Nov 28, 2013

மணிக்கு 2 லட்சம் கி.மீ வேகத்தில் சூரியனை நோக்கி பாய்ந்து செல்லும் 'ஐசான்

டெல்லி: சூரியனை நோக்கி நகர்ந்து வந்த ஐசான் வால் நட்சத்திரம் தற்போது சூரியனுக்கு மிக அருகே போய் விட்டது. மணிக்கு 2 லட்சம் கிலோமீட்டர் என்ற வேகத்தில் அது படு வேகமாக போய்க் கொண்டிருக்கிறது.
இந்த வால் நட்சத்திரம் சூரியனை நெருங்கும்போது மொத்தமாக பொசுங்கிப் பஸ்பமாகி விடும்.. அல்லது தப்பிப் பிழைத்து பூமியில் உள்ள மக்களுக்கு மேலும் சில காலம் வண்ணக் கோலத்தைக் காட்டி நிற்கும்.
நவம்பர் 28ம் தேதி வியாழக்கிழையன்று சூரியனை கடக்கவுள்ளதாம் ஐசான். தற்போது அது சூரியனின் பரப்புக்கு மேலே கிட்டத்தட்ட பத்து லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிற்கிறதாம்.

இன்று நள்ளிரவு 12.15 மணிக்கு சூரியனை நோக்கி பாயும் ஐசான்.. காணத் தவறாதீர்கள்



வாஷிங்டன்: உலகெங்கும் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் விரித்த கண்களுடன் வானை நோக்கி காத்திருக்கின்றனர். இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.15 மணிக்கு ஐசான் வால்நட்சத்திரம் சூரியனுக்கு வெகு அருகில் போகிறது.
உலகத்தில் உள்ள அத்தனை தொலைநோக்கிகளும், விண்ணியல் ஆர்வலர்களின் கண்களும் ஐசான் வால்நட்சத்திரத்தை நோக்கி திரும்பியுள்ளன. ஐசான் என்னாகப் போகிறது, சூரியனுக்கு அருகே அது போகும்போது என்ன நடக்கும் என்ற பேரார்வம் அத்தனை பேர் மனதிலும் அப்பிக் கிடக்கிறது.
படு வேகமாக சூரியனை நோக்கி போய்க் கொண்டிருக்கும் ஐசான் இன்று நள்ளிரவு சூரியனை மிக மிக அருகே நெருங்கப் போகிறது. அது தப்பிப் பிழைக்க வாய்ப்பில்லை, பொசுங்கிப் போய் விடும் என்று பொதுவான கருத்து இருந்தாலும் தப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் சிலர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Nov 26, 2013

மூன்று விஷயங்கள்.....

மூன்று விஷயங்கள்.....
1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை......
நேரம்
இறப்பு
வாடிக்கையளர்கள்

2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளை விரோதியாக்கும்.......
நகை
மனைவி
சொத்து

3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது.....
புத்தி
கல்வி
நற்பண்புகள்

4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்......
உண்மை
கடமை
இறப்பு

5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை....
வில்லிலிருந்து அம்பு
வாயிலிருந்து சொல்
உடலிலிருந்து உயிர்

6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்.......
தாய்
தந்தை
இளமை

7.மூன்று பொருள்கள் திரை மறைவுக்கு உகந்தது......
சொத்து
ஸ்திரி
உணவு

8.இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு.....
தாய்
தந்தை
குரு

மைக்ரோசாப்ட் தொழில் நுட்ப வளர்ச்சி





கம்ப்யூட்டர் பயன்பாட்டில் தன் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் முற்றிலும் புதிய வழிமுறை ஒன்றை மைக்ரோசாப்ட் அண்மையில் அறிமுகப்படுத்தியது. 

சிலருக்கு வழக்கமான விண்டோஸ் இயங்கு தளத்திலிருந்து வருவதற்குத் தயக்கம் இருந்தாலும், இப்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தின் செயல்முறைக்கு மாறி வருகின்றனர். 

என்னதான் மைக்ரோசாப்ட் மீது குற்றம் சாட்டினாலும், கம்ப்யூட்டர் பயன்பாட்டில், நம் வாழ்க்கை நடைமுறையின் ஏதாவது ஒரு விதத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் அல்லது வேறு ஏதேனும் ஒரு சாப்ட்வேர், பயன்பாட்டினத் தந்து கொண்டு தான் இருக்கிறது. 

உலகளாவிய இந்த வளர்ச்சியும் பயன்பாடும், வேறு எந்த ஒரு நிறுவனமும் மக்களுக்கு தந்ததில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தொழில் நுட்ப வளர்ச்சியினை இங்கு காணலாம். 

1975 ஆம் ஆண்டில், பால் ஆலன் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பில்

Aimersoft Music Recorder: Best Audio Recorder to Get Online Song | OFFICIAL

Aimersoft Music Recorder: Best Audio Recorder to Get Online Song | OFFICIAL

Nov 25, 2013

கம்ப்யூட்டருக்கான பாதுகாப்பான மின்சக்தி




இன்றைய உலகில் நாம் பல டிஜிட்டல் சாதனங்களையே நம்பி இருக்கிறோம். அவை இயங்காமல் போனால், உடனே நம் அன்றாடப் பணிகள் முடங்கிப் போகின்றன. 

இதனாலேயே இதற்கு மின் இணைப்பு தருவதிலும், அவற்றைச் சீராக வைத்துக் கொள்வதிலும் நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. 

நம் கம்ப்யூட்டருக்கான மின்சக்தி தரும் சாதனங்களை எப்படி, எந்த வகையில் அமைத்து இயக்க வேண்டும் என இங்கு காணலாம். அவற்றின் மூலம் கிடைக்கும் மின்சக்தியின் தன்மை குறித்தும் சில விவரங்களை இங்கு பார்ப்போம். 


ஸ்பைக்ஸ், சர்ஜஸ் என்பவை எதைக் குறிக்கின்றன?

டிஜிட்டல் சாதனங்களுக்கு வரும் மின்சாரம் சீராக இருக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட வழக்கமான வோல்டேஜ் அளவை விட்டு அதிகமாக இருந்தால் அது அதிக வோல்டேஜ் (Over Voltage) ஆகும். அதுபோல் வோல்டேஜ் அளவு குறைவாக வருவது குறைவான வோல்டேஜ்

Nov 24, 2013

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தனக்கென மாறா நிலையில் சில வரையறைகளைக் கொண்டதாகவே நாம் பெறுகிறோம். இவற்றில் சில நம் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருக்கலாம். 
அவற்றை இப்படி செய்து, நிலை நிறுத்தினால் என்ன? என்ற கேள்வியுடன், அதற்கான வழிகள் அதில் உள்ளனவா என்று ஆய்வு செய்வோம். ஒரு சில பொதுவான எதிர்பார்ப்புகளை எப்படி மேற்கொள்வது என கீழே செயல்முறைகள் காட்டப்பட்டுள்ளன.



ஸ்டார்ட் மெனுவில் உள்ள கேம்ஸ் நீக்க: 
உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்யப்படுகையில், இதனுடன் வரும் சில விளையாட்டுக்கள், ஸ்டார்ட் மெனுவில் சேர்க்கப்பட்டு, மாறா நிலையில் இருக்கும். 
இவை தேவைப்படாதவர்கள், "இது எதற்கு ஸ்டார்ட் மெனுவில்?' என்று கவலைப்படுவார்கள். கேம்ஸ் வேண்டுமென்றால், ஆல் புரோகிராம்ஸ் சென்று, தேவையானதைத் தேர்ந்தெடுத்து இயக்கலாமே! என்று எண்ணுவார்கள். எனவே ஸ்டார்ட் மெனுவில் இருந்து இவற்றை நீக்கும் வழிகளை இங்கு காணலாம்.
ஸ்டார்ட் மெனு சென்று சர்ச் பாக்ஸில் %AllUsersProfile%\Microsoft\Windows\StartMenu\ என டைப்

ஸ்மார்ட் போன்களில் சென்சார்கள்


திறன் செறிந்த ஸ்மார்ட் போன்களில், தற்போது அதிகம் புழக்கத்தில் இருப்பது, சென்சார் தொழில் நுட்பமாகும். இதனை உணர்வலை தொழில் நுட்பம் என அழைக்கின்றனர். 

வரும் ஆண்டுகளில், இந்த தொழில் நுட்பத்தில் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படப் போகின்றன. ஒரு சிக்னல் அல்லது தூண்டுதலைப் பெற்று, அதற்கேற்ற வகையில் இயங்குவதே சென்சார் தொழில் நுட்பமாகும். 

இது ரேடியோ அலையாகவோ, வெப்பமாகவோ, ஒளியாகவோ இருக்கலாம். தற்போது புழக்கத்தில் இருக்கும் பலவகையான சென்சார் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். 



1. தேவையான ஒளி உணர்வலை (ambient light sensor):
டேப்ளட் பி.சி., ஸ்மார்ட் போன்கள் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் இது பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் இயங்க்கும் பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க இது

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் ஜிமெயில் தளத்தில் பயனாளர்களுக்கான வசதி ஒன்று, சிலருக்கு சிக்கலைத் தருவதாக அமைந்துள்ளது. 

பொதுவாக மின்னஞ்சல் தளங்களில், புரோகிராம்களில், நாம் யாருக்கேனும் மின்னஞ்சல் அனுப்பினால், அவருக்கு நாம் பின்னாளிலும் அனுப்புவோம் என்ற அடிப்படையில், அந்த முகவரி பதிந்து வைக்கப்படுகிறது. 

அந்த முகவரியில் உள்ள எழுத்துக்களை, அடுத்த முறை டைப் செய்தவுடன், சார்ந்த முகவரிகள் ஒரு பாப் அப் விண்டோவில் காட்டப்படுகின்றன. 

முழுமையாக டைப் செய்திடாமல், நாம் குறிப்பிட்ட முகவரியைத் தேர்ந்தெடுத்து, கிளிக் அல்லது என்டர் செய்தால், முகவரி அமைக்கப்படும். ஒரு நாளில் பலருக்கு அலுவலக ரீதியாக மின்னஞ்சல் அனுப்புபவர்களுக்கு இந்த வசதி எரிச்சலூட்டும் உதவியாக உள்ளது. 

நாம் மீண்டும் அனுப்பும் சந்தர்ப்பம் இல்லாதவர்களின் முகவரியும் சேவ் செய்யப்பட்டுக் காட்டப்படுகிறது. இதனால், நாம் அனுப்ப விரும்பும் முகவரியினை பாப் அப் விண்டோவில், சற்றுத் தேடிக் கண்டறிய வேண்டியுள்ளது.


இவ்வாறு சேவ் செய்து வைத்திடும் வசதியினை நாம் ஜிமெயில் தளத்திலிருந்து எடுத்துவிடலாம்.

1. ஜிமெயில் செட்டிங்ஸ் (Gmail settings) செல்லவும். 

2. "Settings” திரை காட்டப்படுகையில், "General” என்ற டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லை எனில் அதனைக் கிளிக் செய்திடவும்.

3.இங்கு கீழாகச் சென்று, "Complete contacts for autocomplete” என்று இருப்பதனைக் காணவும். 

அங்குள்ள "I'll add contacts myself” என்ற ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். 

தொடர்ந்து "Save Changes” என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். அடுத்த முறை நீங்களாக சேவ் செய்திடாமல், எந்த மின்னஞ்சல் முகவரியும் அதற்கான பட்டியலில் இடம் பெறாது.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால்,

விலகி ஓடும் பி.பி., சுகர்..!

"காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது" என்று கேள்விப்பட்டிருப்போம்.

இப்படி தண்ணீர் குடிப்பது... பி.பி., சுகர், புற்றுநோய், காசநோய் என்று பலவற்றுக்கும் தீர்வு தருகிறது என்றால் ஆச்சரியமான விஷயம் தானே..!

இது ஜப்பான் மற்றும் சீனாவில் பிரபலமாக இருக்கிறதாம். அங்கே அறிவியல் பூர்வமாகவும் இந்த தண்ணீர் வைத்தியம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம்.

காலையில் பல் துலக்கும் முன் 160 மிலி அளவு டம்ளரில் நான்கு டம்ளர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும்.

பிறகு, பல் துலக்கிவிட்டு, 45 நிமிடத்துக்கு பிறகு தான் உணவோ... பானங்களோ சாப்பிட வேண்டும்.

உணவு எடுத்துக் கொண்ட பிறகு, 2 மணி நேரம் வரை வேறு உணவுளையோ... பானங்களையோ சாப்பிடக்கூடாது.

இந்த முறையைக் கையாண்டால்...

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை 30 நாட்களிலும், காசநோய் 90 நாட்களிலும், புற்றுநோய் 180 நாட்களிலும் குணமாகிவிடுமாம்.

இதே போல ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு கால அளவையும் வைத்துள்ளனர்..!

ஒன்று நிச்சயம்...

இந்த சிகிச்சை முறையால் பலன் கிடைக்கிறதோ இல்லையோ...

நிச்சயம் பக்க விளைவு இருக்காது. எனவே முயற்சித்துத்தான் பார்க்கலாமே....!

Nov 20, 2013

உங்களை தலைசுற்ற வைக்கும் பேஸ்புக்கின் நிஜமுகம்

இன்று வெப்சைட் உலகில் கூகுளுக்கு அடுத்த இடத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்துவது எது என்று கேட்டால் அது பேஸ்புக் தான்.
fb logo உங்களை தலைசுற்ற வைக்கும் பேஸ்புக்கின் நிஜமுகம்   அவசியம் படிக்கஒரு நாளைக்கு கூகுள் கூட போகாமல் இருந்திடுவோம் ஆனால் பேஸ்புக் போகாமல் மட்டும் நம்மால் இருந்துவிட முடியாது. அந்த அளவுக்கு பேஸ்புக் நம்மை அடிமைப்படுத்தி நமது முக்கிய தகவல்களை கொண்டுள்ளது எனலாம் அந்த பேஸ்புக் குறித்தும் நீங்கள் வியக்கும் வகையில் நிறைய தகவல்கள் உள்ளன. இந்த தகவல்களை நிச்சயம் நீங்கள் அறிந்திருக்க வாய்பில்லை. . . .
இந்த உலகில் உள்ள 10 ல் இருவருக்கு பேஸ்புக் அக்கவுன்ட் இருக்கிறது
இணையம் பயன்படுத்துவோரில் 80 சதவிகித மக்களுக்கு பேஸ்புக் அக்கவுன்ட் உள்ளது..
ஒரு நிமிடத்தில் இதில் 10 லட்சம் லிங்குகள் ஷேர் செய்யப்படுகின்றன

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...