தியிலும் குடை பிரபலம் அடைந்தது. முதலில் ஐரோப்பாவில் குடைகள் தயாரிக்க மரக்குச்சிகளும், எண்ணெய் பூசப்பட்ட கலர் கேன்வாஸ்களும் பயன்படுத்தப்பட்டன.

1830 - ல் லண்டனிலுள்ள நியூ ஆக்ஸ்போர்ட் தெருவில் ஜேம்ஸ் ஸ்மித் ஆன்ட் சன்ஸ் என்ற பெயரில் பெருமளவில் குடைகளை விற்பதற்காக கடை தொடங்கப்பட்டது.அதிலிருந்து பல நாடுகளிலும் குடை விற்பனை அதிகரித்தது

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...