May 11, 2012

தினமும் 2 கப் டீ குடித்தால் குழந்தை வாய்ப்பு அதிகரிப்பு: ஆய்வில் தகவல்



தினமும் 2 கப் டீ குடித்தால் குழந்தை பெறும் வாய்ப்பு அதிகரிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. லண்டன் போஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், குளிர் மற்றும் சூடான பானங்களை குடிப்பதால், மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகள் பற்றி புதிய ஆராய்ச்சி
ஒன்றை மேற்கொண்டனர்.

அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

சர்க்கரை குறைந்த அல்லது உணவு கட்டுப்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் பானங்களை தினமும் 2 கப் சாப்பிட்டால், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு குறைந்து விடும். அதே சமயம் சில பானங்கள் கர்ப்பம் தரிப்பதை தடை செய்கின்றன.

மற்ற காரணிகளுடன் கர்ப்பம் தரிக்க, டீ சதவிகிதம் வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது. உடல் நலத்துக்கு டீ பல வகையில் பலனளிக்கிறது. தினமும் 2 கப் சூடாக டீ குடித்தால் பெண்களுக்கு குழந்தை பேறு வாய்ப்பை அதிகரிக்கிறது.

அந்த வகை பானங்களை பெண்கள் தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு 20 சதவிகிதம் குறையும். அதே சமயம், காபி குடிப்பதால், எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

குழந்தை வேண்டும் என்று விரும்பும் பெண்கள் ரசாயன பொருள்கள் கலந்த மற்ற பானங்களை ஒதுக்கி தள்ளி விட்டு, டீயோ, காபியோ குடிப்பது நல்லது.
இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...