Feb 16, 2014

இரண்டு இயங்குதளங்களைக் கொண்ட முதலாவது ஸ்மார்ட் கைப்பேசி





ஸ்மார்ட் கைப்பேசி உலகில் முதன் முறையாக இரண்டு இயங்குதளங்களைக் கொண்ட கைப்பேசியினை Geeksphone Revolution நிறுவனம் அறிமுகம் செய்கின்றது.இக்கைப்பேசியில் கூகுளின் Android இயங்குதளம் மற்றும் Mozilla Firefox இயங்குதளம் ஆகியன நிறுவப்பட்டுள்ளன.
இதன் மூலம் விரும்பிய இயங்குதளத்தில் குறித்த கைப்பேசியினை இயக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
இதில் Dual Core Intel Atom Z560 1.6GHz Processor, 1GB RAM மற்றும் 4GB சேமிப்பு நினைவகம் என்பன காணப்படுகின்றன.
மேலும் 4.7 அங்குல தொடுதிரையினை உடைய இக்கைப்பேசியில் 8 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெரா, 1.3 மெகாபிக்சல்களைக் கொண்ட வீடியோ அழைப்புக்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளது.
இம்மாதம் 20ம் திகதி வெளியிடப்படவுள்ள இக்கைப்பேசியின் பெறுமதியானது 289 யூரோக்கள் ஆகும்.

Windows 8 விற்பனையில் சிகரத்தை எட்டியது மைக்ரோசொப்ட்



மைக்ரோசொப்ட் நிறுவனம் மெட்ரோ பயனர் இடைமுகத்துடன் அறிமுகப்படுத்தியிருந்த Windows 8 இயங்குதளமானது தற்போது 200 மில்லியன் கொப்பிகள் விற்பனையாகியுள்ளன.
விண்டோஸ் 7 இயங்குதள விற்பனையை விடவும் மந்தமான வேகத்திலேயே விற்பனை இடம்பெற்ற போதிலும் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் 6 மாதங்களில் 100 மில்லியன் கொப்பிகளையும், அதன் பின்னரான 6 மாதங்களில் 100 மில்லியன் கொப்பிகளையும் விற்பனை செய்துள்ளது.
எனினும் விண்டோஸ் 7 இயங்குதளமானது ஒரு வருட காலப்பகுதியில் 240 மில்லியன் கொப்பிகள் விற்பனையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தற்போது எதிர்வரும் 2015ம் ஆண்டில் அறிமுகம் செய்வதற்காக விண்டோஸ் 9 இயங்குதள வடிவமைப்பில் மைக்ரோசொப்ட் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.
Microsoft’s Windows 8 Hits 200 Million Copies Sold
Microsoft have now sold more than 200 million copies of their new Windows 8 software, the company managed to sell 100 million copiers after the first six months.
Sales of Windows 8 have been slower than Windows 7, it took Microsoft just one year to sells 240 million copies of Windows 7, whilst it took the company over a years to sell 200 million copies of Windows 8.
Sales of Windows 8 after slower than that of Windows 7, this is apparently due to the slowdown in the PC market, and Microsoft’s tablets, which also come with Windows 8 have not been successful as the company had hoped.
It will be interesting to see how Windows 8 does over the next 12 months, Microsoft is working on Windows 9 at the moment, and this is rumored to launch in April of 2015.

Toshiba அறிமுகம் செய்யும் 5TB வன்றட்டு



Toshiba நிறுவனமானது முதன் முறையாக 5TB கொள்ளவுடைய வன்றட்டினை அறிமுகம் செய்யவுள்ளது.MG04 எனும் வியாபாரக் குறியீட்டுடன் அறிமுகம் செய்யப்படவுள்ள இச்சாதனமானது 3.5 அங்குல அளவுடையதாகவும், 5 பிளட்டர்களை (Platters) கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் மூலம் 175MiB/s இல் இருந்து 205MiB/s வரையான வேகத்தில் தரவுப்பரிமாற்றம் மேற்கொள்ள முடியும்.

இது தவிர 2TB, 3TB, 4TB எனும் சேமிப்ப கொள்ளவுடைய வன்றட்டுக்களையும் Toshiba அறிமுகம் செய்கின்றது.

Toshiba 5TB MG04 Air-Filled Drive Announced
This week Toshiba has unveiled a new addition to the range of 3.5-inch disk drives in the form of the MG04 drives that are available in either 6Gbit/s SAS or SATA versions that will be available later this month.
The Toshiba MG04 drives area available in either 2, 3, 4, and a massive 5TB storage capacity and have 5 platters – based on physical dimensions being unchanged from MG03 series.
Unlike the huge storage capacity of the HGST 6TB helium-filled Ultrastar hard drive the new Toshiba MG04 5TB drive is air-filled and can offer users sustained sequential streaming at 175MiB/s to 205MiB/s as capacity increases from 2TB to 5TB.
For more information on the new Toshiba MG04 5TB drive jump over to the Toshiba website for details. Unfortunately no information on pricing has been released as yet, but as soon as information comes to light we will keep you updated as always.

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை படித்துவிட்டாரா என்பதை அறிய!!


நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு அல்லது நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டு அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருப்பீர்கள்.குறைந்த பட்சம் அவர் உங்கள் மெயில் படித்து விட்டாரா? இல்லையா? என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா.
இதை அறிந்து கொள்ள spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது.
1. முதலில் எப்போதும் போல மின்னஞ்சல் டைப் அடித்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
2. இப்போது www.spypig.com இணைய தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு உங்கள் முகவரி மற்றும் உங்கள் நண்பர் முகவரி கொடுங்கள்.
3. முதல் படத்தைத்(வெற்றுப் படம்) தேர்ந்து எடுத்து, ”Clickto Activate my Spypig” என்பதைச் சொடுக்குங்கள்.
4. இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்து எடுத்த படம் காட்டப்படும். அதன் மீதுசுட்டியை வைத்து வலது பொத்தானை சொடுக்கி, “Copy Image (Firefox) & Copy(IE)” சொடுக்கி copy செய்யவும்.
5. இப்போது நீங்கள் டைப் செய்து வைத்த மின்னஞ்சலை திறந்து அந்த பக்கத்தின் அடியில் இந்த படத்தை ஒட்டி உடனே மின்னஞ்சலை அனுப்பி விடுங்கள்.
நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை அவர் திறந்த உடன் எந்த ஊரிலிருந்து படித்தார், எப்போது படித்தார் போன்ற தகவல்கள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்துவிடும்.

விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் புதிய கம்ப்யூட்டர்கள்


விண்டோஸ் 8 சிஸ்டம் அறிமுகப்படுத்தியவுடன், மைக்ரோசாப்ட் பழைய சிஸ்டங்களுடன் கம்ப்யூட்டர் வடிவமைப்பவர் களுக்கு, இறுதி நாளினை நிர்ணயம் செய்தது. 

அதற்குப் பின்னர், அந்நிறுவனங்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் தான், கம்ப்யூட்டர்களை விற்பனை செய்திட வேண்டும் என்பது ஒப்பந்தம். 

ஆனால், விண்டோஸ் 8 மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது. விண்டோஸ் 7 தொடர்ந்து கம்ப்யூட்டர்களில் மட்டுமின்றி மக்கள் மனதிலும் இடம் பெற்றது. 

ஆனால், தன் விண்டோஸ் 8.1 மூலம் சிக்கல்களை ஓரளவுக்குத் தீர்த்து வைத்த மைக்ரோசாப்ட், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான இறுதி நாளை அறிவித்தது. பின்னர், அதனை வாபஸ் பெற்றது. 

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான ஒப்பந்தம் மேற்கொண்டு, பெர்சனல் கம்ப்யூட்டர்களையும், லேப்டாப் கம்ப்யூட்டர்களையும் வடிவமைத்து விற்பனை செய்து வரும் ஹ்யூலட் பேக்கார்ட் (எச்.பி.) நிறுவனம், மக்கள் தொடர்ந்து விண்டோஸ் 7 சிஸ்டத்தினையே விரும்புவதால், மீண்டும் விண்டோஸ் 7 சிஸ்டம் பதிக்கப்பட்ட பெர்சனல் கம்ப்யூட்டர்களை வடிவமைத்து வழங்க முன் வந்து வழங்கியும் வருகிறது. 

""விரும்பும் மக்களுக்கு விண்டோஸ் 7 சிஸ்டம் வழங்குகிறோம். விண்டோஸ் 8 சிஸ்டத்தினை கைவிட்டு விடவில்லை. அதனைக் கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு, விண் 8 பதிந்து தருகிறோம்'' என அறிவித்துள்ளது. 

பெர்சனல் கம்ப்யூட்டர் சந்தையில் விற்பனை சரிந்து வருவதால், மைக்ரோசாப்ட் நிறுவனமும், இதனை மிகக் கண்டிப்புடன் கண்டு கொள்ளவில்லை. 

ஆனால், மீண்டும், விண்டோஸ் 7 சிஸ்டம் வழங்குவதை நிறுத்தச் சொல்லி, மைக்ரோசாப்ட் அறிவுறுத்தும் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

தேவையற்ற புரோகிராம்களைக் கண்டறிந்து நீக்க



நம் கம்ப்யூட்டரை வாங்கும் போதே, கம்ப்யூட்டரை வடிவமைத்துத் தரும் நிறுவனம், தான் விரும்பும் சில புரோகிராம்களைப் பதிந்து தருகிறது. காலப் போக்கில், நாமும் சில புரோகிராம்களைப் பதிகிறோம். 

அவை காலஞ் சென்ற பின்னரும், நாம் பயன்படுத்தாத போதும், அவற்றை நீக்காமல் வைத்திருக்கிறோம். சில புரோகிராம்கள், அப்போதைய சிஸ்டம் வடிவமைப்புடன் ஒத்துப் போகாதவையாக இருக்கலாம். இருப்பினும் அவற்றையும் தொடர்ந்து ஹார்ட் டிஸ்க்கில் இன்ஸ்டால் செய்து வைத்து இயக்காமல் வைத்திருக்கிறோம். 

இவற்றுடன் பல அட்வேர் எனப்படும் விளம்பர புரோகிராம்களும் இணைந்து விடுகின்றன. அதே போல நமக்குத் தேவையான ஒன்றை இன்ஸ்டால் செய்திடுகையில், தேவையில்லாத டூல்பார்களும், எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களும் சேர்ந்தே பதியப்படுகின்றன. இவற்றை நாம் அவ்வப்போது நீக்க வேண்டும்.

சரி, இவற்றைச் சுத்தம் செய்திடலாம் என்றால், எவற்றை நீக்குவது, எவற்றை வைத்துக்

Feb 15, 2014

.சீனாவில் ரூ.2லட்சத்து 22 ஆயிரம் கோடியில் உலகிலேயே மிக நீளமான சுரங்க ரயில் பாதை


பீஜிங் உலகிலேயே மிக நீளமாக நீருக்கு அடியில் சுரங்க ரயில் பாதையை சீனா ரூ.2 லட்சத்து 22 ஆயிரம் கோடியில் அமைக்க முடிவு செய்துள்ளது.சீனாவில் உள்ள போகாய் கடல் பகுதியில் லியாவ்னிங் மாகாணத்தில் உள்ள தாலியாங் நகரத்தில் இருந்து ஷான்டாங் மாகாணத்தில் யண்டாய் நகர் வரை நீருக்கு அடியில் உலகிலேயே மிக நீளமான சுரங்க ரயில் பாதையை அமைக்க சீன அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சீனாவின் சுரங்க ரயில் பாதை நிபுணர் வாங்மெங்சு கூறுகையில், Ô2012ம் ஆண்டு முதல் இந்த பாதையை அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான அனுமதி கிடைத்ததும் 2015 அல்லது 2016ல் பணிகள் தொடங்கும். கடலுக்கு அடியில் 123 கிமீ தூரத்துக்கு சுரங்க ரயில் பாதை அமைக்க சுமார் ரூ.2 லட்சத்து 22 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகிலேயே இதுதான் மிக நீளமான நீருக்கு அடியில் அமைக்கப்படும் சுரங்க ரயில் பாதையாக இருக்கும் என்றார்.ஏற்கனவே நீருக்கு அடியில் ஜப்பானின் ஷெய்கான் சுரங்க பாதையும், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள கடலுக்கு அடியிலான சுரங்க ரயில் பாதையும்தான் மிக நீளமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

ருத்ராட்சத்தின் உண்மை தன்மை


ருத்ராட்சத்தின் உண்மை தன்மை
ருத்ராட்சத்தின் சிறப்பு அதன் முகங்களேயாகும். இயற்கையாகவே அதன் மேற்பரப்பில், உருவாகும் நெடுக்கான கோடுகளே அதன் முகங்கள் எனப்படும். அவை ஒரு முகத்திலிருந்து, இருபத்தியோரு முகங்கள் வரையிலும் உள்ளன.

(அதற்கும் மேற்பட்ட முகங்கள் இருப்பதாகவும் பல தகவல்கள் உள்ளன) ஒரு இலந்தைப் பழத்தின் அளவில் இருப்பது மத்தியமான தரம் உள்ளதாகும். அதிலிருந்து அளவு கூடக்கூட அதன் தரமும் கூடும். அதிலிருந்து

Feb 12, 2014

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீவீரகத்தியானுக்கு அழகாக அமைக்கப்படவுள்ள ஏழுதள இராஜகோபுர அடிக்கல் நாட்டு வைபவத்தின் முழுமையான வீடியோப்பதிவு!



1620539_10202102396179603_1312105875_n

தீவகத்தில் பிரசித்தி பெற்ற,மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீவீரகத்தி விநாயகப் பெருமானுக்கு-அழகுற அமைக்கப்படவுள்ள-ஏழுதள இராஜகோபுரத்திற்கான   அடிக்கல் நாட்டும் வைபவம் 22-01-2014 புதன்கிழமை காலை மிகச்சிறப்பாக நடைபெற்றது நீங்கள் அறிந்ததே!
வடமாகாணத்தில் பிரபலமான  ஸ்தபதி சிற்பக சிந்தாமணி  அராலி நவரட்ணம் கங்கைரூபன் (ஆலய கட்டிட சுதை,கருங்கல் சிற்ப வர்ண ஒப்பந்தக்காரர்)அவர்களினால்  21 மாத கால ஒப்பந்த அடிப்படையில்

வியப்பைத் தரும் விண்டோஸ் 8


windows-8-logo 
மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த பதிப்பின் சோதனைத் தொகுப்பினை, சென்ற பிப்ரவரி 29 அன்று, நுகர்வோர்களுக்கு வெளியிட்டுள்ளது.
வெளியான முதல் நாளே, பத்து லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் இத்தொகுப்பு தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதனைப் பெற விரும்புபவர்கள் http://windows.microsoft.com/ enUS/windows8/download என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
தங்களிடம் உள்ள கம்ப்யூட்டரில் இந்த சோதனைப் பதிப்பினைப் பதிந்து இயக்க முடியுமா என்று அறிந்துகொள்ள விரும்புபவர் களுக்குப் பல இணைய தளங்கள் பதில் அளித்துள்ளன. அவற்றில் http://news.cnet.com/830110805_35738793375/canmypcrunthewindows8betatestbuild/என்ற முகவரியில் உள்ள தளத்தில் தெளிவாகத் தகவல்கள் உள்ளன.
சென்ற செப்டம்பரில், இந்த சிஸ்டத்தின் சோதனை பதிப்பு, விண்டோஸ்

தெருப்பார்வைக்கு வருகிறது தாஜ்மஹால!

!

உலக அதிசயங்களில் ஒன்றாக
விளங்கும் இந்தியாவின் தாஜ்மஹால்
விரைவில் கூகுள்
தெருப்பார்வைக்கு வருகிறது.

இனி வீட்டிலிருந்தே எந்த செலவும்
இல்லாமல் தாஜ்மஹாலை சுற்றிப்
பார்க்கலாம்.
கூகுள் மேப்பில் உள்ள தெருப்பார்வை
(Street View) வசதியைப்
பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்.
உலகத்தில் உள்ள பிரபல கட்டிடங்கள்,
பாரம்பரிய சின்னங்கள் மற்றும்
சாலைகளை 360 டிகிரி படங்களாக
நேரில் பார்ப்பது போன்ற வசதி.
தற்போது தாஜ்மஹால் உள்பட
இந்தியாவில் உள்ள நூறு பாரம்பரிய
புராதான
சின்னங்களை தெருப்பார்வைக்கு கொண்டு
வரப்போகிறது கூகுள். இதற்காக
இந்தியத் தொல்லியல்
ஆய்வகத்துடன் (Archaeological
Survey of India (ASI) )
இணைந்து செயல்பட்டுக்
கொண்டிருக்கிறது.

தாஜ்மஹாலை சுத்தி பார்க்க
தயாரா?

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...